Monday, September 9, 2019

PARSEES IN INDIA



கட்டுக்கோப்பான ஒரு வகுப்பு
J K SIVAN

நமது தேசத்தில் பார்ஸிக்காரர்கள் இருப்பது நமக்கு தெரியும். அமைதியாக வாழும் ஒரு வகுப்பினர். அவர்களை ஸோராஸ்ட்ரியர்கள் என்பது அவர்கள் ஸோராஸ்டர் என்பவரை குருவாக கொண்டதால். பாரசீகத்தோடு நமக்கு தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகளாக. பாரசீகம் பெர்ஷியா என்று ஆங்கிலத்தில் பெயர்கொண்டு பின்னர் இஸ்லாமியர்களால் விழுங்கப்பட்டு இரானாகி விட்டது. பாரசீகர்கள் பார்சீகளாக சுருங்கி இந்தியாவின் நட்போடு இந்தியர்களாக மாறி நம்மோடு வாழ்ந்து நமது வளத்திற்கு அவர்களும் கை கொடுத்திருக்கிறார்கள்.
ஹிந்து மதம் அனைத்து மதங்களையும் மதித்து பெருமை அளிக்கும் தார்மீக சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டது. மதவெறி மதமாற்றம் நமது அகராதியிலேயே கிடையாது.
பாரசீகர்கள் 636-651ல் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு சிக்காமல் பலர் இரானிலிருந்து தனித்துவம் தேடி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முதலில் குடியேறி வாழ வந்தவர்கள்.
தங்களது மதம், பண்பாடு ஈரானியர்கள் ஆதிக்கத்தில் அழியாமல் இருக்க இங்கே வந்து தனித்துவமாக தங்கள் கலாச்சாரத்தோடு இன்றும் வாழ்கிறார்கள். இப்போது நாம் அவர்களை அறிவது பார்சிகள் என்ற வகுப்பை சார்ந்த இந்தியக்குடிமக்கள். எத்தனையோ நூற்றாண்டுகள் தெற்கு குஜராத்தில் குடியேறியவர்கள் பரவலாக உத்வாடா, வல்சத், நவ்சாரி, பகுதிகளில் காண்கிறார்கள். அனைவரும் பேசுவது அநேகமாக குஜராத்தி மொழி. இப்போது மஹாராஷ்டிராவில் பூனா, அதிகமாக மும்பையில் பார்சிகள் குடும்பம் வாழ்கிறது. நடுவே ஹைதராபாத், கிழக்கே கல்கத்தா, தெற்கே சென்னை, பெங்களுர் நகரங்களில் அநேகர் வசிக்கிறார்கள். பாகிஸ்தான் சென்றவரும் உண்டு.
ஸோராஸ்ட் ரியர்கள் எனும் பார்ஸிகளின் வேத புத்தகம் ஸேண்டா அவெஸ்தா அவெஸ்திய மொழியில் எழுதப்பட்ட அந்த நூல் என்பதால் அந்த பெயரும் இணைந்திருக்கிறது. வேத கால ஸமஸ்க்ரித மொழிக்கு கிட்டத்தட்ட சொந்தம். அவர்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள் குறையாமல் கெடாமல் இன்னும் ஒரு ஒற்றுமையான வகுப்பாக அமைதியாக வாழ்கிறார்கள்.
பார்சீகள் அக்னி உபாசகர்கள். ஹிந்து மன்னர்கள் அவர்களுக்கு ஒரு தனி இடம் அளித்து அதில் அக்னி கோவில் கட்டி வழிபடுபவர்கள். அதிகமாக மற்ற மதங்களில் கலப்பு திருமணங்கள் இல்லை. ஸோராஸ்திரிய மத சடங்கில் முக்கியமானது பார்சி நவஜோத். பிராமணர்களுக்கு உபநயனம் மாதிரி இது.
இந்தியாவில் இப்போது 60-70 ஆயிரம் பார்சி மக்கள் வாழ்கிறார்கள். அதில் கலப்பில்லாத ஒரிஜினல் இரானி ரத்தம் உடம்பில் ஓடுமாறு வாழ்ந்தவர்கள் அளவில் குறைந்து கொண்டே போகிறார்கள். சிலர் வாரிசு இல்லாமல் குறைகிறார்கள், மற்ற பலர் கலப்பில் கலந்து இடம் பெயர்ந்தவர்கள். இது காலத்தில் கோளாறு. மாறுதல் தலை காட்டாத இடமே இல்லையே. பார்சிகள் நிறுவிய அமைதி கோபுரம் TOWER OF SILENCE என்று மும்பையில் மலபார் ஹில், பகுதியிலும் கராச்சியில் இன்றும் உண்டு. இங்கு தான் இறந்தவர் உடல்கள் கழுகுகளுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.
மும்பையிலும் மற்ற இடங்களிலும் பார்சிகள் நிர்மாணித்த தான தர்ம நிறுவன ஆதாரங்கள் இன்றும் காண்கிறது.
பார்சிகளில் மெத்த

படித்தவர்கள் அதிகம். இந்தியாவில் உயர்பதவியில், வணிகத்துறையில், நீதி உலகில் சிறந்தவர்களாக இருப்பதை சரித்திர ஏடு என்றும் சொல்லும். மும்பையில் நிறைய தெருக்கள் பார்சி பெயர்களில் இன்றும் பிரபலமாக இருக்கிறது. தாதாபாய் நௌரோஜி, பிரோஸ் ஷா மேத்தா, நாரிமன் பாய்ண்ட், போன்ற பல. அவர்கள் பெயர்கள் இன்ஜினீயர், டாக்டர், காண்ட்ராக்டர், என்றெல்லாம் இருப்பது வினோதம்.
பார்ஸிகளிடம் ஒரு வினோத பழக்கம்.இறந்தபின் உடலை அவர்கள் வேத சாஸ்திரத்தின் படி உடலை சுத்தப்படுத்தி,வஸ்திரம் நூல் அணிவித்து, அக்னி காட்டி, பிறகு உடலை சுற்றி ஒரு வட்டம் போடுகிறார்கள். அந்த வட்டத்தில் அந்த உடலை சுமப்பவர்கள் மட்டும் நுழைந்து வரிசையாக இது காட்டிற்கு தூக்கி செல்கிறார்கள். இருவர் இருவராக வரிசையில். அவர்களது இடுகாட்டில் எரிப்பதோ, புதைப்பதோ கிடையாது. உள்ளே வட்டமாக ஒரு மேடை இருக்கும். அந்த மேடையில் உடலை வைத்துவிட்டு வெளியே வந்து விடுவார்கள். கழுகுகள் இறந்த உடலை முழுதும் தின்றபின் எலும்புகள் நடுவே பள்ளத்தில் தள்ளப்படும்.. நாலு நாள் துக்கம் அனுஷ்டிப்பார்கள். நமது அக்னி தேவன் தான் அவர்களின் அஹூரா மஸ்தா. அவர்களுக்கு தனி பஞ்சாங்கம் உண்டு.
நமது இந்திய சரித்திரத்தில், வரலாற்றில் முக்கியமான நக்ஷத்ரங்களாக ஜொலிக்கும் சில பார்சிகளை உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

இந்திய ராணுவத்தின் அதிபதி பீல்ட் மார்ஷல் SPJF மானெக் ஷா
அணு ஆராய்ச்சி தந்தை ஹோமி பாபா HJ BHAABA இரும்பு தொழிற்சாலை அதிபதி டாடா ,வம்சம். ஸுபின் மேத்தா . ZUBIN MEHTA பிரெட்டி மெர்குரி இங்கிலாந்து ராணிக்கு பாடகி FREDDY MERUCY பம்பாய் வாணிக புலிகள் .இந்திய கிரிக்கெட் அணி தலைவர் நாரி காண்ட்ராக்டர் பாரூக் இன்ஜினீயர். பாலி உம்ரிகர். சிறந்த பொருளாதார நிபுணர் நானி பால்கிவாலா.சட்ட மேதை சோலி சோராப்ஜி பாலி நாரீமன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...