Tuesday, September 24, 2019

PESUM DEIVAM




                          பித்ருக்களும் காகமும் J K SIVAN

மஹாளய பக்ஷத்துக்கும் காக்கைக்கும் ரொம்ப நெருங்கிய சம்பந்தம் உண்டு.
அண்டங் காக்கா சாதாரண காக்கையை விட அட்டை கரியாக குண்டாக இருக்கும். கருப்பு ரேகையை ரெக்கையை உடையது. குரலும் கர்ணகொடூரமானது. சிலர் அபசகுனம் என்றாலும் ஹிந்துக்களுக்கு அவை தெய்வீக சக்தி வாய்ந்தவை. சாதாரண காக்கையைவிட அவை புத்திசாலி
கள்.கழுத்தை சுற்றி தாடி மாதிரி இருக்கும். சுறுசுறுப்பானது. தனியாக இருக்காது. ரெண்டு மூன்று காக்கைகளோடு சேர்ந்து தான் வரும். போகும்.
தெற்கிலிருந்தோ, கிழக்கிலிருந்தோ பறந்து வரும் காக்கை விசேஷமானது, நல்லது நடக்கும். அமெரிக்க பழங்குடி மக்கள் கூட்டமாக காக்கை பறந்தால் வியாதி வருகிறது என்று பயப்பட்டார்கள். ஏதாவது ஒரு வீட்டை சுற்றி காக்கை வட்டமிட்டு கத்தினால் அந்த வீட்டு குடும்பத்தில் யாரோ காலி என்றும் பயம். விடிகாலை மற்ற பறவைகள் கத்துவதற்கு முன்பு காக்கை கத்தினால் அன்று மழை வரும்.
சில மக்கள் ஒத்தை காக்கை கத்தினால் அபசகுனம். ரெண்டு காக்கைகள் கத்தினாள் சுபம் என்று நம்புகிறார்கள். மூன்று காக்கைகள் கத்தினால் உடல்நலம். நான்கு கத்தினால் பணம் கொட்டும். ஐந்து கத்தினால் வியாதி வரப்போகிறது. ஆறு கத்தினால் எல்லோருக்கும் சொல்லி அனுப்பி மேற்கொண்டு காரியங்களுக்கு தயாராக வேண்டும்......ஆகவே காக்கை கத்தும்போது எத்தனை என்று முதலில் எண்ணவேண்டும்..!ll
காக்கைகள் மொட்டை மாடி சுவற்றில் வரிசையாக பதினைந்து இருப்பது உட்கார்ந்து கவனித்திருக்கிறேன். எலக்ட்ரிக் கம்பியில் வரிசையாக இப்படி தோன்றுவதை, கத்துவதை காக்காய் பள்ளிக்கூடம் என்போம்.
நான் ஆழ்வார்பேட்டையில் வசித்த காலத்தில் மொட்டை மாடியில் ஒரு காக்கை குடும்பம் என் வலது உள்ளங்கையிலிருந்தே பருப்பு சாதம் சாதம் சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
என்னிடம் சிலர் எதற்கு மஹாளய பக்ஷத்தில் நமது பித்ருக்கள் காக்காய் ரூபமாக வரவேண்டும்?. காக்காய் என்பது பறவையினத்தில் கடைசி ரேங்க் RANK இல்லையோ? ஒரு கிளியோ, மயிலோவாக வந்து ஆகாரம் சாப்பிடக்கூடாதா? என்று அபிப்ராயம் கேட்டபோது நான் பதில் சொல்லாமல் பெரியவா இதே கேள்விக்கு சொன்ன பதிலை கிளிப்பிள்ளையாக சொன்னேன்.
''ரொம்ப சரி, எந்த பக்ஷி '' கா கா '' என்று கத்துகிறது? எந்த பக்ஷியை அது கத்தும் சத்தத்தை வைத்து நாம் கூப்பிடுகிறோம்? பூனையை மியாவ் என்று கூப்பிடுகி றோமா? நாயை லொள் லொள் என்று கூப்பிடுகிறோமா? கிளியை கீ கீ என்று அழைக்கிறோமா? ''கா வா கந்தா வா'' என்றால் வா என்னை காப்பாற்று என்று அர்த்தம் இல்லையா? அதனால் தானே பரிசுத்தமாக ஸ்ரார்த்தம் செய்தோ , அன்றாடம் பூஜை நைவேத்யம் செய்தோ சிறிது காக்காய்க்கு வைத்து விட்டு '' என் முன்னோர்களே, பெற்றோர்களே வாருங்கள் என்னை வந்து ரக்ஷியுங்கள்'' என்று காக்காயை ''கா கா'' என்று கூப்பிடுகிறோம். அது உயர்ந்த பறவை இல்லையா? எங்கும் கண்ணில் படுவதால், எதை வேண்டுமானாலும் அது தின்கிறது என்பதால் காக்காயை மட்டம் என்று இழிவாக சொல்கிறாயே,
காக்கை எவ்வளவு உன்னதமான பறவை தெரியுமா? தினமும் காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கா கா என்று கத்துகிறதே. ''எழுந்திரு ப்ரம்ம முகூர்த்தத்தில் ஜபம் பண்ணு என்னை காப்பாற்று என்று பகவானை வேண்டிக்கொள்'' என்று சொல்லிக் கொடுக்கவில்லையா?
உணவை எதிரில் வைத்தால் உடனே உண்ணுவதில்லை, மற்றவர்களை கூப்பிட்டு அவர்களோடு சேர்ந்து உண்பது உயர்ந்த நோக்கம். '' உன் உணவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்'' என்று அல்லவா சொல்லிக் கொடுக்கிறது. சாயந்திரம் எல்லாம் கூடி கா கா என்று பகவானை காப்பாற்று என்று வேண்டி கொள்கிறது. அஸ்தமனத்துக்கு மேல் உண்பதில்லை. சாஸ்திரப்படி சாப்பிடக்கூடாதே. .இதெல்லாம் நாம் பின்பற்றவேண்டாமா? நாம் உயர்ந்த வர்களா காக்கை உயர்ந்ததா? அதனால் தான் எல்லா பக்ஷிகளையும் விட்டு காக்காய் ரூபத்தில் நமது பித்ருக்கள் வந்து சாப்பிட்டு வாழ்த்துகிறார்கள். புரிகிறதா? இனிமேலாவது எல்லோரும் மஹாளயம் மட்டுமில்லை, தினந்தோறும் காலை குளித்து விட்டு பூஜை முடித்து நைவேத் தியம் பண்ணி காக்கைக்கு அன்னம் வைப்போமா? இன்னொரு விஷயம். காக்கைக்கு ஆகாரம் வைத்து விட்டு அது சாப்பிடுகிறதா என்று பார்க்கிறோம், அது சாப்பிட்டால் அதற்கும் மகிழ்ச்சி, அது சாப்பிட்டதில் நமக்கும் மகிழ்ச்சி. ரெண்டிலும் பகவான் இருக்கிறார். இது தான் அத்வைத தத்வம்!
இதற்கும் மேல் காக்கையை பற்றி ஆராய்ச்சி வேண்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...