Saturday, September 14, 2019

KRISHNAPPA



கெட்டியா கையை பிடிச்சுக்கோ J K SIVAN
இது என்ன கனவா நிஜமா? எனக்குத் தெரியவில்லை.

விர்ரென்று காற்று வீசுகிறது. விடியற் காலை நேரம் போல் தோன்றுகிறது.

நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம். வேறு யாரும் கண்ணில் படவில்லை.எங்கோ தூர தேசத்தில் ...சுற்றிலும் மலைகள் காடுகள் . நடந்து போய் கொண்டிருக்கிறோம். ஏன்? எதற்கு, எங்கே போகிறோம்?

உன் பின்னால் நான் ஒரு ஐந்து வயது சிறுமியா? நீ என் அப்பாவா?

மலைமேல் செல்கிறோம். குறுகலான பாதை. நடுவே திடீரென்று ஒரு கிடு கிடு பள்ளம் கீழே. ஆழமான அகண்ட ஓ வென்று பேரிரைச்சலோடு வெள்ளப்பெருக்கெடுத்து ஒரு ஆறு ஓடுகிறது. நாம் இருவர் நடந்து தான் இதை கடக்கவேண்டும். நிற்கிறோம்.

ஆற்றின் குறுக்கே மலை உச்சியில் ஒரு சிறு பாலம். பாலத்தின் மறுமுனை வேறு ஒரு சிகரத்தில் இணைத்திருக்கிறார்கள்.

குறுகலான பாலம். ஒருவர் பின் ஒருவர் அல்லது நெருக்கி அணைத்துக்கொண்டு நடக்கலாம்.

''குழந்தே, பயப்படாதேம்மா என் கையை நீ கெட்டியா பிடிச்சுக்கோ. கீழே பள்ளத்தில் விழாமே நான் உன்னை அந்த பக்கம் கொண்டு போய் சேக்கறேன் ''

நான் குழந்தையாக இருந்தாலும் யோசிப்பேன்.

''என்ன குழந்தை பேசாம இருக்கே. என் கையைப் பிடிச்சுக்கோ. ஜாக்கிரதையா அந்த பக்கம் போயிடுவோம்.

''இல்லேப்பா நீங்களே என் கையை கெட்டியா பிடிச்சுக்கோங்கோ.''
அப்பா சிரிக்கிறார்

''என்ன குழந்தே. நீ என் கையை பிடிச்சுக்கிறதும் நான் உன் கையை பிடிச்சுக்கிறதும் ஒண்ணு தானே. என்ன வித்யாஸம் இதிலே?''

“பெரிய வித்யாசம் இருக்குப்பா''
''என்ன அது நீயே சொல்லு?''

“அப்பா, நான் உன் கையை பிடிச்சுண்டா, எனக்கு ஏதாவது நடந்துதுன்னா பயத்துல நான் உன் கையை விட்டுவிட ரொம்ப சான்ஸ் CHANCE இருக்கு. ஆனால், நீ என் கையை கெட்டியா பிடிச்சுண்டா, நிச்சயம் என்னை கைவிட மாட்டேன்னு எனக்கு தெரியும் பா''

நாம் எல்லோருமே கிருஷ்ணப்பாவின் கையை கெட்டியாக பிடித்துக் கொள்வோம். அதனால் தான் நம் தாத்தாக்கள் பாட்டிகள் எல்லோரும் ''கடவுளை நம்பினோர் கைவிடப் படார்'' என்று சொல்லி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...