Tuesday, January 22, 2019

KRISHNA KARNAMRUTHAM



மஹான்கள் J.K. SIVAN
லீலா சுகர்

5. ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்

निखिल भुवन लक्ष्मी नित्य लील आस्पदाभ्याम्
कमल विपिन वीथी गर्व सर्वन्+कषाभ्याम्
प्रणमत् अभय दान प्रौढि गाढ उद्दताभ्याम्
किम् अपि वहतु (मम) चेतः कृष्ण पाद अम्बुजाभ्याम् 1.12

nikhila bhuvana lakṣmī nitya līla āspadābhyām
kamala vipina vīthī garva sarvan+kaṣābhyām
praṇamat abhaya dāna prauḍhi gāḍha uddatābhyām
kim api vahatu (mama) cetaḥ kṛṣṇa pāda ambujābhyām

நிகி²லபு⁴வநலக்ஷ்மீநித்யலீலாஸ்பதா³ப்⁴யாம்
கமலவிபிநவீதீ²க³ர்வஸர்வங்கஷாப்⁴யாம் ।
ப்ரணமத³ப⁴யதா³நப்ரௌட⁴கா³டோ⁴த்³த⁴தாப்⁴யாம்
கிமபி வஹது சேத: க்ருʼஷ்ணபாதா³ம்பு³ஜாப்⁴யாம் ॥ 1.12॥

ஹே, மரகத சியாமா, கிருஷ்ணா, பொன்னொளி வீசி பூமியை பிரகாசிக்கச்செய்யும் உனது அந்த சிறிய தாமரைப் பாதங்களின் அழகை எப்படி எடுத்துச் சொல்வேன். மூவுலக தெய்வங்களும் போற்றும் அந்த திவ்ய தாமரைப் பொற் பாதங்களை நான் எப்படி வர்ணிப்பேன். உலகத்தின் ஒட்டு மொத்த சௌந்தர்யங்களை ஒன்றாக திரட்டி சேர்த்தால் கூட அவை உன் திருவடி அழகுக்கு ஈடாகாதே. ஒருவேளை எனது நெஞ்சு என்கிற ஓடை உனது திருப்பாத அழகின் எண்ணங்களை பக்திக்காற்றில் தன்மேல் மிதக்கவிட்டுக் கொண்டு எங்குமே ஓடட்டும். உனது அடியார்கள் உன் திருவடி அழகில் களிக்கட்டும்.

प्रणय परिणताभ्याम् प्राभव आलम्बनाभ्याम् (श्रीभर आलम्बनाभ्यम्)
प्रतिपद ललिताभ्याम् प्रति अहम् नूतनाभ्याम् प्रति मुहुर् अधिकाभ्याम्
प्रस्नुवत् (प्रस्फुरत्) लोचनाभ्याम् प्रभवतु(प्रवहतु) हृदये नः प्राण नाथः किशोरः

praNayapariNatAbhyAmprAbhav.a.alambanAbhyAm
pratipadalalitAbhyAm pratyaham nUtanAbhyAm |
pratimuhuradhikAbhyAm prasnuvallochanAbhyAm
prabhavatu hR^idaye naH prANanAthaH kishoraH || 1-13

ப்ரணயபரிணதாப்⁴யாம் ப்ராப⁴வாலம்ப³நாப்⁴யாம்
ப்ரதிபத³லலிதாப்⁴யாம் ப்ரத்யஹம் நூதநாப்⁴யாம் ।
ப்ரதிமுஹுரதி⁴காப்⁴யாம் ப்ரஸ்நுவல்லோசநாப்⁴யாம்
ப்ரப⁴வது ஹ்ருʼத³யே ந: ப்ராணநாத:² கிஶோர: ॥ 1.13॥
கிருஷ்ணா, உனது கண்கள் ஒரு சாம்ராஜ்யத்தை ஆளும் அரசன் போல் பார்ப்பவர்களை,அன்புடன், கருணையோடு வழிநடத்துகிறதே. ஒவ்வொரு கணமும் அதன் காருண்யம் பெருகிக்கொண்டே போகிறதே. எங்கள் இதயம் உன் பார்வையில் பயனுற்று எங்கள் வாழ்க்கையை இன்பகரமான மாற்றட்டும்.கலீர் என்ற உன் சிரிப்பொலி எண்ணற்ற ஜீவர்களுக்கு புத்துயிர் அளிக்கிறதே. உனது நாமத்தை நினைத்தாலே உன் பெருமையை பேசினாலே,அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்ற ஆனந்தம் கிட்டுகிறதே.

माधुर्य वारिधि मद अन्ध(मद अम्बु) तरंग भंगी
शृंगार संकुलित शीत किशोर वेषम्
आमन्द हास ललित आनन चन्द्र बिम्बम्
आनन्द संप्लवम् अनुप्लवताम् मनः मे 1.14

mādhurya vāridhi mada andha (mada ambu) taraṁga
bhaṁgī śṛṁgāra saṁkulita śīta kiśora veṣam
āmanda hāsa lalita ānana candra bimbam
ānanda saṁplavam anuplavatām manaḥ me

மாது⁴ர்யவாரிதி⁴மதா³ந்த⁴தரங்க³
ப⁴ங்கீ³ஶ்ருʼங்கா³ரஸங்கலிதஶீதகிஶோரவேஷம் ।
ஆமந்த³ஹாஸலலிதாநநசந்த்³ரபி³ம்ப³
மாநந்த³ஸம்ப்லவமநுப்லவதாம் மநோ மே ॥ 1.14॥

கிருஷ்ணா, நீ சிறுபையனா. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி ரொம்ப பெரியதாக இருக்கிறதே. உன் வதனமே சந்திர பிம்பமோ! உன்னை நந்தகிஷோர் எனும்போது நீ யௌவன ரூபத்தில் இருப்பது போல் மனதில் படுகிறதே. உன் அவதார வேலைகளை ஆரம்பிக்க போகிறாயா. ஏற்கனவே பல அசுரர்களை வெண்ணை திருடியாக இருந்த போதே முடித்து விட்டாயே. உன் திருமுக மண்டல aஅதிலிருந்து தான் அமிர்தம் உற்பத்தியாகிறதோ! உனது கடைக்கண் பார்வை உலகையே கட்டி ஆள்கிறதே. அந்த கருணைக்கடலில் என் இதயமும் ஆனந்தமாக மிதக்கட்டும். இந்த மாபெரும் பரிசுத்த அமிர்த கடலில் எங்கேயாவது பாபம் என்கிற மண் அதை கறை படுத்தமுடியுமா?

अव्याज मंजुल मुख अंबुज मुग्ध भावैः आस्वाद्यमान
निज वेणु विनोद नादम् आक्रीडताम् अरुण पाद सरो रुहाभ्याम्
आर्द्रे मदीय हृदये भुवन आर्द्रम् ओजः 1.15

avyAjama~NjulamukhAmbujamugdhabhAvai
rAsvAdyamAnanijaveNuvinodanAdam|
AkrIDatAmaruNapAdasaroruhAbhyA-
mArdre madIyahR^idaye bhuvanArdramojaH || 1-15

அவ்யாஜமஞ்ஜுளமுகா²ம்பு³ஜமுக்³த⁴பா⁴வை
ராஸ்வாத்³யமாநநிஜவேணுவிநோத³நாத³ம் ।
ஆக்ரீட³தாமருணபாத³ஸரோருஹாப்⁴யா
மார்த்³ரே மதீ³யஹ்ருʼத³யே பு⁴வநார்த்³ரமோஜ: ॥ 1.15॥

எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்த நேரம் வந்து விட்டதே. கிருஷ்ணா, அற்புத ஜீவ நாதம் எழுப்பும் உன் புல்லாங்குழல் மெதுவாக உன் தாமரை இதழ் ஒத்த உதடுகளை நெருங்கிவிட்டதே இதோ இதோ, நீ அரைக்கண் மூடி மனதை ஒருமித்து, உன் ஆத்ம ராகத்தை காற்றாக அதில் நிரப்புகிறாய். அந்த பிராண நாதம் ஸு ஸ்வரங்களாக அண்ட பகிரண்ட உயிர்களை மகிழ்விக்கிறது. நீ தனிமையில் எங்கோ ஒரு இன்பகரமான சூழ்நிலையில் பிருந்தாவனத்தில் குழல் ஊதுகிறாய். இது ஒரு நிகழ்வு. ஆனால் அதன் பிரதிபலிப்பு?? உன்னுடைய அரை மூடி அரை திறந்த கண்களின் குளுமை தான் மட்டும் அல்லாமல் உன் வேய்ங்குழலில் பிறக்கும் அமுத கானத்தேனோடு கலந்த தெள்ளமுதாய் நெஞ்சை உருகிஓடச்செய்கிறதே. ஆஹா இந்த பிரபஞ்சமே நனைகிறதே! பக்தி பெருக்கினால் உலகமே ஆனந்தத்தில் ஆழ்கிறது .



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...