2.1.19
NANGANALLUR J.K SIVAN
ஒரு ஆன்மீக நண்பரின் விஜயம்.
ஸ்ரீனிவாசன் குருராஜன் என்ற எழுபது வயது சிந்தனையாளர் ஒருவர் ஈரோட்டிலிருந்து சென்னை வருகிறார் என்றால் நிச்சயம் பொழுது போகாமல் தாம்பரத்திலிருந்து எத்தனை ரயில்கள் சென்னை கடற்கரை வரை காலையிலிருந்து ஓடுகின்றன என்று எண்ணிப்பார்க்க அல்ல. எத்தனையோ காரியங்களை இந்த முறை சென்னை சென்றால் முடிக்கவேண்டும் என்று மனதில் ஒரு தீர்மானத்தோடு தான் கிளம்பியிருப்பார். அத்தனை ஜோலிகளுக்கும் இடையே நங்கநல்லூர் சென்று சிவனைப் பார்க்க வேண்டும் அரைமணி நேரமாவது பேசவேண்டும் என்று ஒரு காரியமாக அதை நிறைவேற்றுகிறார் என அறியும்போது, அவர்
இன்று நேரில் வந்து அன்பொழுக பேசும்போது, என் புத்தகங்களை கட்டுரைகளை பற்றி பேசும்போது, பாராட்டும்போது, நானும் நேரத்தை வீணடிக்கவில்லை என்று புரிகிறது. இன்னும் நிறைய எனக்கு கடமை இருப்பது தெரிகிறது. ஈரோட்டில் பல பள்ளிகளில் மாணவ மாணவிகளோடு கலந்துரையாடி, அவர்களுக்கு தெய்வீக, ஆன்மீக விஷயங்களை, கொஞ்சம் புகட்டி, அவர்களை நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை உணர்ந்து வளர உதவ ஏற்பாடுகள் செய்கிறேன் எனும்போது எனக்கு உற்சாகம் கூடுகிறது. நிறைய புத்தகங்களை அவர்களுக்கு பரிசாக வழங்க தயாராகிறேன்.
ஸ்ரீ.கு.விற்கு சங்கீதம், சமஸ்க்ரிதம், ஸ்தோத்திரங்கள், ஆழ்ந்த தமிழ் அறிவு, அமோகமாக ஸ்ரீ கிருஷ்ணன் அருளால் நிறைந்திருப்பதை உணர்ந்து எவ்வாவு எளியவராக தன்னடக்கத்தோடு பழகுகிறார் என்று சந்தோஷப்பட்டேன்.
இன்னும் நிறைய ஸ்ரீனிவாச குருராஜர்கள் பல ஊர்களில் இந்த சேவை புரிந்து எதிர்கால தலைமுறை நல்ல விதத்தில் வளர உதவ கட்டாயம் கிருஷ்ணன் கருணை புரிவான் என்ற நம்பிக்கை வளர்கிறது.
No comments:
Post a Comment