சென்னை திருச்சி சாலையில் அச்சரப்பாக்கத்தைக் கடந்து சிறிது தூரத்தில் (2-3 கி.மீ ) அதே வாக்கில் பாலா வேத பாடசாலை என்ற பெயர் பலகை. அது இருக்கும் ஊர் கடமலை புத்தூர், இங்கே வேத பாடசாலை அமைந்ததே நமக்கு ''அடே , உனக்கு கடமை மலை போல் இருக்கிறதே கொஞ்சம் வேதம் சொல்வதை கேள், தெரியாவிட்டால் இங்கே வா சொல்லித்தருகிறேன் என்று நினைவூட்டத்தானோ? இங்கே கிருஷ்ண யஜுர்வேத தைத்ரீய சாகை க்ரம பாடம் முடிய எட்டு வருஷம் குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறார்கள். மற்ற பள்ளிக்கூடங்கள் போல் இல்லை. மேஜை நாற்காலி இல்லை. மரத்தடியில், மண்டப த்தில், கூடத்தில், சிஷ்யர்கள், அனைவரும் தரையில் அமர்ந்து, இடுப்பில் பிரம்மச்சாரி வேஷ்டி, அதன் மேல் துண்டை வரிந்து கட்டிக்கொண்டு, பட்டை பட்டையாக விபூதி, கழுத்தில் ருத்ராக்ஷம் அணிந்து குட்டி குட்டி சிவச்சின்னங்களாக, தேஜஸ் சாந்தம் விழிகளில் பொங்கும் ஆச்சர்யனை சுற்றி அமர்ந்து அவர் சொல்ல சொல்ல தாமும் சரியாக மந்திரங்களை கற்கிறார்கள். நான் இருப்பது அச்சரப்பாக்கம் அருகிலா, நைமிசாரண்ய வனத்திலா என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.
நாலைந்து வருஷங்களுக்கு முன் ஒரு முறை என்னுடன் ஆலய யாத்திரைக்கு வந்த ஒரு பெசன்ட் நகர் பெண்மணி.... திருமதி கோகிலா ராமகிருஷ்ணன் தான் முதலில் இந்த பாடசாலை பற்றி சொன்னார். திரு ராமகிருஷ்ணன் வயதைப்பற்றி கவலைப்படாமல் இந்த பாடசாலை முன்னேற அதிகம் நேரம் செலவழித்து அதை நிலை நிறுத்தி இருக்கிறார்.
பிறகு ஒருநாள் இரவு நேரம் திரு ராமக்ரிஷ்ணன்
மாமாவை அவர் இல்லத்தில் பெசன்ட் நகரில், சந்தித்து வணங்கினேன். ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசின அவரைச்சுற்றி ஒரு தெய்வீகம் இருப்பதை உணர்ந்தேன்.
சில வருஷங்கள் ஓடியபின் ஒருநாள் ''நான் சிங்கப்பூர் போகிறேன். எங்கள் உறவினர் ஒருவர் ஒரு வேத பாடசாலை நிறுவி நடத்தி வருகிறார். அச்சரப்பாக்கம் தாண்டி கடமையை புத்தூர் கிராமத்தில். அங்கே 27 நக்ஷத்திரங்களுக்குரிய விருக்ஷங்கள் நடப்போகிறார்கள். அந்த பாடசாலை பற்றி நீங்களும் நாலுபேருக்கு சொல்லுங்கள். சில புண்யாத்மாக்கள் நல்ல காரியங்களுக்கு உதவட்டும்'' என்றார் என் அன்பு நண்பர் சூர்யா. அவரது இல்லத்தில் தான் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன (20, FIRST MAIN RD குருவாயூரப்பன் கோயில் எதிரில் உள்ள தெரு நங்கநல்லூர் சென்னை 600061. இன்றும் ஸ்ரீ சூர்யா சொன்னது காதில் ரீங்காரம் இடுகிறது:
சில வருஷங்கள் ஓடியபின் ஒருநாள் ''நான் சிங்கப்பூர் போகிறேன். எங்கள் உறவினர் ஒருவர் ஒரு வேத பாடசாலை நிறுவி நடத்தி வருகிறார். அச்சரப்பாக்கம் தாண்டி கடமையை புத்தூர் கிராமத்தில். அங்கே 27 நக்ஷத்திரங்களுக்குரிய விருக்ஷங்கள் நடப்போகிறார்கள்.
'சிவன் நான் தொழுப்பேடு போகப்போகிறேன் வருகிறீர்களா? என்கிறார் சூர்யா.
''என்ன விசேஷம் அங்கே?''
''என் நெருங்கிய உறவினர் ஸ்ரீ பாலகிருஷ்ணன் அங்கே ஒரு பாடசாலை நிறுவி இருக்கிறார்..''
ஓஹோ .என்ன பாடசாலை..
''ஸ்ரீ பாலா வேத பாடசாலை -- பதினைந்து வித்யார்த்திகள் பல ஊர்களிலிருந்து வந்து படிக்கிறார்கள் ''
''ஓஹோ ''
''இன்று பத்தாவது ஆண்டு நிறைவு விழா''
''ஓஹோ''
''ஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் வருகிறார்''
எனக்கு சூடு பிடித்தது. ''எத்தனை மணிக்கு போகப்போகிறீர்கள்?
''இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்தில்... வருவதாக இருந்தால் உங்கள் வீட்டுக்கு வந்து அழைத்து போகிறேன்''
''தமிழ் படிப்பார்களா மாணவர்கள்? புத்தகங்கள் கொண்டுவரட்டுமா?''
''தமிழ் தெரிந்தவர்கள் கம்மி. ஆங்கிலத்தில் படிக்கலாம்''

தொழுப்பேடு சென்னையிலிருந்து 100 கி.மீ. தூரம். வேக, விவேக, அதிவேக, அவிவேக வண்டிகளையெல்லாம் சமாளித்துக்கொண்டு ரெண்டு - மூன்று மணி நேரத்தில் அடைந்தோம். கொஞ்சநேரத்தில் சுவாமி ஓங்காரானந்தா வந்தார். நிறைய FB நண்பர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசினார்கள். அம்ருதவர்ஷிணி நடத்தும் அருமை நண்பர், அற்புத எழுத்தாளர் இளைஞர் ஆனந்த் வாசுதேவனை சந்தித்தேன். தினமும் என் கட்டுரைகள் அம்ரிதவர்ஷிணியில் வர அவரே காரணம். சதா மஹா பெரியவா ஸ்வாசம் செய்யும் துபாய் நண்பர் ஸ்ரீ ராமை முதல் முறையாக சந்தித்தேன். FB யில் நிறைய பழகுபவர். அவர்கள் SKST க்கு செய்யும் உதவிகள் பட்டியலிடமுடியாது.
ஸ்ரீ பாலகிருஷ்ணன், பாடசாலை நிறுவனர் எனக்கு தெரிந்தவராக இருந்தார். SKSS புத்தக வெளியீடுகளுக்கு வந்திருந்து புத்தகங்கள் பெற்றதாக கூறினார். சுவாமி ஓங்காரானந்தா ஸ்வாமிகள் வழக்கம்போல அம்ருதமாக பேசினார். தேனீக்கார ஸ்வாமிகள் தேன் சொட்ட பேசுவதில் என்ன ஆச்சர்யம். ஸ்ரீ ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி கோகிலா ராமகிருஷ்ணன் ஆகியோரைப் பார்த்து வணங்கினேன். நிறைய புத்தகங்களை ஆங்கிலத்தில் (ஆச்சார்யா &அச்சுதா ) என்று நான் ஆங்கிலத்தில் எழுதிய பஜகோவிந்தம் ஸ்லோக அர்த்த புஸ்தகங்களை பாடசாலை வித்யார்த்திகளுக்கு பரிசாக வழங்கினேன்.
நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைதியான இந்த பாடசாலையை சுற்றி இயற்கை வளம் நிறைந்துள்ளது. பசுக்கள் கன்றுகளோடு சந்தோஷமாக கோ சாலையில் உள்ளன. குழந்தைகள் 5 வயதிலிருந்து 15 வயது வரை வேதம் கற்கிறார்கள். முகங்களில் தேஜஸ் பளபளக்கிறது. ஆங்கிலம், கணக்கு, விஞ்ஞானமும் போதிக்க வரிசையாக சில நல்லிதயங்கள் வந்து உதவ குழந்தைகளுக்கு கம்பியூட்டர், யோகப்பயிற்சி ஆசிரியர்களும் சேர்ந்துவிட்டார்கள். வேதம் கற்றுத்தரும் ஆசிரியர் அங்கேயே வசிக்கிறார். கடமலை ப்புத்தூர் காந்தம் போல் இழுக்க, மற்றுமொரு முறை சமீபத்தில் SKST செயலர் ஸ்ரீ சுந்தரம் ராமசந்திரன், மற்றும் PAPUA NEWGUINEA (பாபுவா நியூ கினி ) எனும் பசிபிக் சமுத்திர தீவு தேசத்தில் உயர்ந்த பதவியில் பணிபுரியும் வேத உபாசகர் க்ரிஷ்ணபக்தர், நண்பர் ஸ்ரீ வி. கல்யாணராமனுடன் சென்றேன். பதினைந்து குழந்தைகளுக்கு கீதை, பாகவதம் பற்றி ஸ்ரீ கல்யாணராமன் பிரசங்கம் செய்தார். ஸ்ரீ சுந்தரம் ராமசந்திரன் க்ரிஷ்ணனைப் பற்றி ஸ்லோகங்கள் சொல்லி அர்த்தம் சொன்னார். குழந்தைகளோடு ஒரு சாத்வீக உணவு அருந்தி யபின் ஒன்றரை மணி நேரம் நிறைய கிருஷ்ணன் கதைகள் சொன்னேன். ரொம்ப ரசித்தார்கள். இனி அடிக்கடி செல்ல ஒரு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

SRI BALA VEDA PATHASALA , 109 GST RD KADAMALAI, PUTHUR VILLAGE. ACHARAPAKKAM,TOWN, 603310 MADURANTAKAM TALUK. Donations can be made to SRI BALA VEDA PATHASALA SBI A/C 64209207189 ANNANAGAR BRANCH, IFSCODE SBIN0040625
SRI R BALAKRISHNAN 98402912762/9444127382
பாடசாலை லருகே சில அற்புத புராதன ஆலயங்கள் இருக்கின்றன. சிலவற்றை தரிசித்த விஷயம் பற்றி அடுத்து எழுதுகிறேன்.
No comments:
Post a Comment