அத்வைதம் இது தான்
இன்று ஒன்றிரண்டு அசாத்தியமான சிவ வாக்கியம் படிப்போம்:
''என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே''
''என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே''
மேலே கண்ட பாடல் உள்ளே ஆழமாக போக சிரமப்பட தேவையில்லை. .மேலெழுந்த வாரியாக பார்த்தாலே அர்த்தம் புரியும்.
என்னுள்ளே உள்ள அவனை --'' உள்'' ளே ''கட ' க்கும் கடவுள்' என்னிலேயே இருப்பதை இன்னிக்கு காலை வரையில் மூடன் நான் அறிய வில்லை. என்னுள்ளே அவன் இருக்கிறான் என்று எப்போது புரிந்ததோ, தெரிந்ததோ, எப்போது என்னால் அவனை உணரமுடியுமோ, அதை உணர்ந்து கொண்டேனோ, அவனைப் புரிந்து கொண்டேனோ, ஆஹா, நான் அப்போதே அவனோடு உள்ளே கலந்து ஐக்யமாகி விட்டேன் சார். என்ன சந்தோஷம் ! மனசு பூரா அவன் கிட்டேயே. மனசு அவனை விட்டு வெளியே வரமாட்டேங்குது, சார் ''.
என்னுள்ளே உள்ள அவனை --'' உள்'' ளே ''கட ' க்கும் கடவுள்' என்னிலேயே இருப்பதை இன்னிக்கு காலை வரையில் மூடன் நான் அறிய வில்லை. என்னுள்ளே அவன் இருக்கிறான் என்று எப்போது புரிந்ததோ, தெரிந்ததோ, எப்போது என்னால் அவனை உணரமுடியுமோ, அதை உணர்ந்து கொண்டேனோ, அவனைப் புரிந்து கொண்டேனோ, ஆஹா, நான் அப்போதே அவனோடு உள்ளே கலந்து ஐக்யமாகி விட்டேன் சார். என்ன சந்தோஷம் ! மனசு பூரா அவன் கிட்டேயே. மனசு அவனை விட்டு வெளியே வரமாட்டேங்குது, சார் ''.
என் மனத்தில் அந்த பகவான் இருப்பதை நான் இத்தனை காலம் உணராமலேயே இருந்விட்டேனே. இந்த பிறவியில் மட்டும் அல்ல. எனது எத்தனயோ பிறவியிலும் கூட இது தான் என் நிலைமையோ? இப்போது தெளிவு பிறந்துவிட்டது. நான் என்று சொல்லும் இந்த தேகம் நானில்லை. என் உள்ளே இருக்கும் ஆத்மா வேறு யாரும் இல்லை. சிவனே தான். உங்களுக்குள்ளே அவனை இதுவரை யாராவது கண்டிருக்கிறீர்களா? என்னை விடுங்கள். உங்களில் ஒருவராவது உங்களுக்குள்ளே அவனைக் கண்டதுண்டா? அப்படி மட்டும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே தானாக நின்ற, நிற்கும் அவனை அறிந்துகொண்டால் ......... என்னால் யோசித்துக்கூட பார்க்கமுடியாத கற்பனை இன்பம், ஆனந்தம் அல்லவோ இது.
நமது ஹிந்து பாரம்பரியத்தில் சிவ வாக்கியர் ஒரு பெரிய மைல் கல்.ஆன்மீக தத்வங்களை அப்படியே புட்டு புட்டு சுருக்கமாக வைத்து அழகிய தமிழில் எளிமையாக சந்தமாக அளிப்பவர்.அவர் பாடல்களின் சந்தம்திரு மூலருடையது மாதிரியே இருக்குமே. ரெண்டுமே ரெண்டு கண்கள்.
சிவவாக்கியர் ஒரு சிறந்த சித்தர்.அவர் சித்தம் சிவன் போக்குப் படியே தான் செல்லும். ஆழ்ந்த அத்வைத அநுபூதி நிறைந்தது.
''முதலியார்வாள் ,நேரமாகிறது அல்லவா. இன்னும் ஒன்றே ஒன்றோடு நிறுத்திக்கொள்கிறேன்.'' என்றபோது மார்க்கண்டேய முதலியாருக்கு நான் இன்னும் சொல்லவேண்டும் என்று ஆசை. நேரமாகிறதே.
இது எல்லோரும் அறிந்த துணிச்சலான பாடல் .படிப்பவர் எடுத்துக்கொள்ளும்பாங்கிற்கு உட்பட்டது. மறுபடியும் அழுத்தி உரக்க சொல்கிறேன். சிவவாக்கியர் நாத்திகர் அல்ல. உயர்ந்த அத்வைத சாஸ்திரம் அருவத்தை உருவத்தில் (மட்டும்) தேடாதே என்று அறிவுறுத்தும் வகையை சேர்ந்தது.
''நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொண வென்று சொல்லு மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?''
இதற்கு அர்த்தம் தேவையில்லை. கல்லிலானான சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, நிறைய புஷ்பம் சார்த்தி, மொணமொணவென்று ஏதேதோ மந்திரம் எல்லாம் சொல்லுகிறாயே தம்பி, அது பேசுமா? அதே
நேரத்தில் கொஞ்சம் யோசி. உன்னுள்ளே சதா சர்வகாலமும் இருந்து கொண்டு அந்தராத்மா என்று பெயர் சொல்லுகிறாயே, அது இருப்பதை கவனத்தில் வைத்த்ததுண்டா ? அது பேசுமய்யா, கொள்ளை பேச்சு பேசும்!! இருப்பதை விட்டு இல்லாததை ஏன் தேடுகிறா ய்.
(உயர்ந்த ஞானிகளுக்கு உருவ வழிபாடு தேவையில்லையே. நம்மைப் போன்றவர்களுக்கு தானே அவசி யம். மேல் படிப்பு படிப்பவனுக்கு அரிச் சுவடி, வாய்ப்பாடு எதற்கு.?)
மனது உண்மையறியாது, உழல்வது எதற்கு சமம் என்று ஒரு அழகி ய உதாரணம் வேறு சொல்கிறார் சிவ வாக் கியர்.கம கம வென்று நெய் மணக்க பாதா ம்அல்வா கிண்டு கிறாயே, எவர் சில்வர் கரண்டி உள்ளே சுருண்டு வரும் அல்வாவை விடாமல் நன்றாக கிளறுகிறதே. துளியா வது அந்த கரண்டிக்கு ஹல்வாவின் சுவை , அருமை, தெரிகிறதா? அது போல் தான் மனத் தை பிளந்து உள்ளே புகாத, அவனை அறியாத உன் பூஜை?
ரொம்ப திருப்தி சிவன் ஸார். மீண்டு ம் வருகிறேன்.உங்களோடு நிறைய பேசவே ண்டும். தெரிந்து கொள்ள
மனது உண்மையறியாது, உழல்வது எதற்கு சமம் என்று ஒரு அழகி
ரொம்ப திருப்தி சிவன் ஸார். மீண்டு
வேண்டும். முதலியார் விடைபெற்றார்.
No comments:
Post a Comment