Thursday, September 19, 2019

BARTHRUHARI SATHAKAM


வைராக்கிய சதகம்.
ராஜா பர்த்ரு ஹரி

          

       மாம்பழம் தந்த  மஹா தத்துவம்

உஜ்ஜIயின்  என நாம் இப்போது அறிவது அப்போது  அவந்திகா.  மால்வா  ராஜ்ஜிய தலைநகரம். செல்வ  செழிப்புள்ளது.கரம்.  அதன் ராஜா விக்ரமாதித்தன்.  நமது சரித்திரத்தில்  ரெண்டு விக்ரமாதித்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் சகாப்தமாக பெயர் பெற்றவர்.  பிரபல கெட்டிக்கார ராஜா.  '' தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி....  என்று ஆரம்பித்து  ஒவ்வொரு அருமையான சமயோசித கதையின் முடிவிலும் விக்ரமத்தில் சரியான விடையை சொன்னதும்.........  '' விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளுமே  அந்த ''வேதாளம்'' சம்பந்தப்பட்டவர்.   முடிந்தபோது விக்ரமாதித்தன் கதைகளும்  தொடர்கிறேன்.

இன்னொருவர்  ரெண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்தன்.  அவருக்கு சகோதரராக இருந்தவர் தான்  ராஜா பர்த்ருஹரி. பல மனைவிகள். அவர்களில் ஒருவள்  அழகி பிங்களா. ராஜா பர்த்ருஹரி சமஸ்க்ரிதத்தில் மஹா பண்டிதன். அவன் எழுதிய  300 ஸ்லோகங்கள் த்ரிசதி. சுபாஷிதம், எனப்படும்.  நூறு  நீதி சதகம். நூறு வைராக்கிய சதகம்.  இன்னும் நூறு  ஸ்ரிங்கார சதகம். இதற்குள் போக உத்தேசமில்லை.   முதல் ரெண்டையும் நாம் கொஞ்சம்  பார்க்கப்போகிறோம்.  பர்த்ருஹரி நீதிமான். பர்த்ருஹரியின் அழகிய மனைவி  அரண்மனை தேரோட்டி மீது காதல் கொண்டவள் என்று அறிந்து நாட்டை அரச போகத்தை எல்லாம் வெறுத்து துறந்து   ராஜா  பர்த்ருஹரி சன்யாசியாகிறான்.  ராணியின் தவறான நடத்தை எப்படி பர்த்ருஹரிக்கு தெரிந்தது என்பதற்கு ஒரு கதை சொல்லவேண்டாமா? .

ஒருநாள் ராஜாவை பார்க்க ஒரு யோகி வந்தார். அவர் கையில் ஒரு மாம்பழம்.

''அரசே  இது தேவலோக கல்பவிருக்ஷத்தின் கனி. விரும்பியதை எல்லாம் அளிக்க வல்லது. உனக்கு என்றும் இளமை, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் எல்லாம் தரும். இந்தா சாப்பிடு'' என்று கொடுத்துவிட்டு போய்விட்டார்.

''பிங்களாவுக்கு அதை கொடுத்தால் அவள் இளமையோடு நீண்ட காலம் ஆரோக்கியமாக இருப்பாள். அவளோடு நீண்டகாலம் சுகித்து வாழலாமே''   என்று பர்த்ருஹரி அதை அவளுக்கு கொடுக்க,  தேரோட்டுபவன் நீண்டநாள் இளமையோடு இருக்க அவள் அதை அவனுக்கு கொடுத்துவிட்டாள். தேரோட்டிக்கு ஏற்கனவே ஒரு காதலி.  அதனால்  அந்த தேரோட்டி கல்பவிருக்ஷ கனியை  தன்  காதலிக்கு தந்தான்.   அந்த பரத்தைக்கு  ராஜா பர்த்ருஹரி மேல் அபார அன்பு மரியாதை.  நமது ராஜா நீண்ட நாள் இளமையோடு ஆரோக்கியத்தோடு இருந்தால் நாட்டுக்கே நல்லது என்று பர்த்ருஹரி  மனைவிக்கு கொடுத்த பழம்  யார் மூலமோ அவனுக்கே  திரும்புகிறது. அவனுக்கு தலை கிர்ரென்று சுற்றுகிறது. நடந்ததெல்லாம் விசாரித்தறிகிறான்.  ராணி பிங்களையின்  தேரோட்டி சகவாசம் அறிகிறான்.  பிறகு தான் சந்நியாசி கோலம். அப்போது அவனிடமிருந்து  பிறந்தது தான்  நூறு  நீதி சதகம்.  துறவறம் பூணுவதற்கு, சகலமும் துறந்து வாழ மனதில் வைராக்கியம் வேண்டும். அது பற்றி எழுதியது தான் 100 வைராக்கிய சதகம் ஸ்லோகங்கள்.


பர்த்ருஹரி முதலில் கோரக்நாத் யோகியின் சிஷ்யன்.

இனி வைராக்கிய சதகத்திற்குள்  செல்வோம்.  எல்லாம் அல்ல. சில அற்புதமான ஸ்லோகங்களை மட்டும் அறிவோம்.

चूडोत्तंसितचन्द्रचारुकलिका चञ्चच्छिखाभास्वरो
लीलादग्धविलोलकामशलभः श्रेयो दिशाग्रे स्फुरन् ।
अन्तस्फूर्जदपारमोहतिमिरप्राग्भारमुच्चाटयन्
चेतस्सद्मनि योगिनां विजयते ज्ञानप्रदीपो हरः ॥।

Choodothamsita-chandrachaarukalikaa-chanchachchhikhaabhaaswaro
Leelaadagdha-vilola-kaamashalabhah shreyo dishaagre sphuran
Antahsphoorjad-apaara-mohatimira-praagbhaaram-uchchaatayan
Chetah sadmani yoginaam vijayate jnaanapradeepo harah     [1]

பர்த்ருஹரி சிவபக்தன்.  என் பகவான்  பிறைசூடி.  ஜடாமுடி அழகன்.  நெற்றியிலுள்ள  த்ரிநேத்ரத்தால்,  முக்கண்ணால், மன்மதனை நொடியில் சாம்பலாக்கினவன், விளக்கில் வீழ்ந்து மாயும்  விட்டில் பூச்சியாக செய்தவன்.   மகா தேவன், தவயோகி, அவன் அல்லவோ எல்லா யோகிகள் மனத்திலும் வீற்றிருக்கும் ஞானவான். அஞ்ஞானத்தை  அழிப்பவன்.  அவனை வணங்கி துவங்குகிறேன்.

उत्खातं निधिशङ्कया क्षितितलं ध्माता गिरेर्धातवो
निस्तीर्णस्सरितांपतिर्नृपतयो यत्नेन संभाविताः ।
मन्त्राराधनतत्परेण मनसा नीताः श्मशाने निशाः
प्राप्तः काणवराटकोऽपि न मया तृष्णेऽधुना मुञ्च माम् ॥

Utkhaatam nidhishankayaa kshititalam dhmaataa girerdhaatavo
Nisteernah saritampatirnripatayo yatnena santoshitaah
Mantraaraadhanatatparena manasaa neetaah shmashaane nishaah
Praaptah kaanavaraatako’pi na mayaa trishne ‘dhunaa muncha maam [4]

''ஆசை  எவனை விட்டது?  பூமியை முதுகு ஓடிய  ஆழமாக தோண்டுகிறான். மலையை குடைகிறான். எதற்கு? அதற்குள் இருக்கும் விலையுயர்ந்த கனிம பொருள், வைரம், தங்கம் கிடைக்காதா? என்று தானே. அதையெல்லாம் எடுத்து அலசி, உருக்கி பாடுபடுகிறான் . கடல் கடந்து வெளிநாடுகளில் போய்  ஆதாயம் தேடுகிறான்.  ராஜாக்களை வாழ்த்தி புகழ்ந்து  ஆதரவு நாடுகிறான்.  இரவெல்லாம் ஸ்மசானத்தில்  அமர்ந்து பூஜைகள் புரிந்து மந்திரங்கள் ஜெபித்து  துர் தேவதைகள் உதவியையும்  நாடுகிறான்.  நானும்  இதெல்லாம் செய்தவன் தான். இதனால் என்ன பயன் பெற்றேன். செல்லாக்காசும் பெறவில்லை. வேண்டவே வேண்டாம்.  பேராசையே என்னைவிட்டு ஓடு.''

பர்த்ருஹரி நன்றாக  உபதேசிக்கிறார். கேட்போம்.



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...