கீதாஞ்சலி 53 J K SIVAN
தாகூர்
53. நந்தகமே ஆனந்தம்
53. Beautiful is thy wristlet, decked with stars and cunningly wrought in myriad-coloured jewels.
But more beautiful to me thy sword with its curve of lightning like the outspread wings of the divine bird of Vishnu,
perfectly poised in the angry red light of the sunset.
It quivers like the one last response of life in ecstasy of pain at the final stroke of death;
it shines like the pure flame of being burning up earthly sense with one fierce flash.
Beautiful is thy wristlet, decked with starry gems;
but thy sword, O lord of thunder, is wrought with uttermost beauty, terrible to behold or think of.
கண்ணா, உன் மணிக்கட்டில் அணிந்தி ருக்கும் காப்பு, வர்ணஜாலங்களை கொப்புளிக்கும் ஒளிவீசும் கற்கள் பதித்ததாக இருக்கிறதே. அழகான நக்ஷத்ரங்களா அவை? உன் அழகுக்கு அழகூட்டுகிறதே.
ஆனால் எனக்கென்னவோ உன் வாள் ஒன்றே மனதை மயக்குகிறது. ஆஹா என்ன அழகான வளைவு அதன் நுனியில், கூர்மை, தீட்டப்பட்ட அதன் முனை மின்னல் போலவோ கண்ணை குருடாக்குகிறது. மஹா விஷ்ணுவின் கருடன் ரெக்கை விரித்து பறக்கும்போது தோன்றும் அதே அழகு. இந்த மாலை வெயில், பொன்னி றத்தில், எல்லாமே தங்கமாக முலாம் பூசப்பட் டிருக்கிறதே, அப்போது உன் வாளின் ஒளி அந்தி வான கோபசிவப்புக்கு ஈடு.
மரண காலத்தில் வலியில் வாழ்க்கை முடியும் முன்னே, உயிர் நீங்குமுன் உடல் ஊசலாடி நடுங்குமே அது போல் அல்லவோ உன் கூரிய வாள் முனை துடிக்கிறது. அக்னி பிழம்பு போல் உலக பந்தத்தை ஒரு மின்னல் வெட்டாக எரிக்கும் சக்தி வாய்ந்தது.
No comments:
Post a Comment