Monday, September 30, 2019

FLUTE MALI

ஒரு  மஹா வித்வான் நினைவு... J K SIVAN

..
அவர் ஒரு தனிப்பிறவி. விந்தை மனிதர்.  அவர்  வாசித்தது சாதாரண புல்லாங்குழல் இல்லை. ஏழு சுருதி புல்லாங்குழல்.  ஆம்  ஏழு கட்டை  ஸ்ருதியிலே வாசிக்க ஆரம்பித்து  ஐந்துக்கு  குறைத்துக் கொண்டவர்.  
அவர்  வாசித்தது எல்லாம் சரியாக ரெகார்ட் செய்யப்படாதது நமது துரதிர்ஷ்டம். கிடைத்த சில  மெழுகு இசைத்தட்டுகள்  rpm  பொருத்தமில்லை.   இடையிடையே என்னென்னவோ  சத்தம் வேறே.   ஒரு  அபூர்வ, அற்புத கலைஞனின்  தெய்வீக இசைப் பரிசு  நமக்கு கிட்ட நாம்  பாக்யம் செய்ய வில்லையே.   எதற்கு  அவரிடம்   அவ்வளவு சின்ன  புல்லாங்குழல்? ரெண்டு கை வைத்துக் கொண்டபோது குழலே  மறைந்து போனது.   இரு கைகள் வைத்துக் கொள்ள இடமே போதாமல்.....

''என்ன மாலி, நீங்க ஏன்  ஐந்து கட்டைலே  வாசிக்கறேள்? நிறையபேர்  ரெண்டரை கட்டைக்கு மேல் தாண்டறதில்லையே''.  

''அதெப்படி ...ஹுஹும்..   டெக்னீகலா அது தப்பு.  நுண்ணிய ஸ்வரம்  மெல்லிசா அழகா பேசாதே''    மாலி  என்னென்னவோ   சங்கீத டெக்னிகலாக  விளக்கம் சொன்னது  தலையாட்டி கேட்ட ரசிகருக்கு சுத்தமாக  புரியவில்லை.

மாலியின்  புல்லாங்குழலில்  உச்ச கட்டைலே தான் கிளி கொஞ்சும்.   எனக்கு  பிடித்த  குழல் வித்வான்கள் புல்லாங்குழல்  மாலி,  நாதஸ்வரத்தில்  T N  ராஜரத்தினம் பிள்ளை.   ரெண்டும் தனித்தன்மையோடு சுதந்திரமாக  இசை  அலை வீசி மனசிலே நிக்கும். ரெண்டும்  ரெண்டு கண்ணு.

'' 75% கேக்கறது தான்  எதையுமே  கற்றுக்கொள்ள சிறந்த வழி. '' இது மாலி சொன்ன ரஹஸ்யம். 

மறைந்த பிரபல கர்நாடக சங்கீத வித்வான் செம்மங்குடி  ஸ்ரீனிவாசய்யரை ஒரு தடவை யாரோ  ''கர்நாடக சங்கீதத்தில்  ரொம்ப  டாப்  யாரு சொல்லுங்கோ?'' என்று கேட்டபோது அவர் 

''பதில் சொல்றது ரொம்ப சுலபம்:  மூணே பேர் தான்.  ஃப்ளுட்  மாலி, TN  ராஜரத்தினம் பிள்ளை நாகஸ்வரம், பால்காட் மணிஐயர் மிருதங்கம். அம்புட்டு தான் ''

மாலி தான் முதல் இடத்தில்....!  மாலி ஒரு மூடி moody  ஆசாமி. நேரத்துக்கு வரமாட்டார், ரசிகர்களை சபாகாரர்களை, பக்க வாத்யக் காரர்கள் பற்றிய கவலை துளியும் கிடையாது. பணம் பிரதானம் இல்லை.  அவர் வரமாட்டாரா என்று ரசிகர்கள் கொட்டும் மழையிலும் மணிக்கணக்காக  காத்திருப்பார்கள். மாலிக்கு மட்டும் நல்ல மூட் வந்து வாசித்தார் என்றால் அவ்வளவு சங்கீத தேவதைகளும் கை கட்டி எதிரே மண்டியிட்டு நிற்கும்.  நேரம் பாராமல்  இசையில் மூழ்கி எல்லோரையும் வேறு  நனைத்து விடுவார். எப்போது கிறுக்குத்தனம் வரும் என்று அவருக்கே தெரியாது.


மாலி  மைலாப்பூர்  பஜார் ரோடிலே  இருந்தார். (அங்கே தான் என் மனைவி சித்தப்பா இன்னொரு பெரிய புல்லாங்குழல் வித்துவான்  அகில இந்திய வானொலி நிலைய  புல்லாங்குழல் வித்துவான் கே.ஆர். கணபதியும் இருந்தார். நான் மறக்கமுடியாத ஒரு சிறந்த மனிதர். இசை ஞானி) .  

ஒரு ரசிகர் மாலியின் வீட்டுக்கு போனபோது மேலே மாடி ஜன்னலிலிருந்து தேவ  கானம் காற்றில் மிதந்து வந்தது. தரையில் படுத்துக் கொண்டு  சுவற்றில் தலைகாணியை சாய்த்து தலைக்கு  வைத்து  சுருதி பெட்டி   எதிர் சுவற்ற ருகே வைத்து அதை காலால்  இயங்கிக் கொண்டே,   (ஹார்மோனியம் மாதிரி அதை மூடி திறந்து இயக்கினால் தான் காற்று உள்ளே சென்று சுருதி கேட்கும்)  புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார். 

 என்ன  இப்படிப்பட்ட  அவமரியாதை.  ஸ்ருதி பெட்டி  ஸரஸ்வதியாச்சே. காலால் அதை தொடுவார்களா?என்று கேட்பவர்களுக்கு  அவருக்காக  பதில் சொல்கிறேன்..

''இல்லை தப்பு இல்லை...ஸரஸ்வதி தேவி  மாலியின்  சிறந்த தெய்வீக  இசையை கேட்க தயாராக இருந்தாள் . ஸ்ருதி போடக்கூட   ஆள் இல்லாமல்  பாவம் தன்னை வருத்திக் கொண்டு  அவர் அற்புதமாக  சுருதி பேதமில்லாமல் வாசிக்க முயல்கிறார்...தான் முதலில் திருப்தி அடைய முயற்சித்து அதை அப்புறம் எல்லோருக்கும் நன்றாக சமைத்த ருசியான உணவாக அனைவருக்கும் வழங்க தவிக்கிறார்.. வேறு யாரும் உதவுவதற்கு இல்லாதபோது  தனது கால்களால் சுருதிப் பெட்டியை   இயக்கிக் கொண்டது  தவறல்ல.  அந்த காலத்தில் பட்டனை அமுக்கினால் சுருதி வரும் மின் கருவிகளோ, வசதிகளோ இல்லையே .

\
பம்பாயில்  ஷண்முகானந்த சபா சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகைக்கு அங்கங்கே சிறிய வசதியற்ற ஈத்;ங்களில் சங்கீத நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த காலம் 1950களில்.   ஒரு முறை மாலி புல்லாங்குழல் கச்சேரி.   மாதுங்காவில் டான் பாஸ்கோ ஸ்கூல் மைதானத்தில் பந்தல்  பொங்கி வழிந்தது.  வந்ததே லேட். அப்புறம் உப்பு சப்பு இன்றி ஏதோ ஒரு  அரைகுறை  வாசிப்பு.  ரசிகர்கள் அமைதி இழந்து உறுமினார்கள் . சப்தம் போட்டார்கள். அரைமணி நேரம் ஓடிவிட்டது.  பாலகாட் மணி ஐயர்  மிருதங்கம்,  T N  கிருஷ்ணன் வயலின்.  ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு  ஏமாற்றத்தில் முடிந்து ஆத்திரம் கிளம்பியது.. கூச்சல்...

''என்ன சத்தம்? "  என்று இந்த உலகத்துக்கு வந்த  மாலி பாலகாட் மணி அய்யரை கேட்கிறார். 

''முடிச்சுடுங்கோ கச்சேரியை என்று ஜாடை காட்டுகிறார்  மணி ஐயர் "" 

ரசிகர்களின் அமளி, கோபக் கொந்தளிப்பு.  சிலர்  மாலியை , மணி அய்யரை  ஜாக்கிரதையாக மேடையிலிருந்து  மெதுவாக  காருக்கு கூட்டி செல்கிறார்கள்.   ஒரு முப்பது வயசு  காலிலிருந்து செருப்பை கழட்டிவிட்டு கையில் வைத்துக் கொண்டிருந்தது...... மாலியை  நோக்கி வீசியது....ஒருத்தன் புல்லாங்குழலை பிடுங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த  ரயில்  ட்ராக்குக்கு  ஓடுகிறான்.  அருகே   ரயில் வண்டி தண்டவாளம்  கிங் சர்க்கிள் - வடாலா நிலையங்கள் இடையே. யாரோ அந்த கோப  ரசிகனை  ஒருவழியாக
 சமாதானம் செய்து புல்லாங்குழலை ஜாக்கிரதையாக  திரும்ப கொண்டுவருகிறார்.  மாலி சென்னை திரும்பி ஒரு மன்னிப்பு கடிதம் எழுதுகிறார்.  இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்தால் அற்புதமாக வாசிக்கிறேன்.... என்கிறார். ஒரு வருஷம் கழித்து அது நிறைவேறியது. 

''வரமுலு  சாக்கி ப்ரோவு...'' கீர்வாணி யில்  எடுப்பு வேணுகானத்தில்  விண்ணுலகிலிருந்து சுதந்திரமாக  கற்பனா சக்தியோடு தைவதத்தில் ராஜகம்பீரத்தோடு  மிதந்து வந்தது. வழக்கமான பஞ்சமத்தை காணோம். 
பரி தான மிஞ்சிதே (பிலஹரியில்)  பல்லவி முடியும் இடத்தில்  காகலி  நிஷாத சங்கதி அற்புதமாக பேசியது. ரசிகர்கள் மெய்ம்மறந்து மயிர்க்கூச்செறி வோடு சங்கீத  தேன் கடலில் மூழ்கி கொண்டிருந் தார்கள்.  தன்னால் சிறப்பாக தான் விரும்பியதை, உணர்வை கொண்டுவர முடியாத நேரத்தில் அதிருப்தியில், செய்வதறியாது  ஆர்வம் குறைந்து மாலி ரசிகர்களை வாட்டி விடுவார். என்ன செய்வது அந்த மஹா வித்வான் குணம் அப்படி. 

 மாலி  மோர்சிங் மற்றும் இதர வித்வான் களுக்கும் கச்சேரிகளில் நிறைய நல்ல சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்று பரந்த மனம் கொண்டு தன்னுடைய  கச்சேரிகளில் அவர்களை  வாசிக்க வைப்பார்.

ஒரு தடவை  தனக்கு வாசிக்கும் பிடில் வித்துவான்  பாப்பா வெங்கட்ராமய்யரை ''உங்களுக்கு வீணை தனம்மாள்  பதங்கள் தெரியுமே. எனக்கு ஒரு பதம் சொல்லித் தாருங்கள்'' என்கிறார்.

''அவ்வளவு சீக்கிரம் பிடி படாதே. நிறைய கால அவகாசம் இழுக்குமே''

''பரவாயில்லே நீங்கள் சொல்லுங்கள் நான் பிடித்துக்கொள்கிறேன்...அப்புறம் என்ன ...... அந்த மஹா வித்வான்  குறைந்த சில  மணி நேரங்களில்  அதை முறையாக கற்றார்''  மாலி யின் அன்றைய சாயங்காலம் கச்சேரியில்  துளியும் பிசகில்லாமல் வெகு அற்புதமாக அந்த பதத்தை  நீண்ட காலம் தொடர்ந்து வாசித்தவர் போல் கொஞ்சமும்  ஒதுக்கல் செதுக்கல் இல்லாமல் புல்லாங்குழலில் வாசித்து  பாப்பா வெங்கட்ராமையர் அசந்து போனார்   

''நீங்க ஒரு மஹான். தெய்வீக சங்கீத வித்வான்'' என புகழ்ந்தார். 

FOR  SAMPLE  I AM  GIVING  AN ENCHANTING  MOHANAM PRESENTATION BY TRM . CLICK THE LINK  https://youtu.be/wG3oINWmkTI

SWAMIJI'S TIME




SWAMIJI’S TIME      J K  SIVAN
SRI RAMAKRISHNA PARAMAHAMSA

                                      MY MASTER

His religion means ecstasy, his worship means transcendental insight, his whole nature burns day and night with the permanent fire and fever of a strange faith and feeling. His conversation is a Ceaseless  breaking forth of this inward fire and lasts long hours- While his interlocutors are weary, 'he, though outwardly feeble,  is as fresh as ever. He merges into rapturous ecstasy and outward unconsciousness often during the day, oftenest in conversation when he speaks of his favorite spiritual experiences, or hears any striking response to them. But how is it possible that he has such a fervent regard for all the Hindu deities together?

What is the secret of his singular eclecticism? To him each of these deities is a force, an incarnated principle tending to reveal the supreme relation of the soul to that eternal and formless Being Who is unchangeable in His blessedness and the Light of Wisdom.

Take for instance Shiva. The saint views and realizes Shiva as the incarnation of contemplativeness and Yoga. Forgetful of all
worldly care and concern, merged and absorbed in Samadhi, in the meditation of the inefifable perfections of the supreme Brahman,
insensible to pain and privation, toil and loneliness, ever joyful in the blessedness of Divine communion, calm, silent, serene, immo
 vable 
 like the Himalayas where his abode is, Mahadeo is the ideal of all contemplative and self-absorbed men. The  venomous serpents of evil and worldliness coil around his beatified form but cannot hurt him. The presence of death surrounds him in various forms of dread and danger, but cannot daunt him. Shiva takes upon himself the burdens and cares of all the world, and swallows the deadliest poison to confer immortality upon others. Shiva renounces  all wealth and enjoyment for the benefit of others, makes his faithful wife the companion of his austerities and solitude, and takes the ashes and the tiger skin as his only ornaments. Shiva is the god of the Yogis. And this good man, while expatiating on the attributes of Shiva, would be immersed in the sublimity of his ideal, and become entranced, and remain unconscious for a long time.

GEETANJALI




கீதாஞ்சலி J K SIVAN
ரவீந்திரநாத் தாகூர்
22 வழிமேல்  விழி
22 . In  the deep shadows of the rainy July,
with secret steps, thou walkest,
silent as night, eluding all watchers.
Today the morning has closed its eyes,
heedless of the insistent calls
of the loud east wind,
and a thick veil has been drawn
over the ever-wakeful blue sky.
The woodlands have hushed their songs,
and doors are all shut at every house. Thou art the solitary wayfarer
in this deserted street. Oh my only friend, my best beloved,
the gates are open in my house---do not pass by like a dream.

மழை அறிகுறி  ஜூலை  மாதம்  நன்றாகவே  தெரிந்து  விடும். கிருஷ்ணா,  வாடைக் காற்று உடலை ஊடுருவி செல்லும்.  நீ  நடப்பது சந்தடி இல்லாமல் எவர் கவனமும் கலையாமல், எதிலும் சம்பந்தம் இல்லாதவன். இரவைப் போலவே,   இருளைப் போலவே,  நீ அமைதியானவன்.  யார் பார்த்தால்  என்ன, பார்க்கா விட்டால்என்ன? நினைப்பவனுக்கு  நீ  மனதில் தோன்றுபவன்.

இன்று என்னவோ  காலை வேளையே ஒளிகுன்றி  இருக்கிறதோ  கிழக்கே  மலைகளின் உச்சியிலிருந்து  இருந்து தொடர்ச்சியாக பலமான குளிர் காற்று வீச்சு அதிகரித்தே வருகிறது.  அதோடு  சூரியனை  மறைத்த, திரை போட்ட  மேகங்களினால் பகல் இரவாகவே  காட்சி அளிக்கிறது.   மரங்களின் அசைவு ஒலியோடு.  புழுதி தரையிலிருந்து மேலே எழும்பி காற்றில் புகை மண்டலம் போடுகிறது.  விழித்துக் கொண்டிருக் கும் நீல வானமே தெரியவில்லை. தட்டி
தூங்க வைக்கிறது கரு மேக  கூட்டங்கள்.  ஆம்    சூரியனை சுற்றி  ஒருபெரிய கருப்பு மேகத் திரை.

அடர்ந்த காடுகளில் இருந்து மூங்கில்கள் உராய்ந்து காற்றில் உன் வேணுகானமாக ஏதோ இனிமையான சப்தம் கேட்பது  மெலிதாக குறைந்துவிட்டது.  காற்றில் திசை மாறி  எங்கோ சென்று விட்டு அந்த இனிய ஓசை   எங்கிருந்தோ காற்றில் மிதந்து  வந்து என்  செவியில் இன்பத்து தேனாக  நுழைகிறது.  எங்கள் கிராமத்தில் வீடுகளே  கம்மி. அதில் எல்லாவற்றிலும் கதவுகள் ஜன்னல்கள் எல்லாமே  மூடி  பல ஜாமங்கள் ஆனதை போல் காட்சி அளிக்கிறது.  எல்லோரும் தூங்கிவிட் டார்கள். காற்று கதவுகளைப்  பிய்த்துக் கொண்டு பறக்கிறது.  கிருஷ்ணா, ஜன நடமாட்டமே இல்லாத இந்த தனிமையான நிசப்தமான   ஒற்றையடிப்  பாதையில்  நீ  ஒருவன்  மட்டும்  வழி தவறிய வழிப் போக்கனோ  அல்லது  வழக்கமான  வழி தெரிந்தனா??

கிருஷ்ணா, என்  கதவுகளை  மற்றவர்கள்  போல்  நான்  மூடி வைக்க வில்லை. திறந்தே  வைத்திருக்கிறேன். நீ  ஒருவனே  என் நண்பன். உண்மை அன்பன். வா  கிருஷ்ணா  வா, என் நெஞ்சக் கதவும்  கோட்டை  வாசல் போல்  அகன்று திறந்து இருக்கிறது. நீ வருவாய் என என்னால் உணர முடிகிறது.  கனவு போல் கண் சிமிட்டி மறையாதே.

Sunday, September 29, 2019

CIVILIZATION



உலகம் யாவையும்  தாமுள..... J K SIVAN .

நமது நாடு  புராதனமானது.  இதில் யாருக்குமே  சந்தேகமில்லை. ஆசியாவிற்கு தெற்கே இருக்கும் மூன்று தீபகற்பங்களில் இந்தியா ஒன்று. இந்த விசித்திர தேசத்தில் எண்ணற்ற  ஜாதி, சீதோஷ்ண நிலை, மொழிகள், மக்கள் பழக்க வழக்கங்கள்.

வடக்கே குளிர், தெற்கே  சூடு.  சிந்து நதி சமவெளி நாகரீகத்தால் சிந்தியா வாக  இருந்து இந்தியாவாக என்றும்  ஆங்கிலத்தில்  ் indus   என்று  சிந்துவை நாமகரணம் செய்து அதால்  india  என்றும் பெயர் வந்தது என்பார்கள். இப்படி அழைத்தவர்கள்  கிரேக்கர்கள். அலெக்சாண்டர் காலத்தவர்கள். 

 ஆயிரமாயிரம் வருஷங்களில் அப்போதிருந்த  கடல் வற்றி  உலோகம் கலந்த மணல் நிரம்பி இருந்தது.  நமது  பாரத தேசத்தில் ராஜபுதனம் பாலையாகியது. மால்வா வுக்கும் பஞ்சாபிற்கும் இடையே  பாலைவனம். மேற்கே இப்படி என்றால் வடக்கே, பனி மலைகள், சிகரங்கள், அதன் அடியே  காடுகள்.   கிழக்கே மலைத்தொடர்கள்.  நடுவே  பரந்த பீட பூமி. விந்திய மலை. தெற்கே  செல்லச் செல்ல  தேசம் குறுகலாக. ஒரு பக்கம்  மேற்குத் தொடர்ச்சி மலைகள், இன்னொரு பக்கம் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.  மேற்கே கரிசல் மண். கிழக்கே  செம்மண். மேற்கு தொடர்ச்சி பகுதியில் கொங்கணம்   என்றும், இப்போதைய  கர்நாடகாவும் பரந்த வளமான பிரதேசங்கள்.    மகாராஷ்டிரா அளவுக்கு  குஜராத்  பூமி வளமுள்ளது அல்ல.

  கடலை ஒட்டி  உப்பு  அமோகம்.  தெற்கே  ராமேஸ்வரம் வரை  அமோக விளைச்சல் பிரதேசம். காவிரி  உபயம். தஞ்சாவூர் ஜில்லா உணவுக் களஞ்சியம்.

மேற்கே  கடலை ஒட்டிய  கொங்கண்  மலபார்  பிரதேச மக்கள்  கடலை நம்பி வாழ்பவர்கள். படகு இல்லாதவர்களே  கிடையாது.  மேற்கிலிருந்து அரபு நாடுகளுக்கு  இது கடல் பாதை.   அதனால் அனேக  வெளிநாட்டவர் இங்கே  வர வழைத்து  விட்டது.. தெற்கே  விந்தியா, மேற்குத் தொடர்ச்சி, கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கிடையே  தக்ஷிண பிரதேசம். முரட்டு  வெளிநாட்டவரால் தோற்கடிக்கப்பட்டு  இங்கு குடியேறிய வர்களுக்கு இப்பிரதேசம்  பாதுகாப்பளித்தது. 
வெளிநாட்டவர்கள்  பாலைவன ஒட்டக பிரயாணிகள்.  இவ்வளவு வளமான  பளிங்கு நீர் வளமான பிரதேசம் கனவில் கூட கண்டதில்லை.  ஆகவே  சிந்து, கங்கை,  பிரம்ம புத்ரா நதிப் பிரதேசம் அவர்களின்  சொர்க்க பூமி.  புதிய  வாழ்க்கை அமைப்பு, அந்நிய மொழிகள் மெதுவாக எங்கும் பரவின.


ஆரம்பகாலத்தில்  கற்களை,  மிருக எலும்புகளை  ஆயுதமாக கருவிகளாக பயன்படுத்தி வாழ்ந்த காலம் தான் கற்காலம். அவர்கள்  மலை அடிவாரங்கள்,  குகைகள், மரங்கள் இயற்கை அளித்த பெரும் பொந்துகள்  அளித்த  பாதுகாப்பில் மட்டுமே வாழ்ந்தவர்கள். வீடு வாசல் அமைக்க தெரிந்து கொள்ள வில்லை. மண்ணை உபயோகிக்க, மண் பாண்டங்கள் செய்ய தெரியாதவர்கள்.   மிருக தோல்களை அணிந்து, புல் தரையை மெத்தையாக்கி படுத்தவர்கள். அந்தமான் நிகோபார் தீவுகளில் பழங்குடியினர் இன்னும் இருக்கிறார்கள்.  வேட்டையாடி மீன் பிடித்து வாழ்கிறார்கள். நமது உலகம் எப்படியெல்லாம் மக்களை ரக்ஷிக்கிறது பாருங்கள்.  வடக்கே பனி மலைகள், பள்ளத்தாக்குகள், காஷ்மீர் ஒரு உதாரணமே போதும். 

இருண்ட கண்டம் எனும் ஆப்பிரிக்காவில் மக்கள் கருமையான திடகாத்திர உடலோடு, சப்பை மூக்கோடு, சுருண்ட கேசத்தோடு இன்னும்  இருக்கிறார்கள். அவர்கள் மொழிகள் விசித்திரமாக இருக்கிறது கேட்பதற்கு.  இதேபோல்   தெற்கு  பசிபிக் சமுத்திர

கரைகளில் வாழ்பவர்கள் உண்டு. இன்னும் மேலே  சீனர்கள் மாதிரி மஞ்சள் நிறம், சிறிய கண்கள், சுருக்கமில்லாத ரோமம், குறுகிய உருவம் அமுக்கியது மாதிரி கொஞ்சம் உள்ளடங்கிய மூக்கு மக்கள்.  திபெத்தியர், நேபாளிகள், பூட்டான் தேசத்தவர் என்று. அவர்களே பரவலாக  மேல் கிழக்கிலும் அஸ்ஸாம் பகுதியிலும். என்ன ஒரு கலந்து கட்டியாக பகவானின் படைப்பு.  வித்யாசமான நாகரிக வாழ்க்கை முறை.ஒரு இடத்திலிருந்து சிலர்  மற்ற இடங்களுக்கு சென்று தங்களது நாகரிகம், பண்பாட்டை அங்கே பரப்ப அங்கிருப்பவர்கள் இங்கே வந்து அவர்களது வழிமுறைகளை பரப்ப எங்கும் எதுவுமாகிவிட்டது.சுப்ரமணிய சர்மா சற்று வேறு  மாதிரியாக காட்சியளிப்பதற்கு  அவரது  சில முன்னோர்களை தேடி கண்டுபிடித்து காரணம் அறிய யாருக்கு நேரமிருக்கிறது. அதனால் தான் நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

KAALAMEGAM

தமிழ் புலவர்கள்     J K  SIVAN 
காளமேகம்.

                                                        இரட்டை அர்த்தம். 

நான் சொல்லும் அர்த்தம் தமிழ் சினிமாவில், டிவியில்  பேசப்படும் ரெட்டை அர்த்தம் கொண்ட கெட்ட வார்த்தை அல்ல.

நான்  காரைக்கால் ஒரு கப்பல் விஷயமாக சென்றிருந்த போது அங்கே சில நாட்கள் தங்க ஒரு இடம் தேடியபோது அருகே  T.R. பட்டினத்தில் தங்க வசதியான வீடு கிடைக்கும் என்றதால் அங்கே சுற்றினேன்.  அப்போது.    TR பட்டினம் என்றால் என்ன என்று தெருவில் கடைகளில் காணப்பட்ட விலாசங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். திருமலை ராயன் பட்டினம்.  அட  இது எங்கோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று மூளையை கசக்கிக் கொண்டபோது காளமேகம் சிரித்தான். ''என் ஊரு ஐயா''

காளமேகம் என்ற  தமிழ் புலவனின்  தனித் தன்மை அவனை மற்றவர்களிடமிருந்து  பிரித்து  உயர்த்துகிறது.   ஸரஸ்வதி அருளால் திடீரென்று  கல்வி அறிவில்லாத  ஆடு மாடு மேய்க்கும் ஒருவன் ஓரிரவில் சிறந்த கவிஞன் ஆகிறான். 

அவன் இயற்பெயர் வரதன்.  ஒரு வைஷ்ணவன். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய மடப்பள்ளி சமையல் காரன்.  அருகே  திருவானைக்கா கோவிலில் நாட்டியக்காரி மோகனாங்கியோ  சிவ பக்தை . அவள் மேல் காதல் கொண்டு அவளால்  சைவனாகிறான்.  ஒரு மாலை நேரம், அவளை  சந்திக்க  திருவானைக்கா ஆலயமண்டபத்தில் காத்திருந்தவன் அப்படியே தூங்க,  மண்டபத்தின் இன்னொரு பக்கம் வெகுநாளாக சரஸ்வதியை வேண்டி தவமிருந்த ஒரு பிராமணனுக்கு   அன்றிரவு  ஸரஸ்வதி  ப்ரத்யக்ஷமாகி பிராம்மணன் வாயில் தனது எச்சில் தாம்பூலம் அளிக்கவருகிறாள். எச்சில் வேண்டாம் என்று  அவன் மறுக்க, ஸரஸ்வதி  வாயைப்பிளந்து கொண்டு நன்றாகத்  தூங்கிக் கொண்டிருந்த வரதனை எழுப்பி  அவன் வாயில் தாம்பூலம் தருகிறாள்.  கனவில் தன் காதலி தான் வாயில் தாம்பூலம் அளிக்கிறாள் என்று அரைத்தூக்கத்தில் வரதன் சந்தோஷமாக அதை வாய் நிறைய  பெற்றுக் கொள்கிறான். கலைமகள் அருளினால் காதலிக்கு காத்திருந்த வரதன்  கால மெல்லாம் நம்மை மகிழ்விக்கும் கவி காளமேகமானான். மற்றவை புத்தகங்கள், படங்களில் அறிந்து கொள்க. 

காளமேகம் சிலேடை எனும் இரு பொருள் தரும் கவிகள் இயற்றுவதில் மன்னன். மாடலுக்கு (மாதிரிக்கு) ஒரு சில இங்கே பார்ப்போமா? இது முதலாவது.சந்திரனுக்கும் மலைக்கும்

நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலாற் சென்று – தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகராக வழுத்து

 சந்திரன் தான்  நிலா.  நீண்ட வானத்தில் படிந்து சில நேரங்களில் உலாவுகிறது. தலைக்கு மேல் தோன்றி நகர்கிறது.  அதேபோல் மலையானது நிலத்தின் வாய் போலப் பிளவு பிளவாக  அடுக்குகளோடு காணப்படுகிறது. நீண்ட வானத்தில் படிந்திருப்பது போலத் தோன்றுகிறது. சில வேளைகளில் நாம் மலைமேல் உலாவி வருகிறோம். நமது கண்ணுக்கு  அண்ணாந்து பார்க்கும்படியாக  மேலே  உயரமாக  மலை  தோன்றுகிறது.

இன்னொரு சிலேடை . இதில் ஒரே பாடல்  இரு பொருள் தந்து ஒரு அர்த்தம்  நாயையும்  இன்னொரு அர்த்தம் தேங்காயையும்  குறிக்கிறது பாருங்கள்ல்.

ஓடு மிருக்கும்அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு .

 நாய்  ஓடும். ஒரு இடத்தில் இருக்கும். தேங்காய்க்கு ஓடு இருக்கும். நாய் வாய் திறந்து நாக்கை தொங்க விட்டுக்கொண்டு இருக்கும். திறந்த வாய் உள்ளே சிவப்பாக வெள்ளை பற்கள் தெரிய  தேங்காய் உடைத்தால் உள்ளே வெள்ளையாக இருக்கும். தென்னை  குலை தள்ளும்.  நாய் குலைத்து தள்ளும். ஓயாது.  தோழி  திருமலை ராயன் ஊரில் நாய் தேங்காயான அதிசயத்தை பார் என்று அற்புதமாக பாடுகிறார் காளமேக புலவர். 

 தலையில் எவரிடமிருந்தாவது ஒட்டிக்கொண்ட  பேன்  அரித்து உயிரை  வாங்கும் அனுபவம் உண்டா? எனக்கு சின்ன வயதில் உண்டு.  அந்த பேனும்  மீனும்  ஒன்றே தான் என்று சத்தியம் செய்வீர்களா? செயகிறார்  காளமேகம் இந்த பாடலில். பாடல் ரெண்டு அர்த்தம் தரும் சிலேடை கவிதை ..

மன்னீரிலே பிறக்கும்  மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரி யாமே.

மீன்  நிலையாக இருக்கும் நீரில் பிறக்கிறது. நீரின் அலையில் தானும் ஆடி அசையும். குதித்து நீச்சலிடும். செங்குத்தாக தாவி தண்ணீரில் அமிழும். திரும்பவும் இதே விளையாட்டு.

பேன்  தலையில் சேர்ந்து கொண்ட நிலையான  ஈரில்  பிறக்கிறது. அளவில் பெருகி தலையிலே மேயும்.   தலையை இழைய வாரி, இதற்கென்றே  பிளாஸ்டிக் மரத்தில் பேன்  சீப்பு, ஈர்க்கொல்லி என்று பல் பல்லாக ஒரு சீப்பு உண்டு.  அதால் குத்தி கொள்ளப்படும். சோலை மலர்களில் தேன்  ததும்பும், திருமலைராயன் ஊரில்  பேனும்  மீனும் சரி தானய்யா.

நேரமிருந்தபோது இன்னும் நிறைய தெரிந்துகொள்ளலாம்.



AINDHAM VEDHAM




ஐந்தாம் வேதம்     J K SIVAN
  
                              கூடா   நட்பு 

பீஷ்மர் நீளமாக யுதிஷ்டிரனுக்கு  ராஜ்ய மாள்வதில் உள்ள பிரச்னைகளை எடுத்துச் சொல்வது  காதில் நுழாததன்  காரணம் நாம்  எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றாலும் ஆளும் பிரச்சனையை  மந்திரிகளிடம் விட்டுவிட்டோம்.  அவர்கள் தங்களை நன்றாகப் ''பார்த்துக் கொண்டு'' நேரமிருந்தால் நம்மையும் '' ஒரு கை '' பார்த்துவிட  மாட்டார்களா? 
இந்த சம்பாஷணையில்  நடு நடுவே  பீஷ்மர் கதை ஏதாவது  சொன்னால் சுவாரஸ்யமாக இருந்தால் நாமும் கேட்போம் என்று நாம் நினைக்கும்போது பீஷ்மர் ஒரு குட்டிக்கதை சொல்கிறார்:

''ஜனமேஜயா , பீஷ்ம பிதாமகர், யுதிஷ்டிரனுக்கு ஒரு எலி பூனை கதையை சொல்கிறார்'' என்று உரைக்கிறார் வைசம்பாயன ரிஷி.  அதன் தத்துவம் என்னவென்றால் நட்பு என்பது ஜன்ம பகைவர்களுக்கு இடையே இருப்பது இயலாத காரியம் என்பதை புரிய வைக்க . சுமுகமாக  ஒருவருக்கொருவர் உதவுவதும் பழகுவதும் வேறு .சிறந்த  அத்தியந்த  நம்பகமான நெருங்கிய நட்பு வேறு. இவ்வாறே தான் மதத்திலும் எதிர்மறையாக கொள்கைகள் கோட்பாடுகள் கொண்டவர்கள் இணைந் திருக்க முடியாது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவரவர் தார்மீக சம்பிர தாயங்களில் ஈடுபடுவதை எதிர்க்காமல் இருப்பது. ஒருவர் தமது கொள்கை கோட்பாடே உயர்ந்தது மற்றவர்களது தாழ்ந்தது என்று இகழாமல் இருப்பதே பரஸ்பர நட்புக்கு ஆதாரம். இதை  உணர்த்த தான் உனக்கு  ஒரு கதை  சொல்கிறேன் கேள்: 

''யுதிஷ்டிரா, ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பாலிதன் என்ற எலி வளையில் வாழ்ந்தது.. மரத்தில் எண்ணற்ற பறவைகள், ஊர்வன, போன்ற ஜந்துக்கள் உயிர்களின் குடும்பங்கள் வாழ்ந்தன. எதிரிகள் ஒருவரையொருவர் உண்டு வாழும் வகையினரும் இருந்தாலும் எப்படியோ நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.     அந்த மரத்தின்  ஒரு கிளையில் லோமசன் என்ற பூனை குட்டிகளோடு தங்கி வாழ்ந்தது.

ஒருநாள் அங்கே வந்த ஒரு வேடன் நிறைய பறவைகள் விலங்குகள் அங்கே இருப்பதை கண்டு கீழே வலை விரித்தான். பறவைகளோ விலங்குகளோ அகப்படும். கொன்று தின்னவோ, விற்கவோ முடியுமே. மாமிசத் துண்டுகளை வலையில் தூவினான்.

லோமசன் என்ற பூனை வேடன் விரித்த  வலையில் மாமிசத்துண்டுக்கு ஆசைப்பட்டு நடக்க,  அதன் கை கால்கள் வலையில் மாட்டிக் கொண்டது. வேடன் வந்தால் பூனையைக் கொன்றுவிடுவான். இது சர்வ நிச்சயம். பறவைகளும் மிருகங்களும் வருந்தின. எப்படி உதவுவது. பாலிதன் துணிந்து உதவ முன் வந்தது.

''லோமசா, நான் எப்படியாவது வலையை பற்களினால் கடித்து உன்னை விடுக்கிறேன். ஆனால் உன்னால் என் உயிர் போய்விடுமே. உன்னுயிரைக் காப்பாற்ற போக உன்னாலேயே என்னுயிர் போவது புத்திசாலித்தன மில்லையே''. என்றது பாலிதன் எனும் எலி.

'' நண்பா. என் உயிர் காப்பாற்றிய நீ என் உயிர்த்  துணைவன். உன்னை கொல்ல மாட்டேன் இது சத்தியம்'' என்றது லோமச பூனை.

மேலே ஒரு ஆந்தை, கழுகு ஆகியவை பார்த்துக் கொண்டிருந்தன. ''நண்பா நான் வெளியே வந்தால்   ஆந்தையோ, கழுகோ, அதோ ஒரு கீரிப் பிள்ளை வேறு இருக்கிறதே. ஏதாவது ஒன்று என்னை கொத்தி, தூக்கிக் கொண்டு போய்விடுமே. எப்படி வெளியே வருவது உனக்கு உதவுவது ? என்றான் பாலித எலி.

''நான் குரல் கொடுத்தால் அவை அருகில் வராது. நீ வா. என் உடலை ஒட்டி வந்து விடு. அவை என் அருகில் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றது லோமசன்''

''ஆபத்துக்கு தோஷமில்லை, உன்னை நம்பி உன் அருகே வந்து உன்னை காப்பாற்றுகிறேன்'' என்ற பாலிதன் மெதுவாக வெளியே வந்து பூனையின் பக்கமாக நகர்ந்து அதன் வயிற்றின் அடியில் பதுங்கி நகர்ந்து கொண்டே போய் அடியில் வலையை அடைந்தது.

சொன்ன வார்த்தையை காப்பாற்றி பூனையும் எலியை தனது வயிற்றுக்கடியில் ஊர்ந்து நகர்ந்து கால் கைகளை வலையிலிருந்து விடுவிக்க இடம் கொடுத்தது. பாலிதன் நிதானமாக கடித்து வலையை துண்டித்து பூனையின் கை கால்களை விடுவிக்க முயற்சித்தது..

இந்த ஆச்சரியத்தை ஹரிதன் என்கிற கீரிப்பிள்ளையும், சந்திரகன் என்கிற ஆந்தையும் பார்த்துக் கொண்டு இருந்தன. பாலிதன் தனது உயிரை பணயம் வைத்து எதிரி பூனையின் உயிரை காப்பாற்றுவது என்பது ஒரு தியாகம் அல்லவா?

''ஏன் மெதுவாக நிதானமாக வலையை கடிக்கிறாய். வேகமாக கடியேன்? என்று லோமசன் கேட்க, பாலிதன் ''நண்பா அததற்கு நேரம் இருக்கிறது. இப்போது நான் உன்னை விடுவித்தால் நீ என்னை கொல்லாமல் விடமாட்டாய். நீ ஏற்கனவே பசியில் வாடிக்கொண்டிருப்பவன். என்னை விடுவாயா? பசியால் வாடும்போது கண்ணுக்கு எதிரே உள்ள ஆகாரத்தை யார் விடுவார்கள்?

அதோ அந்த வேடன் வருகிறான். அவன் உன்னை பார்த்து சந்தோஷமாக உன்னை கொல்ல வரும் நேரத்தில் உன்னை விடுவித்தால், அந்த ஆபத்தான நேரத்தில் வேடனிடமிருந்து உன் உயிர் தப்ப நீ மரக்கிளைக்கு தாவி ஓடுவாய். நான் என் வளைக்குள் ஓடி பிழைப்பேன் அல்லவா? அப்போது உன் முழு கவனமும் எண்ணமும் நீ உயிர் தப்புவதில் தான் இருக்கும். என்னை கொல்வதில் இருக்காதே! அதனால் தான் அவன் அருகே வரும் வரை நேரம் எடுத்துக் கொள் கிறேன். இதனால் நானும் தப்புவேன் நீயும் தப்புவாய். அதற்கு முன் உன்னை நம்பி உதவுவது அறிவீனம்.'' என்று சமயோசிதமாக பதில் சொன்னது பாலித எலி.

''என்னை எப்படியாவது காப்பாற்றிவிடு நண்பா'' என்றது லோமசன். விஷப்பாம்பை வைத்துக் கொண்டு பிழைப்பவன் அதன் விஷத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு தான் அதை வைத்து பிழைப்பான். உன் விஷயத்தில் பயத்தோடு நட்பு என்பது நடவாத காரியம்.

பரிகன் என்கிற வேடன் அங்கே வருவதை இருவரும் பார்த்தார்கள். தூரத்தில் தன வலையில் ஒரு பெரிய பூனை அகப்பட்டது கண்டு மகிழ்ந்து மெதுவாக வந்தான் அவன். பூனை பயத்தில் நடுங்கியது. பாலிதன் வேகமாக வலையை கடித்து துண்டாக்கி கொண்டிருந்தது.

அருகில் பரிகன் வந்தபோது பூனை வலையிலிருந்து எகிறி குதித்து மரக்கிளைக்கு தாவி விட்டதை ஏமாற்றத்தோடு பார்த்தான் . அதற்குள் பாலிதன் தனது வளைக்குள் பாய்ந்து ஓடி ஒளிந்து கொண்டது.

எந்த விலங்கும்  பறவையும் பிடிபடாததால் பரிகன் வலையை எடுத்து சுருட்டிக் கொண்டு அங்கிருந்து வேறு மரத்திற்கு சென்றான். பிறகு லோமசன் எலியின் பொந்துக்குள் எட்டிப் பார்த்து, நண்பா வெளியே வா உனக்கு என் குடும்பமே நன்றி சொல்ல காத்திருக்கிறது. என் உயிர் காத்தவன் நீ அல்லவா?'' என்று கண்களில் நன்றிக் கண்ணீரோடு அழைத்தது.

''நண்பன் யார் எதிரி யார் என்று சரியாக கணித்த பிறகே நட்பு பொருந்தும். என்றுமே பூனையும் எலியும் நட்பு கொள்ள முடியாதப்பா. சந்தர்ப்பங்கள் தான் நட்பையும் விரோதத் தையும் வளர்ப்பது. உன் ஆபத்தில் உதவினேன் அது நட்பல்ல, பிற உயிர் மேல் உள்ள அபிமானம். அக்கறை . அவ்வளவு தான். நட்போ விரோதமோ என்றும் சாஸ்வதம் அல்ல. பொருந்தாத, கூடாத நட்பு வெறும் கனவு. சுயநலம் பொது  நல மாகாதே.! உன் சுய நலத்தால் தானே வலையில் இருந்த மாமிசம் ஆபத்தானது என்றும் கருதாமல் பேராசையில் சிக்கி மாட்டிக் கொண்டாய். எதை நம்பி உன் மேல் நான் நம்பிக்கை வைத்து உன்னோடு பழக முடியும்?  ஏதோ ஒரு காரண காரியத்தால் ஏற்படுவது உண்மை நட்பல்ல. இயற்கை யாகவே நான் உனது வழக்கமான  பிடித்த ஆகாரம். நமது உறவு ஒரு யுத்தத்தில் சமாதானம் போன்றது. சாஸ்வதமல்ல. சந்தர்ப்ப வசமானது.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். என் உயிரும் உடலும் உன் வயிற்றில் போகும். இது தான் நட்பா?

ஒரு பொது எதிரி வந்த போது ஒரு வலிமையானவனும், பலஹீனமானவனும் சேர்ந்து அந்த மூன்றாம் மனித எதிரியை எதிர்த்தோம். அவன் சென்ற  பிறகு நாம் எப்படி சரி சமானமானவர்கள் ஆவோம். நம்முள் பலகாலமாக இருக்கும் பகை அழிந்தா போகும்? என் குலமே உன் குலத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி தப்புவதே முறையானது. அறிவு பூர்வமானது.  நட்பு என்ற பேச்சுக்கே  நமக்குள் இடமில்லை.என்றது பாலிதன் என்ற எலி''  என்று கதையை   முடித்தார் பீஷ்மர்..

''யுதிஷ்டிரா இதை எதற்காக சொன்னேன் தெரியுமா. உனது உறவு மற்ற அரசர்களோடு, அவர்கள் பலத்துக்கு, உனது நலத்துக்கு தக்கவாறு அமையவேண்டும். உன் நம்பிக்கை உன்னை சேர்ந்தவர்களிடம் எப்படி சரியாக கணிப்புடன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தான்.'' என்கிறார் பீஷ்மர்.

மஹாபாரதத்தில் எண்ணற்ற உப கதைகள் உள்ளன. தேர்ந்தெடுத்து அவற்றை வழங்க நேரம் அதிகம் பிடிக்கிறது. இருந்தும் அந்த முயற்சியில் விக்ரமாதித்தன் போல் நானும் தளரவில்லை.

   

DOCTOR


மாந்தரில்  தெய்வம் உண்டு
                                                                                            

                                                   J.K. SIVAN

சில நாள் முன்னால் ரயிலில் போகும்போது படித்த ஒரு சின்ன ஆங்கில கதை நினைவுக்கு வந்தது. படித்தேன். அது என்னவோ என் மனதில் ஓட்டிக்கொண்டுவிட்டது. அதை தமிழில் நம்மூர் ஆசாமி கதையாக்கி சொல்கிறேன்.


வைத்யநாதன் பெயருக்கேற்றபடி ஒரு நல்ல டாக்டர், சர்ஜன், என்பதால் அவர்  ஆப்பரேஷன்  செய்தால் வெற்றி காரண்டீ என்பதால்    டாக்டர்  கே.வி. க்கு  டிமாண்ட் எப்போதும்.

ஒரு நாள் ஒரு அவசர டெலிபோன் கால்.  டாக்டர் கிளம்பிவிட்டார் ஆஸ்பத்திரிக்கு. அர்ஜன்ட் ஆப்பரேஷன் ஒன்று .    இன்னும் அரைமணி நேரம் தான் இருந்தது. எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட்டன. டாக்டர்  KV க்காக ஆபரேஷன் தியேட்டரில் எல்லாரும் காத்திருக்கிறார்கள்.. எந்த நேரமும் வரலாம். ஏன் இன்னும் காணோம் ?.

இன்னும் முக்கால் மணிநேரத்தில் ஒரு பையனுக்கு அவசர ஆபரேஷன். பையனின் அப்பா குட்டி போட்ட பூனை. அங்கும் இங்கும் அலைந்து கொண்டு நிம்மதி இல்லாமல்  கடியாரத்தையும் வாசலையும் பார்த்துக்கொண்டு பெருமூச்சு அனலாக விடுகிறார்.  ஏன்  சர்ஜன் டாக்டர்  KV  வரலை? நர்ஸ்கள், யூனிஃபாம் ஆட்கள் அவசரமாக ஓடினார்கள். எல்லோரும் தியேட்டரில் குழுமிவிட்டார்கள். டாக்டர் அவசரமாக வந்து  உள்ளே ஆபரேஷன் தியேட்டருக்கு ஓடும்போது அப்பா பிடித்து நிறுத்தினார்.

''என்ன டாக்டர் இவ்வளவு நாழி?  எமெர்ஜென்சி கேஸ்ன்னாகூட இவ்வளவு லேட்டாவா வரது. என் பையன் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறதே இங்கே. கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்? பொரிந்து தள்ளிவிட்டார் அப்பா.

''மன்னிக்கணும் சார். நான் வீட்டுலே  இல்லே, இன்னிக்கு வெளியே  கொஞ்ச தூரத்திலே ஒரு இடத்திலே  அர்ஜண்டாக ஒரு வேலை.   ஆஸ்பத்திரில இருந்து  எனக்கு போன் பண்ணினாங்க அடுத்த கணமே ஓடிவந்துட்டேன். ரொம்ப தூரத்திலிருந்து வேகமாக வரேன். கொஞ்சம் அமைதியா இருங்க. நான் என் வேலையை உடனே ஆரம்பிக்கணும்''

''என்ன டாக்டர் பேசறீங்க. அமைதியாவா? உங்க பையனுக்கு இப்படி இருந்தா அமைதியாவா இருப்பீங்க.? உங்க பையன் சாவுக்கும் உயிருக்கும் இடையிலே மயிரிழையிலே தவிச்சா அமைதி பத்தி பேசுவீங்களா?''
பொரிந்து கொட்டினார் அப்பா.

அப்பாவுக்கு முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு, டாக்டர் கே. வி. ஆபரேஷனுக்கு தயாராகிவிட்டார். அப்பவும் கூட பொறுமையாக அப்பாவிடம், ''டாக்டர் என்பவன் உயிர் கொடுப்பவன் அல்ல. உயிரைக் காப்பாற்றுபவன். அந்த கடமை உணர்ச்சி எனக்குண்டு. வழி விடுங்கள். உங்கள் மகனை காக்க என்னாலான முயற்சி அனைத்தும் செய்வேன். கவலை வேண்டாம். பிரார்த்தனை செய்யுங்கள்.''

''ஹ்ம்ம். இதுலே உபதேசம் வேறே. வீடு பத்தி எரியும்போது பிடில் வாசிக்கிற கதை'' என்று முணுமுணுத்தார் அப்பா.

ரெண்டு மணி நேரம் ஆபரேஷன் முடிந்து டாக்டர் வெளியே வந்தார். ''உங்க பையன் பிழைத்து விட்டான்'' மேற்கொண்டு விஷயம் எல்லாம் நர்ஸ் அம்மா கிட்ட கேட்டுக்குங்க''. அப்பாவின் பதிலைக் கூட எதிர்பாராமல் டாக்டர் வேகமாக போய்விட்டார்.

அப்பாவுக்கு படு கோபம். நேராக நர்ஸ் அம்மா பாலாமணி கிட்ட போய் டேபிளை கையால் குத்தினார். ''என்ன டாக்டர் இவர். திமிர் பிடிச்சவர். ரெண்டு நிமிஷம் வெய்ட் கூட பண்ணாம பெத்த பிள்ளையை பத்தி என் கவலையை துளிக்கூட லக்ஷியம் பண்ணாமல் ஒரு வார்த்தை கூட பேசாம  ஓடறார்..கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மிருகம் ''

நர்ஸ் பாலாமணி அப்பாக்காரரை ஏற இறங்க பார்த்தார். அவள் கண்களில் கங்கை ஆறு. கையமர்த்தி கொஞ்சம் பொறுமையாக  இருங்கோ...என்கிறாள் 
.
''சார், எங்க டாக்டர் கே. வி.  யுடைய ஒரே பையன் 26 வயது பாபு ரோடு ஆக்சிடேன்ட்லே நேற்று ராத்திரி போய்ட்டான்  சார். அவனை இன்னிக்கு தகனம் பண்ணறாங்க. அர்ஜன்ட்ன்னு நாங்க போன்ல கூப்பிட்டதும் இந்தப் பையனையாவது காப்பாத்தணும்னு உங்க பையனுக்கு ஆப்பரேஷன் பண்ண ஓடி வந்தார். மயானத்துக்கு ஓடறார். தன பிள்ளைக்கு மீதி காரியம் பண்ண ''

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...