Friday, September 18, 2020

KRISHNA

  கஸ்தூரி திலகன் ....     J.K. SIVAN 


கிருஷ்ணா,  எதற்கு  நான் உன்னை  ஸ்லோகம், ஸ்தோத்ரம் எல்லாம்  சொல்லி பாடுகிறேன் தெரியுமா?

கிருஷ்ணன் சிரித்த்துக்கொண்டே   'நீ எதற்காக சொல்கிறாய் என்று உனக்கல்லவோ தெரியவேண்டும்.  உன் ஸ்லோகம் ஸ்தோத்ரம் எல்லாம் பெற்றுக்கொள்ளத்தான் எனக்கு தெரியும். இதைத் தவிர  ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக  தான் என்னை  நினைக்கிறார்கள் என்பதும் தெரியும்''

''வாஸ்தவம் கிருஷ்ணா,   நானே ரொம்ப காலம் உன்னை எனக்கு அதைக் கொடு  இதைக் கொடு என்று பிடுங்கிக்  கொண்டே இருந்தவன் தானே.    இப்படி  எத்தனையோ  கோடி மக்கள் உன்னை விடாமல் நச்சரித்துக் கொண்டே இருந்தால் யாரைத்தான் நீ கவனிப்பாய், எவர் குறையை தான் தீர்ப்பாய்?.''

''தப்பு. நீ நினைப்பது தவறு.  என்னை எவர், எப்போது, எங்கே, எதற்கு,  நினைத்தாலும் அது அத்தனையும்  எனக்கு ஒன்றே தான்.  காரணம் பார்த்து எனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் உதவ நான் என்ன   உன்னைப் போல மனிதனா?  

''அது சரி கிருஷ்ணா, உனக்கு தான்  வேண்டியவர்கள் வேண்டாதவர்கள், ஆண்  பெண் வித்யாசமே கிடையாதே.  ''

''ஒருவர்  சுயநலமாக  கேட்டாலோ, பொதுநலமாக கேட்டாலோ, எதுவாக  இருந்தாலும் நியாயமான  கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்''    அசுரர்கள் வரம் கேட்பது போல் கூட  சிலர் என்னை அணுகுவார்கள்.  புன்னகையோடு அதை ஏற்றுக் கொள்வேன். நிறைவேற்றுவேனா என்பது கோரிக்கையின் தன்மையை போறுத்தது.''

''கிருஷ்ணா,  நீ கேட்காமலேயே அருள்பவன் என்பதும் வாஸ்தவம் தானே.

''இதோபார், என்னைப்  புரிந்தவன் இந்த கேள்வியே கேட்க மாட்டான். என்னை ரட்சிக்கும் கடவுள் என்று நம்புவனை, நான் அவன் கேட்காமலே ரக்ஷிப்பவன் என்று அறிவான்.  அது என் கடமை .  எனக்கு எவ்வுயிரும் சமம். ஒரு தாய்க்கு  தன் குழந்தைகள் அனைவரும் ஒன்று தானே'' 

உங்களில்  ஒருவரான பாரதியார் பாடியது எனக்கு பிடித்தது.  ஒரு பூனைக்கு கருப்பு,  வெள்ளை, மஞ்சள்,பிரவுன், சாம்பல் நிறம் என்று பல குட்டிகள் இருந்தாலும் அவை அத்தனையும் அதன் குட்டிகள் தானே அவற்றில்  ஏது, எங்கே,  வித்தியாசம் என்று பாடியவர் அல்லவா  அவர்?.அவரை எனக்கு பிடித்து என் அருகே அவரை வைத்துக்கொண்டு அவர் பாடல்களை  கேட்டுக் கொண்டு வருகிறேனே.அதனால் தானே பூமியில் அவர் இருந்தபோது என் (பார்த்தசாரதி)கோவில் வாசலுக்கு எதிரேயே அவரை  இருக்க வைத்து தினமும் பார்த்தேன்.

என்னை வேண்டுபவர்கள் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்பதற்காக புகழ்ந்து ஸ்லோகம் ஸ்தோத்ரம் பாட  வேண்டாம். நேரமும் முயற்சியும் வீண்.   அவர்கள் வேண்டுவது என் காதில் விழாது. ஸ்லோகம் ஸ்தோத்ரம் மட்டும் தான் விழும்''

இன்னும் சொல்கிறேன் கேள்  என்றான் கிருஷ்ணன்: 
''நான் தேடுவது உங்கள் மனதை, அதில் ஈரம் இருக்கிறதா, பிற உயிர்கள், என் குழந்தைகள் மீது,  பற்று, பாசம்,நேசம், அன்பு கருணை இருக்கிறதா?. அவர்கள் நலம் பற்றி  நீ நினைக்கிறாயா?. அவர்களுக்காக பரிந்து பேச என்னை அணுகமாட்டாயா?''    என்று தான் ஏங்குகிறேன். அப்படியும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை  எனக்குப்  பிடிக்கும். நான் அவர்கள் அடிமையாக அவர்கள் ஏவலுக்கு  காத்திருக்கிறேன். புரிந்து கொள் .  இதை முடிந்தால்   நீ  நாலு பேரிடம் சொல்''    கிருஷ்ணன் நீளமாகவே அல்லவா பேசிவிட்டான்..

''நன்றி கிருஷ்ணா, என் கண்ணைத் திறந்த கண்ணா,  உனக்கு பொருத்தமாக தான் பேர் அமைந்திருக்கிறது.  இதோ இந்த   குட்டி ஸ்லோகம் உன்னை  வர்ணிக்கிறதே  அது  எனக்கு பிடித்துள்ளது.  அதை குழந்தைகளுக்கு  மனம் இனிக்க உன்னை உன் கருணையை மட்டும் எல்லோரும் பெற  பாட சொல்லித்தருகிறேன்.

நண்பர்களே, நீங்களும் உங்கள் குழந்தைகள்,  பேத்திகளுக்கு  இதை  சொல்லிக் கொடுத்து அவர்கள் பாட நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

कस्तूरीतिलकं ललाटपटले वक्षःस्थले कौस्तुभं                                      
 नासाग्रे नवमौक्तिकं करतले वेणुं करे कङ्कणम् ।
सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिं
गोपस्त्री परिवेष्टितो विजयते गोपाल चूडामणिः ॥

Kasturi tilakam lalaata palake
vakshasthale kaustubham

Nasaagre navamouktikam
karatale venum kare kankanam

Sarvaange harichandanancha kalayam kanthe cha muktaavali
Gopastree pariveshtitho
vijayate gopaala choodamanee

கஸ்தூரி திலகம் லலாட பலகே  வக்ஷஸ்தலே கௌஸ்துபம்
நாசாக்ரெ நவ மௌத்கிகம்  கரதலே  வேணும் கரே கங்கணம்
சர்வாங்கே  ஹரி சந்தனம் சா கலயம் கண்டேச முக்தாவளி
கோபஸ்த்ரீ பரிவேஷ்டி தொ விஜயதே  கோபால சூடாமணீ
   
''ஏ கிருஷ்ணா, எத்தனை அழகு உனக்கு இயற்கையாகவே. அந்த அழகுக்கு அழகூட்ட மேன்மேலும் ஆபரணங்கள் அலங்காரங்கள்  கண்ணைப் பறிக்கிறது. உன் விசால நெற்றியில் கஸ்தூரியில் திலகம். மார்பில் தொங்க தொங்க  கௌஸ்துப ஹாரம். உன் மூக்கை கூட விடவில்லை யசோதையும்  கோபியரும். அதில் தொங்குகிறது என்ன என்று பார்த்து விட்டேனே. வெள்ளை வெளேரென உன் கருப்பு முகத்துக்கு எடுப்பாக வெண்முத்து.  உன் அழகிய கரங்கள்  வெகு நேர்த்தியாக  உன்  இடையில் இல்லாத  போதெல்லாம்  இடைவிடாமல்  உன் பவள இதழ்களை வருடும்  புல்லாங்குழலை லாகவமாக  பிடித்துக்கொண்டிருக்கிறதே. அந்த கைகளிலும் நவரத்ன  கேயூரம்,கங்கணம் எல்லாம் ஒளி வீசுகிறதே.  உடல் முழுதும்  தொலை தூரம் நீ இருந்தாலும் கமகமக்கும் அரைத்த சந்தனம் மணக்கிறதே.முத்து மாலைகள், வரிசை வரிசையாக உன் கழுத்தே தெரியாமல்  மார்பு வரை ஜொலிக்கிறதே.  

அடாடா , கிருஷ்ணா, நீ எங்கிருந்தாலும் தனித்து  நன்றாக தெளிவாக திரிகிறாய். கோபியர்களுக்கு இடையே  இருந்தாலும் ஒரு நவரத்தின மாலையின் பதக்கமாக இருக்கிறாய், என் கண்ணா.  என் கண்ணே பட்டுவிடும் உனக்கு.   துவாரகை கிருஷ்ணன் படம் இணைத்திருக்கிறேன். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...