பசியும் நீரும் J K SIVAN
பொழுது விடிந்தால் எங்கும் பசி பற்றியே செய்தி. இந்த பசி ஏதோ ஒரு பட்டினி, பஞ்சத்தை பற்றி அல்ல. ஒரு பொருளாதார நிபுணர். இந்தியாவி
ன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாம். எப்போதுமே பொருள் தேடி அதையே ஆதாரமாக கொண்டு வாழ்ந்த வாழ்வில் ''சேர்த்த பொருளை சிக்கனமா செலவு செய்ய பக்குவமா அம்மா அம்மா கையிலே கொடுக்காம யார் யாரோ அய்யாக்கள் கணக்கில் எங்கெங்கோ போட்டுவிட்டு தடுமாறுவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த பசி அப்படிப்பட்ட கெட்டிக்கார பொருளாதார நிபுணர். அவர் சொத்து சேர்த்த விவரமோ அவற்றின் மதிப்போ, அவர் அவ்வளவு சொத்து சுதந்திரங்கள் மாளிகைகள் இருந்தும் எங்கோ சிறையில் கொசுக்கடியால் கஷ்டப்படுவதையோ, என்ன சாப்பிட்டார் என்பது பற்றியோ இனி எனக்கு தெரிந்து நான் போகும் வழிக்கு அது உபயோகப்படப் போவதில்லை.
ன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாம். எப்போதுமே பொருள் தேடி அதையே ஆதாரமாக கொண்டு வாழ்ந்த வாழ்வில் ''சேர்த்த பொருளை சிக்கனமா செலவு செய்ய பக்குவமா அம்மா அம்மா கையிலே கொடுக்காம யார் யாரோ அய்யாக்கள் கணக்கில் எங்கெங்கோ போட்டுவிட்டு தடுமாறுவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த பசி அப்படிப்பட்ட கெட்டிக்கார பொருளாதார நிபுணர். அவர் சொத்து சேர்த்த விவரமோ அவற்றின் மதிப்போ, அவர் அவ்வளவு சொத்து சுதந்திரங்கள் மாளிகைகள் இருந்தும் எங்கோ சிறையில் கொசுக்கடியால் கஷ்டப்படுவதையோ, என்ன சாப்பிட்டார் என்பது பற்றியோ இனி எனக்கு தெரிந்து நான் போகும் வழிக்கு அது உபயோகப்படப் போவதில்லை.
உப்பு தின்னவன் தண்ணி குடிப்பது பழைய வாக்கு எல்லோருக்கும் தெரிந்தது.
தண்ணீர் என்றதும் இப்போதைய பத்திரிகை, டிவி செயதி மற்றும் யூ ட்யூப் எல்லாமே ஏகோபித்து மனம் திருப்தியளிக்கும் காட்சிகளை காட்டுவது செயதிகளை
சொல்வது எழுதுவது என்னவென்றால் இன்றைய நிலையில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. மேட்டூர் அணைக்கட்டு பொங்கி வழிகிறதாம். எல்லா நீர் நிலைகளும் சமர்த்தியாக நீர் சேர்த்த்துவைத்திருக்கிறதாம். ரொம்ப சந்தோஷம்.
இப்போது நாம் இருப்பது ஆகஸ்ட். அடுத்த கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயிலில் மே ஜூன் ஜூலை தண்ணீர் வறட்சி மீண்டும் வராமல் இருக்க இப்போதே சேமிக்க வேண்டும்.
இனியாவது ஆற்றை ஏரியை குளத்தை விழுங்கி கான்க்ரீட் அடுக்கு மாடி கட்டிடங்கள் நமக்கினி வேண்டாம். மணல் திருடி நீரில்லாமல் வீடு கட்டி வாழ்ந்து என்ன பயன். தவறு செய்த சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாராமல் பாரபக்ஷமின்றி தண்டனை கடுமையாக பெறவேண்டும். பயம் தப்பு செய்ய தூண்டாது.
இன்னுமொரு முக்கிய விஷயம். தண்ணீர் வீடுகளில் சேமிக்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாடு வரவேற்க தக்கது. மழைநீர் அதிகமாக வீணாக கடலில் கலக்கவேண்டாம். போதிய அளவுக்கு மழைநீர் சேமிப்பு ஒவ்வொரு இல்லத்திலும் பூமிக்குள் செல்லட்டும். மரங்களை செடிகொடிகளை வளர்த்தால் தான் மழையே வரும். மரம் வளர்ப்போம். மழை பெறுவோம். மகிழ்வோம்.
இந்திய சமுத்திரத்தின் நடுவே சிறு சிறு தீவுகளாக மாலத்தீவுகள். அவற்றின் தலைநகர் தீவில் நான் பல வருஷங்கள் இருந்த போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மழைநீர் சேகரித்து உப்புநீர் மலிந்த நடுக்கடல் பிரதேசத்தில்
குடிநீர் தட்டுப்பாடு கொஞ்சமும் இல்லாமல் வாழ்கிறார்கள், அவர்களோடு நானும் வாழ்ந்
தேன் என்று நினைத்து மகிழ்கிறேன்.
கஞ்சியானாலும் காய்ச்சி குடி என்று நமது முன்னோர்கள் டாக்ட்டருக்கு படிக்காமலேயே சொன்னார்கள். எந்த நீரையும் வடிகட்டி காய்ச்சிவிட்டு குடிப்போம். வெந்நீர் குடிப்பது எவ்வளவு சுகம், நல்லது என்று நான் அனுபவத்
தில் கண்ட உண்மை.
தினமும் காலை வெறும் வயிற்றில் ஒன்று இரண்டு லோட்டா தண்ணீர் உள்ளே சென்றால் அது பரம ஒளஷதம். நாம் மூச்சு விட தேவையான ப்ரணவாயுவுக்கு அடுத்து உயிர் வாழ நமக்கு அவசியமானது தண்ணீர்.
யாருக்காவது தெரியாமலிருந்தால் ஒரு நல்ல விஷயம். தண்ணீரை செம்பு குடங்களில், தாமிர பாத்திரங்களில் சேமித்து வைத்து தாமிர டம்பளர்களில் குடிக்கவும்.
முன்னோர்கள் பஞ்சபாத்ரங்களை எதற்கு தாமிரத்தில் வைத்திருந்தார்கள், அதில் சிறிது நீரை தினமும் மூன்று வேளை சந்தியாவந் தனம் காயத்ரி மந்திரம் சொல்லும்போது ஆசமனம் செய்தவர்கள் என்று இப்போது புரியலாம்.
மனித உடலுக்கு தாமிரம் இன்றியமையாதது. கிருமி நாசினி, நோய் கொல்லி. ஆயுர்வேதம் தாமிரத்தில் பருகிய நீர் தோஷங்களை நீக்குகிறது என்கிறது.கபம் வாதம் பித்தம் என்ற மூன்று தான் மனிதனை கொல்வன . தாமிரம் அதை தவிர்க்க உதவுகிறது. தாமிர சொம்பு , தவலை யில் ராத்திரி ரொப்பிவைத்த நீரை மறுநாள் குடிக்கும்போது தாமிர சத்து நீரில் இறங்கி நமது உடலுக்குள் சென்று நன்மை அளிக்கிறது. தாமிர நீர் வயிற்றை குடல்களைக் கழுவி சுத்திகரிக்கிறது. தாமிரம் ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. கண் நிறம், முடி, உடல் சருமம் அனைத்தையும் தாமிரம் நன்றாக பராமரித்து ஒளி கூட்டுகிறது. உடலில் இரும்பு சத்து கூடுவதற்கு உதவுகிறது. மூளை நரம்புகளுக்கு சக்தி அளிப்பதோடு புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. வராமல் தடுக்கிறது. பரமசிவனை தாமிரவர்ணன் என்று நமஸ்கரிக்கிறோம்.
நான் பள்ளியில் படிக்கும்போது மண் பானையில் அலுமினியம் டம்பளரில் நீர் குடித்து வளர்ந்தவன்.
No comments:
Post a Comment