Wednesday, September 2, 2020

THE DIVINE HOUSE


 

ஒரு தெய்வீக கற்பனை வீடு   J K  SIVAN 


வீடு கட்டும் மேஸ்திரி கனமான கல்சுவர் அஸ்திவாரமாக அமைத்து,  அதை சுற்றி  தாய்ச்சுவர்கள் பலமாக கட்டி இடையே வலு குறைந்த  குறுக்கு  சுவர்களை அமைக்கிறார்.  தாய்ச்சுவர்  அஸ்திவாரம் தாம் முழு சுமையும் தாங்குகிறது. அப்புறம் தரையை வலித்து , நீர் வழிந்து போகும்படியாகச் செய்து, ,சுவர்களுக்கு  வர்ணம், கண்ணாடி, கதவுகள் ஜன்னல்கள் அமைத்து, பளபளவென்று வீடு ஜொலிக்கும்படியாக செய்கிறார்.  அவர் கட்டும் வீடு  நகராது, ஆடாது பாடாது, பேசாது, ஓடாது.  
ஆனால் பிரம்மதேவன்  இன்னும் சிறந்த கை வேலை தெரிந்த மேஸ்திரி.  நமது தேகத்தை,   இயற்கையால் உண்டான சக்திகளைக் கொண்டு  ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு மாடலாக கட்டி இருக்கிறான்.  வெய்ட் தாங்கும் பெரிய கற்கள் தான் கை கால்கள். உள்ளே  உள்ள தசை நார்கள் தான்  கம்பி வேலை . உள்ளே சதை கொழுப்பு தான் செங்கல்.  தோல் தான் சுண்ணாம்பு சிமெண்ட்.  தோலின் கருப்பு வெளுப்பு, நிறங்கள் தான் வர்ண சமாச்சாரம்.  எவ்வவளவு அற்புதமான  இன்ஜினீயர் ப்ரம்மா.  எலும்புகளை நரம்புகளோடு இணைத்து இருகக் கட்டி இருக்கிறான்.  எலெக்ட்ரிக் லைன்.    எலும்பு மூட்டுகளுக்கு உள்ளே அசையும்படி  கதவு கீல்களுக்கு  கிரீஸ் grease  மாதிரி செய்திருக்கிறான்.   ஆட்டோமேட்டிக் திறந்து மூடும் கதவுகள்  போல.  சதைகளை ரொப்பி  வயிறு, முகம், மார்பு தலை  என்று  ஒவ்வொரு மனிதனும் வேறே வேறே மாதிரி ஒரு உருவம். வீடுகள் பல டிசைன்களில்  பார்த்து ரசிக்கும்  தினுசுகளில் இல்லையா. 
உள்ளே  வசதியாக  இருக்கிறதோ இல்லையோ, வீட்டின் வெளி உருவத்தை கண்டு நாம் பிரமிக்கிறோம். அது போல் மனிதர்களை  இவன் அழகன், உயரமானவன், தலை முடி அலங்காரம், நடை,  குரல் என்று பார்ப்போர் பிரமிக்க வைத்திருக்கிறான்.  அழியும் உடலுக்கு அழகு போர்வை. 
இதில் விசேஷம் என்னவென்றால்  வீடு குட்டி போடாது, நகராது பேசாது பாடாது மேலே சொன்னது போல் இதெல்லாம்  உபரியாக மனிதனைப் படைத்திருக்கிறான்.  மேலே  பல  ரூம்களை, இணைப்பது போல், தேகத்துக்கு  பல பிறப்புகள் இறப்புகள்,  

மேஸ்திரி தான் காட்டிய வீடுகளில் வசிக்க  முடியாது.  மனிதனின் இதயத்தை, மனதை  தன்னுடைய  இருப்பிடமாக  இந்த  கட்டிட  மேஸ்திரி  பகவான் வைத்துக் கொள் கிறான்.  ஒரு ராஜ்யமே உள்ளே நடத்து கிறான்.   உள்ளே  நிற்காது ஓடும்  மின் விசிறி  தான்  ஆத்மா.  புத்தி தான்  ஆத்மாவின் மந்திரி.   மனம்  சேனாதிபதி.  பத்து  இந்திரி யங்கள்  ஞானேந்திரியம் கர்மேந்திரி யங்கள்  தான் படை வீரர்கள், அல்லது வேலையாட்கள்.  கண்கள்  தான் இந்த மாளிகையின் ஜன்னல்.  வாய் இருக்கிறதே அது தான் வெளி வாசல்.   காது கண்கள்  பால்கனி. வெளி விஷயங்களை உள்ளே கொண்டு வருபவை. நரம்புகள்  தான் மின் இணைப்பு கம்பிகள். மூளை  தான்  வாசல் செக்யூரிட்டி.  வருவது போவது எல்லாம் கண்காணிப்பது.  பிராணன் தான்  மின்சாரம். மெயின்டனன்ஸ், பவர்கட்  கிடையாது. நின்றால் ஒரேயடியாக  நிற்பது. 

இந்த வீட்டைப்பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வீட்டில் இருப்பவனைபற்றி ஒரு விஷயம் சொல்லி முடிக்கிறேன். 

இந்த   கிருஷ்ண  மேஸ்திரி  நமக்கு கட்டி தந்த இந்தவீட்டில் நம்மைக் கேட்காமலேயே தானும் இருப்பவன் . அதை நிர்வாகம் பண்ணுபவன்.  அவனைப் பார்க்க முடியாதபடி  உள்ளே ஒளிந்துகொண்டு விளையாடுபவன். குழந்தைகள் போல் நாம்  ஓடிப்பிடித்து அவனை தொட்டு ''அவுட்'' ஆக்க முயற்சித்துக் கொண்டே இருந்தால் அவன் பிடிபடுவான்.

அதற்கும் அவன் அனுமதிவேண்டும் அதைத் தான்  அருள் என்கிறோம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...