Friday, September 18, 2020

GEETHANJALI

 

கீதாஞ்சலி 49

தாகூர் 

                                      49.  நான் பாடியது ஒரு பாட்டா ?

49.  You came down from your throne and stood at my cottage door.
I was singing all alone in a corner, and the melody caught your ear.
 You came down and stood at my cottage door.
Masters are many in your hall, and songs are sung there at all hours. 
But the simple carol of this novice struck at your love. 
One plaintive little strain mingled with the great music of the world, 
and with a flower for a prize you came down and stopped at my cottage door

                                          
மஹா மேதாவி தாகூர். அவருடைய கீதாஞ்சலி   அழகிய வார்த்தை மாலைகளில் தொடுக்கப்பட்ட அற்புத பக்தி  மலர்க்  கொத்து. 

கிருஷ்ணா, எங்கோ தூரத்தில் இருக்கும் துவாரகை  அரண்மனையில் சிம்ஹாஸசனத்தில் இருந்த உன் காதில் என் கானம் விழுந்து தானே  நீ என் குடிசையின் வாசல் கதவை திறந்து வந்திருக்கிறாய்.    என் பாட்டு எந்த பெரிய சபையிலும் பக்க வாத்யத்தோடும்  நடக்கவில்லை. என் குடிசையில், ஓரு மூலையில் அமர்ந்து கை தட்டி பாடினேன்.  அது தான் என்  வாத்யம்.  பாடும்போது என்னை மறந்துவிட்டேன். ஓஹோ, என் பாட்டு பிடித்து நீ இங்கே வந்தாயா. சிரிக்கிறாயே! என் பாட்டின் இனிமையிலா? அல்லது அட இதுவும் ஒரு பாட்டு என்றா? இவன் பாடுகிறானா   இல்லை ஏதோ உடம்பு வலியில் கத்தினானா என்று பார்க்கவா? 

எப்படி இருந்தால் என்ன கிருஷ்ணா, நான் பாடியதும் நீ வந்திருப்பதும் ஏதோ சந்தர்ப்பவசத்தால் என்றாலும் இருந்து விட்டுப்போகட்டும். உன் அரண்மனையில் நீ கேட்காத பாட்டா? சங்கீத ஜாம்பவான்கள், மஹா வித்துவான்கள், வைணீகர்கள் வாத்திய கோஷ்டிகள், சதா சர்வகாலமும் உன்னை புகழ்ந்து பாடுவார்களே அதெல்லாம் எனக்கு தெரியாதா?

''வா க்ரிஷ்ணய்யா வா'' என்று இந்த கத்துக்குட்டி ஆசையாக, பாசமாக, மனதில் உன் நினைவு பூரா நிரம்ப அழைத்தேன், கத்தினேன். நீ வந்துவிட்டாயே .

உன் கருணையை நான் எப்படி சொல்வேன்? . எப்படி நன்றியை உணர்த்துவேன்? என் மனத்துயர் நீங்க உருகி, உருகி, உன்னை நினைந்து நான் பாடியது ஒரு பாட்டா ? 

என் கண்ணில்  ஒரு காட்டுப்பூ  பட்டது.  அதை எடுத்து உன் படத்தில் மேல் போட்டு உன்னை நினைத்து பாடினதற்கு இவ்வளவு பெரிய பரிசா.... நீயாகவே வந்தாயே. என் குடிசை வாசல் கதவு க்ரீச்ச் என்று சத்தமிட அதை திறந்து உள்ளே தலை இடி படாமல் குனிந்து வந்து என் எதிரே நிற்கிறாயே கண்ணா '' 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...