இறைவனும் இயற்கையும்
J K SIVAN
ஹிந்துக்கள் இயற்கையை தெய்வமாக என்றும் வழிபடுபவர்கள்.
இயற்கை என்று சொன்னால் ஐம்பூதங்களும் அவற்றின் தோற்றங்களும். அக்னி எனும்போது , யாகத்தீ, சூரியன், உருவமில்லாத வாயு எனும்போது வாயு புத்திரன் ஆஞ்சநேயன், வருணன் எனும் போது கங்கா, காவேரி, நர்மதா, கிருஷ்ணா சந்திரபாகா, யமுனா போன்ற எண்ணற்ற புண்ய நதிகள், குளங்கள், ஏரிகள், மண் எனப்படும் ப்ரித்வி எனும்போது பூமாதேவி, பூதேவி, மற்றும் ஆகாசம் எனும்போது அரூபமான விண்ணுலக தெய்வங்கள், தேவாதி தேவர்கள், சிதம்பரேசன் என்று எல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
தெய்வங்களுக்கு எண்ணற்ற உருவங்களை நாம் கொடுத்துள்ளோம். நமது புராணங்கள், இதிகாசங்கள், வேதநூல்கள், ஸ்தோத்திரங்கள், பாடல்கள், இவ்வாறு பல தெய்வங்களை உருவகப்படுத்தி வர்ணிக்கின்றன. இது எல்லோருக்கும் தெரிந்தது. புதிதாக நான் எதுவும் சொல்லவில்லை.
இன்னொரு விஷயமும் எல்லோருக்கும் தெரிந்ததைப் பற்றி பேசுவோம்.
சில விநோதங்களை இயற்கை நாம் எதிர்பார்க்காமலேயே, நமக்காக, தானாகவே உருவகப்படுத்தி நாம் வணங்கும், வழிபடும் தெய்வங்களின் உருவில் நமக்கு காட்டும்போது, நாம் பிரமிக்கிறோம்.
அவை நிறையவே இருந்தாலும் எனக்கு உடனே ஞாபகத்துக்கு வரும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு பட்டியலிடுகிறேன். இது முழுமையான பட்டியல் இல்லை.
சென்னை திருவல்லிக்கேணியில் பல வருஷங்களுக்கு முன்பு நான் கவர்மெண்ட் எஸ்டேட் (இப்போது ஓமந்தூரார்....) வளாகத்தில் ஒரு ஆல மரத்தின் வேரில் இயற்கையாக அச்சாக ஒரு விநாயகர் உருவம் பார்த்தது நினைவுக்கு வருகிறது. இப்போது அதை சுற்றி கோவில் கட்டி விட்டார்கள். அதற்கு கவசம் கிரீடம் எல்லாம் போட்டு இயற்கை விநோதத்தை பார்க்க முடியாமல் செய்துவிட்டார்கள். நான் பார்க்கும்போது மரத்தில் பிள்ளையார் உருவம் நன்றாக இயற்கையாக தெரிந்தது. எண்ணற்றவர்கள் அந்த விநாயகரை வழிபட்டு பெரிய கோவிலாகி விட்டது.
திருப்பதி ஏழுமலைகளையும் தூர இருந்து பார்த்தால் ஸ்ரீநிவாச பெருமாள் நாமத்தோடு படுத்திருக்கும் முகம் தெரிகிறமாதிரி இருக்கும். அந்த போட்டோ பார்த்திருக்கிறேன். மலைகள் நெற்றி, மூக்கு வாய் தாடை போல் தெரிகிறது.
போளூர் திருவண்ணாமலை போகும் வழியில் அவனியாபுரம் சென்றிருக்கிறேன். அங்கே ஒரு குன்றின் ஒரு பக்கம் முனை று நரசிம்ம முகத்தோடு காணப்படுகிறது. இன்றும் அதைக் காணலாம்.
கைலாச மலையில் ஒரு பக்கம் பார்த்தால் சிவபிரானின் முகம் மாதிரி தெரிகிறது. கைலாச மலையில் பனி படர்ந்து ஓம் என்ற வடமொழி எழுத்து உருவத்தில் உள்ளது. அந்த மலையின் சிகர அமைப்பே மேலிருந்து பார்க்கும்போது ஒரு சிவலிங்கம் ஆவுடையாரோடு இருப்பது போல் படத்தில் தெரிகிறது. நேரில் சென்று தரிசிக்கும் பாக்யம் இந்த ஜென்மத்தில் எனக்கில்லை.
அமர்நாத் குகையில் பனி லிங்கம் இயற்கையாக காட்சியளித்து கோடிக்கணக்கானோர் தரிசனம் செய்கிறார்கள்.
ஒரு குன்றின் பாறையில் நரசிம்மம் அஹோபிலத்தில் தெரிகிறார். ஸ்பெயின் நகரத்தில் எங்கோ விநாயகர்.
உ.பி.யில் தூதை என்கிற ஊரில் 30 அடி உயர நரசிம்மன் இரணியனை மடியில் போட்டது மாதிரி இயற்கையாக தரிசனம் தருகிறார். இயற்கை உருவத்தை கொஞ்சம் செதுக்கி இருக்கிறார்கள் போல் உள்ளது.
ஹாங்காங் நகரத்தில் சிம்ம குன்று ஒன்று இருக்கிறது. கௌலூன் டாங் குக்கும் டாய் வை பகுதிக்கும் இடையே.495 மீட்டர் உயரத்தில் காண்கிறது.
திருப்பதி மலையில் ஒரு முனையில் கருடன் முகம். கருடாத்ரி இது தானோ?
இன்னொரு இடத்தில் பைரவர் அமர்ந்திருப்பது போல ஒரு குன்று.எங்கோ ஒரு மரத்தில் விநாயகர் இந்தியாவில் காண்கிறார். விபரம் சேகரிக்க நேரமில்லை.
ஸ்பெயின் தேசத்தில் ஒரு விநாயகர் முகம்
இயற்கையின் ஆதிசயங்களை விவரிக்க புகுந்தால் எல்லையே இல்லை.முடிந்தவரை படங்கள் இணைத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment