Saturday, September 7, 2019

GEETHANJALI



கீதாஞ்சலி J K SIVAN
ரபீந்திரநாத் தாகூர்

19. பூக்காட்டின் சுநாதம்
19. If thou speakest not I will fill my heart with thy silence and endure it.
I will keep still and wait like the night with starry vigil and its head bent low with patience. The morning will surely come, the darkness will vanish,
and thy voice pour down in golden streams breaking through the sky. Then thy words will take wing in songs from every one of my birds' nests,
and thy melodies will break forth in flowers in all my forest groves.

''கிருஷ்ணா, நான் பொறுத்து பொறுத்து காத்திருந்து பழக்கப்பட்டவன். உன் குரல் கேட்கவேண்டும், உன்னை நேரில் பார்க்கவேண்டும். இது எனது கட்டுக்கடங்காத ஆவல்.

நீ என்னோடு பேசாவிட்டால் என்ன? எனக்கு என்று ஒரு இதயம் நீ கொடுத்திருக்கிறாயே அது எதற்கு?

அதில் உன்னுடைய மௌனத்தை நிரப்பிக்கொள்கிறேன். அதை அமைதியாக சுமக்கிறேன்.

ஒரு நாளோ, வாரமோ, மாதமோ, வருஷமோ எதுவானால் என்ன?
நான் இலவு காத்த கிளி. பேசாமல் உனக்காக, உன் குரலுக்காக , வருகைக்காக காத்திருக்கிறேன். எனக்கு இது புதிதா?

அதோ மேலே தெரிகிறதே நீல வானம், அமைதியாக இருந்தது இப்போது கருமையாக இருண்டு தங்கப்பொட்டு களாக நக்ஷத்ரங்களோடு ஜொலித்துக் கொண்டு அமைதியாக கீழ்நோக்கி குனிந்தவாறு, கிழக்கே பார்த்து பொறுமையாக காத்திருக்கவில்லையா?
நேரம் ஓட ஓட இரவு மறையும். கிழக்கு வெளுக்கும். கட்டாயம் இருள் மறையும். அப்புறம் ....
உன் குரல் தங்க ஒளிக்கதிர்கள் மூலம் பொன்மழையாக எங்கும் வியாபிக்கும். அப்போது கருப்பு வானம் எங்கே? வானம் எப்படி யாரைக் கேட்டு பொன்மயமாகும் ?
ஆம் கிரு\ஷ்ணா உன் குரலும் கேட்பேன். உன் வார்த்தைகள் அமுத நாதமாக சிறகடித்து ஒவ்வொரு பறவைக் கூட்டிலிருந்து வெளிப்படும்.

ஆஹா உன் குரலின் இனிமை, உணர்வு, காந்த சக்தியோடு, ஒவ்வொரு மலரிலிருந்தும் வண்டுகள் மூலமாக கூட அழகாக எங்கும் கேட்கும். ஒரு மலரா ஒரு செடியா, ஒரு பெரிய பூக்காடு எல்லை யில் லாமல் படர்ந்து இருக்கிறதே.

அப்படியென்றால் எத்தனை வித வித மலர்களின் கீதங்கள், வண்டுகளின் ரீங்காரம் என்னை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தும்.......

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...