சிரிப்பது மனித குலத்துக்கு மட்டுமேயான தனிச்சிறப்பு. ஆனால் சிரிப்பு பலவகைப்பட்டது. சிலர் சிரிப்புக்குபின்னால் பெரும் ஆபத்து விளையும். குழந்தைகளின் பொக்கை வாய் சிரிப்பு மனதை கொள்ளைகொள்ளும். வயதான பாட்டி தாத்தாக்களின் சிரிப்பும் அதே வகை தான். ஹாஹாஹா என்று அடுக்கடுக்காக சிரித்தே புகழ் பெற்றவர் வில்லன் வீரப்பா. அது கொஞ்சம் நேச்சுரலாக இல்லாமல் வில்லத்தனம் காட்டும் நடிப்பு என்பதால் நம்மால் பின்பற்றமுடியாது. அவர் அப்படி சிரிப்பதற்கு காசு வாங்கினார். நம்மை ஏசுவார்கள். நொறுக்கி அடியும் கிடைக்கலாம். NS கிருஷ்ணன் ஒரு அருமையான சிரிப்பு வகை பாட்டு பாடினது ஞாபகம் இருக்கிறதா? இது ஆணவ சிரிப்பு, சங்கீத சிரிப்பு, அடங்கிநடப்பவன் சிரிப்பு,என்றெல்லாம் அற்புதமாக சிரித்தே அந்த பாட்டு என்றும் கேட்க இனிமையானது. சிரித்து சிந்திக்க வைத்தவர் NSK . அதனால் தான் அவருக்கு சிலை. அரசியல் வாதிகள் சிரிப்பு ஆழமானது. அர்த்தம் கண்டுபிடிக்க முடியாது. கருணாகரன் என்ற கேரள தலைவர் கருணாநிதி ஆகியோர் சிரிக்காமல் ஒரு போட்டோ கூட பார்த்ததில்லை. அதே சமயம் நரசிம்ம ராவ், மன்மோகன் வாய் திறந்து சிரித்து இந்த ஜென்மத்தில் பார்க்க வழியில்லை.
சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து. சிரித்து வாழவேண்டும் பலர் சிரிக்க வாழ கூடாது.
சிரிக்க சில சுலப வழிகள் உண்டு. கொஞ்சம் சொல்கிறேன்.
பழைய நண்பர்களை கூப்பிட்டு எப்படிடா/எப்படிம்மா இருக்கே? இந்த ஒருவார்த்தை புன்னைகையை கிளப்பிவிடும். மனது இனிக்கும்.
வாங்கோ என்று கதவை திறந்து வந்தவரை தலையாட்டி வரவேற்றால் எங்கிருந்தோ வந்து முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொள்ளும்.
சாப்பிட ஒருநாள் வாங்கோளேன்'' -- உப்பு காரம் புளி குறைவான சாம்பார் கூட அம்ருதம் அன்று.
''பார்த்து ரொம்ப நாளாச்சு போல இருக்கே. அடிக்கடி வரணும்...இது ஒரு மந்திரச்சொல்.
கூட வேலை புரியும் சகாக்களை இதை எப்படி பண்ணலாம், இப்படிப்பண்ணினால் எப்படி .... இது நட்பு, சிரிப்பு ரெண்டையும் வளர்க்கும்.
ஏதோ பிஸ்கட்,இனிப்பு, காராசேவ் தின்பண்டம் எடுத்துச்சென்று மற்றவர்களுக்கு ஆபிஸ் மற்றும் ஒன்று சேரும் இடங்களில் கொடுத்தால் அது கோந்து மாதிரி எல்லோரிடமும் நம்மை ஓட்டிவிடும்.
தெருவில் வாகனத்தில் செல்லும்போது அவசர குடுக்கைக்கு வழிவிடு . போகட்டும். ஒரு சிரிப்பு முகத்தில் தெரியும்.
ஓட்டலில் நிறைய சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் டிப் கண்டிப்பாக பில்லோடு வைக்கவேண்டும். அதில் சிக்கனம் பிடிப்பவர்களுக்கு சாப்பாட்டுக்கு பின் சாபம் போனஸ்.
குட் மார்னிங்/குட் ஈவினிங் சொல்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு.
அப்பா அம்மா குழந்தைகளோடு, குழந்தைகள் பெற்றோருடன் அடிக்கடி பேசவேண்டும்.
நம்மை மற்றவர்கள் நாடும்படியாக தேடும்படியாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.
சின்ன காரியம் பண்ணினாலும் அதை சிலாகித்து ஊக்குவிக்கவேண்டும்.
மிருக காட்சிசாலை, முதியோர் இல்லங்கள் சென்று அங்குள்ள ஜீவன்களை நேசிக்கவேண்டும்.
இப்போதெல்லாம் ''க்ஷேமம், உபயக்குசலோபரி, இவ்விடம் யாவரும் நலம்....'' கடிதாசு எழுதும் பழக்கம் மறைந்துவிட்டது. அதற்கு பதிலாக '' ஹை'' வாட்ஸாப்ப் ஈமெயில் வந்திருக்கிறதே. ரொம்ப சுலபம்.. நிறைய பேரோடு ஏதாவது ஒரு தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டும்.
நான் இதை தானே லக்ஷக்கணக்கான பேரோடு அவர்கள் என்னை அறுவருக்கும் அளவுக்கு முகநூல், வாட்ஸாப், மின்னஞ்சல், என்னுடைய BLOG இதிலெல்லாம் ' 'அறுறுறுத்துக்'' கொண்டிருக்கிறேனே''. யாராவது என்னை சபித்தாலும் அதுவும் ஒரு தொடர்பு தானே!
ஒருவர் எப்போது என்னிடம் பேசினாலும் ''சிவா இப்போது தான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன்'' என்பார். நல்ல டெக்னீக் இது. கற்றுக்கொள்ளவேண்டும் இது போல சில வித்தைகளை. ஜாக்கிரதை எப்போவுமே இப்படி சொன்னால் நம்பமாட்டார்கள். மசால் வடைக்காக எலி பொறியில் நுழையாது.
'நான் உங்களுக்காக போட்ட காப்பி/டீ '' என்று உள்ளே மனைவி போட்டிருந்தாலும் சொல்வது ஒரு நல்ல நடிப்பு. நட்பை சில சமயம் வளர்க்கலாம். அடிக்கடி உபயோகப்படாத அம்பு இது.
கொஞ்சம் உபயோகித்த உடைகளை ஏழைகளுக்கு கொடுக்கலாம். கிழிந்த பின் அல்ல.
நான் முன்பெல்லாம் என்னுடைய ஸ்கூட்டரில் நங்கநல்லூர் மற்றும் வழியில் பார்த்த முதியோரை ஆண் பெண் யாரானாலும் அவர்கள் மூட்டை/பைகளோடு வீடு/ரயில்வே ஸ்டேஷன் வரை கொண்டு சேர்த்திருக்கிறேன். இப்போது நான் போவதே ரிஸ்க் ஆகவே 80+ல் இந்த பழக்கத்தை விட்டு விட்டேன். .
ரத்தம் கொடுப்பது நல்ல வழக்கம். எனோ நிறையபேருக்கு பயம் இருக்கிறது. ரத்தம் சுரந்துகொண்டே தான் இருக்கும். பிறருக்கும் பயன்படும்
ரத்தம் கொடுப்பது நல்ல வழக்கம். எனோ நிறையபேருக்கு பயம் இருக்கிறது. ரத்தம் சுரந்துகொண்டே தான் இருக்கும். பிறருக்கும் பயன்படும்
பொது இடத்தில் வண்டிகளில் முதியோருக்கு உடல் நலம் குன்றியவருக்கு நமது இடத்தை கொடுப்பது அற்புதமான ஒரு மனநிலை தரும்.
முன் பின் தெரியாத குழந்தைகளை கண்டால் கூட ''ஹை '' சொல்லி கையாட்டுவது அந்த குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்
ஊசி போட்ட நிறைய பில் போட்ட டாக்டருக்கு கூட தேங்க்ஸ் சொல்லுவது நல்ல நட்பை வளர்க்கும். டாக்டரோடு தொழில் முறையில் நட்பு வேண்டாம். உடல் நலம் நன்றாகவே இருக்கட்டும்
இதுமாதிரி நிறைய சொல்லட்டுமா?
No comments:
Post a Comment