Tuesday, September 24, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்        மஹாபாரதம்  J K SIVAN

பீஷ்மரின் இன்னொரு குட்டிக்கதை


ஹிந்துக்களுக்கு  வேதங்கள்  நான்கு.  சாம, ரிக், யஜுர், அதர்வணம் என்ற பெயர் கொண்டவை.

இதை தொகுத்து அளித்தவர் வியாச முனி.   வேதங்களை தொகுத்து அளித்ததால் வேத வியாசர் என்ற பெயரால் அறியப்படும் மகரிஷி.  இது தவிர அவர் பதினெட்டு புராணங்க ளையும் ஸ்ரீமத் பாகவதத் தையும், மகா பாரதத்தையும் நமக்கு பரிசளித்தவர்.  மஹாபாரதம் அவற்றில் இன்றியமையாத இதிகாசம். உலகில் கடைசி ஹிந்து இருக்கும் வரையில் எல்லோரும் அறிந்த  எத்தனை  முறை எவர் சொல்லியும் கேட்கும் போது அலுப்பு தட்டாத  சிரஞ்சீவி காவ்யம்.   ஏற்கனவே நான்கு வேதங்களை அளித்ததால்  வியாசரின்  மகாபாரதத்தை  ஐந்தாம் வேதம் என்று உலகம் ஏற்றுக் கொண்டி ருக்கிறது.

அடியேன் ஐந்தாம் வேதம் என்ற பெயரில்  வேத வியாசரின் லக்ஷக்கணக்கான சமஸ்க்ரித ஸ்லோகங்களை சிறந்த முறையில் ஆங்கிலத்தில் அளித்த ஸ்ரீ கங்குலி,  P .C. ராய்  ஆகியோருக்கு நன்றி வணக்கத்துடன் தமிழில் 12000 சொச்சம் பக்கங்களை ஆயிரமாக சுருக்கி குழந்தை களுக்கு கதைகளாக தந்திருக்கிறேன். விலை போடவில்லை, எங்கும் விற்பனை இல்லை. நன்கொடை பெற்று புத்தக அச்சுக்கூலி பாக்கியை சந்தித்து அடுத்த பிரதியை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம். புத்தகம் விரும்புவோர் அணுக: 9840279080
மஹா பாரதத்தில்  நாம் இப்போது  முக்கால் பாகம் தாண்டியாயிற்று. இன்னும் சில நாளில் பீஷ்மர் மறையப்போகிறார் அதற்கு முன் ஸ்ரீ கிருஷ்ணனின்  அறிவுரையோடு,  பீஷ்மர்  தான் அறிந்த ராஜரீக, நீதி, தர்ம ஞாய விஷயங்களை எல்லாம் யுதிஷ்டிர னுக்கு உரைக்கிறார். சிலவற்றை கதைக ளோடு புரியும்படியாக சொல்கிறார்.

மகா பாரத சாந்தி பர்வத்தில்  நாம் இப்போது இருக்கிறோம்.  பீஷ்மர்  அம்புப் படுக்கையில் உத்தராயணத்தை எதிர் நோக்கி  அந்திம நேரத்தில்  யுதிஷ்டிரனுக்கு  நிறைய  அறிவுரை கூறுவதை தான் இப்போது நாமும் கேட்டுக் கொண்டிருக் கிறோம்.

ஒரு அரசனின் கடமை என்ன, இதெல்லாம் அறிந்துகொண்டு, தெரிந்து கொண்டு   எப்படி எல்லாம் நடந்து கொள்ளவேண்டும், எதிரிகள், குடி படைகள்,  நிர்வாகம், குடும்பம், தனி மனித சுதந்திரம், நேர்மை நியாயம், பக்தி எண்ணற்ற  இவை பற்றி விவரித்துக் கூறும்போது நிறைய  குட்டிக் கதைகள் சொல்கிறார். அதை எல்லாம் எழுத வேண்டும்  என்று ஒரு ஆசை.  ஆனாள் அதுவே ஒரு பெரிய புத்தகமாகி விடும் என்று தோன்றுகிறது.

''யுதிஷ்டிரா,  ஒரு கதை சொல்கிறேன் கேள்.

ஒரு ஆழமான நீர் நிலையில் நிறைய மீன்கள் இருந்தன  அதில்  மூன்று நல்ல நண்பர்கள். ஒன்று கெட்டிக்கார மீன். நிலைமையை முன் கூட்டியே  அனுமானி த்து தக்க நடவடிக்கையை எடுக்கும் தன்மையது. ரெண்டாவது  மீன்,  சந்தர்ப்பத்தை சமயோசிதமாக  உபயோ கிக்க வல்லது. மூன்றாவது மீன்  நல்ல  சோம்பேறி. எதையும் முடிவெடுக் காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவது.

ஒருநாள் ஒரு வேடன் மீன் பிடிக்க வருகிறான் என்று அறிந்தவுடன் கெட்டிக்கார மீன் தப்பிவிட்டது. அவன் அந்த நீர் நிலையில் இருந்து தண்ணீரை அப்புறப் படுத்தும்போது ரெண்டாவது மீன் மூன்றாவது மீனிடம் வா இப்போது நீரோடு நீராக  தப்புவோம். சந்தர்ப்பத்தை பயன் படுத்த்துக் கொள்வோம்  என்றது.  அதற்குள் நீர் வற்ற ஆரம்பித்து மீன் பிடிப்பவன் ஒரு கம்பியில் மீன்களை கோர்த்து எடுத்து அருகில் இருந்த நல்ல ஆற்று  நீரில் அவற்றை கழுவ முயலும்போது மற்ற பிடிபட்ட மீன்களை போல் ரெண்டாவது மீன் தனது வாயினால் அந்த கம்பியை கவ்விக்கொண்டு அடுத்த ஆற்றுக்குள்  அவன் அந்த மீன்களை தோய்த்தபோது கம்பியை விட்டு விட்டு  தப்பித்துக்  கொண்டது.  

மூன்றாவது பிடிபட்டு யார் வயிற்றுக்குள்ளோ ஆகாரமாக சென்றது என்பதைச்   சொல்லவேண்டிய  அவசிய மில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...