வெளியே காது செவிடுபட பெரிய இடி சத்தம். எங்கள் பகுதியிலே சிறு காற்று வீசினாலே நிற்கும் மின்சார சப்ளை, ஆகவே வீடு இரு ளடைந்தது. எழுந்து போய் கம்பளியை போர்த்தியவாறு வாசலில் க்ராதிகம்பி போட்ட சிறிய தாழ்வாரத்தில் அமர்ந்தவாறு அரைகுறை இருட்டில் புருஷ சுக்தம் சொல்லிக்கொண்டிருந்தேன் . அப்போது தானா ம்ருத்யஞ்சய நாய்டு உள்ளே வரவேண்டும்.
திடீர்னு கரண்ட் போயிடுத்து. கிட்டத்தட்ட உங்க வீட்டு வாசல் கிட்டேயே வந்துட்டேன். கையில் டார்ச் லைட் அடித்து எதிரே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார் .
''நாயுடு நீங்க வருவேன்னு மத்யானமே சொல்லிட்டேளே. இந்த புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு உங்களுக்காக காத்திருந்தேன்'' என்றேன்.
என்ன புத்தகம் என்று யோசனை வேண்டாம். சொல்கிறேன்.
கர்மா பற்றிய யாரோ ஒரு மகான் ஆங்கிலத்தில் வரிந்து கட்டிக்கொண்டு நீளமாக எழுதிய புத்தகம். நிறைய வளைத்து வளைத்து எழுதுபவர்களைக் கண்டால் எனக்கு பயம். படித்த பிறகு என் பெயர் என்ன என்றே சந்தேகம் வந்து விடும். நிறைய மேற்கோள்கள். தடியான புத்தகம். மண்டைக்குள் விஷயம் ஏறாவிட்டாலும் தலைக்கு உசரமாக தலையணையாக பல சமயங்களில் எனக்கு பயன் பட்டிருக்கிறது.
புத்தகத்தை மேலும் கீழும் அசைத்து அதிலிருந்து கர்மா தத்துவம் கொட்டுகிறதா என்று பார்த்த நாயுடு என்னை CBI ஆபீசர் மாதிரி பார்த்தார்.
''இதெல்லாம் எனக்கு புரியாது சார். நீங்கள் சொல்லுங்கோ கொஞ்சம் புரியறமாதிரி. படிக்கப் படிக்க படித்ததெல்லாம் வரிசையாக மறந்துகொண்டே வருகிறது. எழுதினவ
ருடைய ஆங்கில ஞானம் தான் தெரிகிறதே தவிர விஷயம் உள்ளே புகவில்லை. அதற்கு தான் இதை கொஞ்சம் படித்துவிட்டு ;உங்க கிட்டே அனுப்பினேன். ஏதோ கொஞ்சம் நீங்கள் சொல்லுங்களேன் '' என்றார் நாய்டு.
இடி இடித்ததே தவிர மழை காணோம். பளிச்சென்று கரண்ட் வந்து அணைந்தது. ரெண்டு மூன்று நிமிஷத்தில் மறுபடி வந்தது. நல்லவேளை மறுபடியும் நிற்கவில்லை.
நாயுடுவுக்கு நான் என்ன சொன்னேன்?
'பிரபஞ்சத்தில் நாம் எதன் வசத்தாலோ ஆட்டுவிக்கப்படுகிறோம் என்றால் அது கண்ணுக்குத் தெரியாத அந்த கர்ம பலனால் தான். எழுதப்படாத விதி அது. அனைவருக்கும் ஒப்புக்கொள்ளும் விதமாக இந்த கர்மா கெட்டிக்காரத்தனமாக நீதி நேர்மையோடு ஒவ்வொரு வாழ்க்கையையும் பாரபட்சமின்றி நடத்திவருகிறது. காரணமின்றி காரியம் இல்லை. முற்பகல் செய்த வினையின் பிற்பகல் கர்ம பலனாக அமைகிறது. இந்த பிரபஞ்ச நீதி அனைத்துயிர்களுக்கும் பொதுவானது. நம்மால் மீற இயலாதது. செய்த கர்மாவின் பலனை அனுபவிக்க தான் நாம் பல பிறவிகள் மீண்டும் மீண்டும் எடுக்கிறோம்.
ஒருவர் மற்றவரைக்கண்டு பொறாமையோ த்வேஷமோ, கோபமோ. வெறுப்போ , அடைய அவசியமில்லை .நாம் அப்படி எடுக்கும் மறு பிறவி கூட செய்த கர்ம பலனுக்கு தக்கவாறு தான் அமைகிறதாம். பல்லியோ, பாம்போ, மனிதனோ, மிருகமோ, செடியோ கொடியோ, எல்லாம் செய்த (கர்ம) வினையின் கூலியாகத்
தான் நமது பிறப்பு உருவமாக நேர்கிறது என்ற நம்பிக்கை பலமாக உள்ளது.
இது எதற்காவாவது உதவுமா என்றால் நிச்சயம் உதவும். நல்லதே நினை, நல்லதே செய், நல்லதே பேசு. நீ எதை செய்தாலும், பேசினாலும், நினைத்தாலும் அது உனக்கே வந்து சேரும். கண்ணாடியில் உன் முகம் தான் தோன்றும். மாடி வீட்டு பணக்கார செல்லப்பா மாமாவின் முகமா தோன்றும்? சுவற்றில் நீ வீசி எறிந்த பந்து அதே வேகத்தோடு உன் முகத்தில் தான் திரும்பி விழுவதைப் போல. எனவே கர்மா நம்மை சீரோடு வாழ உதவுகிறது. மறுபடி சொல்கிறேன் காரணமின்றி காரியமில்லை.
கர்மாவைப் புரிந்துகொள்ள பிரபஞ்ச நியதியை முதலில் அறியவேண்டும் நாயுடு சார். அப்போது தான் நம் ஒவ்வொரு செயலையும் அதன் விளைவையும் தெரிந்து கொள்ளலாம்.
''
இதோ பாருங்கோ, நமது உடலில் தான் எத்தனை நரம்பு மண்டலம், ரத்த நாளம், நுண்ணிய குழாயிலிருந்து மகா தமனி வரை பெரிய குழாய்கள் , வால்வ்கள். சுரப்பிகள், தானாகவே இயங்கும் அபூர்வ, அ திசய உறுப்புகள், இதயம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், குடல்கள், அப்பப்பா, கிருஷ்ணா உன் சாமர்த்தியம் , கருணை, சேவை, அபாரம்... அடாடா , எத்தனையோ ஜன்மங்களில் உனக்கு நன்றி சொன்னாலும் போதாதே. இந்த உறுப்புகள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைந்து பல வருஷ காலம் இயங்குகிறது. எனக்கு எண்பது வர்ஷம் ரிப்பேர் இல்லாமல் ஓடுகிறதே.. இதை கெடுப்பதே நாம் தானே.
ஏதோ ஒரு பூச்சி விர்ரென்று கண் கிட்டே வரும்போது கண் இமை கண்ணை மூடி காக்கிறது. கை தானாகவே தடுக்கிறது. காலின் கீழே மாமி அலம்பிவிட்ட ஜலம் கால் சறுக்கினாலும் ஏதோ சில நரம்புகள் உடனே பாய்ந்து காலை, உடலை சமாளித்து கையை எதையாவதை தாங்கி டபக் என்று பிடித்துக் கொள்ளச் செய்து கீழே விழாமல் காக்கிறது. என்ன ஒற்றுமை இந்த உறுப்புகளுக்குள். இங்கே கூடப்பிறந்த அண்ணன் தம்பி அக்காள் தங்கைக்குள் ஆயிரம் எலி பூனை சண்டை.
நம்மை, மனிதன், அப்புறம் சுமார் மனிதன், இன்னும் கொஞ்சம் மேம்பட்டவன், அரசன், ரிஷி, தேவன், உப தேவதை, கடவுள், பரம்
பொருள் என்று வரிசையாக மேம்பட வைக்கிறதே. எண்ணற்ற கிரகங்கள், மண்டலங்கள், பிரபஞ்சம் மிகப் பெரியது. அவ்வளவு பெரிய அந்த அகிலாண்டமே
பிண்டமாகிய, சிறு துண்டாகிய நம்மோடு பிணைக்கப் பட்டுள்ள விந்தை. சொல்லொாத அதிசயம் நிரம்பியது. எந்த சயின்டிஸ்ட் இதை கண்டுபிடிக்க முடியும்??
யோசிக்காத மனதுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பில்லை. கண்டவரோ விண்டிலர். அந்த ஆனந்தத்தில் எல்லையில்லா மௌனம். பிரபஞ்சத்தின் பெரும் பகுதி ஆகாசம். விண் வெளி. பர வெளி. எண்ணற்ற உயிர்கள். ஒன்றாய் , பலவாய், எத்தனையோ. ''நாயுடு நெளிந்தார் என்பதால் பேச்சை நிறுத்தி
னேன்.
''என்ன தலையாட்டுகிறீர்கள் நாய்டு? என் உளறல் புரி படவில்லையா ''
'சார், என்ன சொல்வேன். இதில் சொல்வதைக் காட்டிலும் அவரவர் தாமே அமைதியாக அமர்ந்து உள்ளே புகுந்து அலச வேண்டிய விஷயம் இல்லையா. இது. ஆஹா அற்புதமாக நிறைய சொன்னீர்கள். புரியாததெல்லாம் உளறலாகவே இருந்து விட்டுப் போகட்டும்.'' மறக்காமல் அவருடைய '' கர்மா'' வை, (புத்தகத்தை) அவரிடமே கொடுத்து விட்டேன்.
No comments:
Post a Comment