ஒரு நாச்சியாரை சந்தித்தேன். J.K. SIVAN
கிழவன்சேதுபதியின் மகன் பவானி சங்கரன் ராமநாதபுரம் ராஜ்யத்தை
கைப்பற்றி, ராஜா சுந்தரேஸ்வர ரெகுநாதசேதுபதியை கைது செய்து தானே 10வது ராஜா ஆனார்.(1726-1729). அப்போது எலெக்ஷன், கட்சி, கொடி , கழகம் போன்றவை இல்லை என்றாலும் இப்போது போல் பதவி மோகம், பொறாமை, உட்பூசல், சண்டைகள் உண்டோ?.
நாலுகோட்டை பாளைய ராஜா சசிவர்ண தேவரை சண்டையில் வென்று. துரத்தி 10வது ராஜா. அவர் தம்பி கட்டய தேவர் தஞ்சாவூருக்கு ஓடி தஞ்சாவூர் ராஜாவிடம் அடைக்கலம் புகுந்தார்.
நாலுகோட்டை பாளைய ராஜா சசிவர்ண தேவரை சண்டையில் வென்று. துரத்தி 10வது ராஜா. அவர் தம்பி கட்டய தேவர் தஞ்சாவூருக்கு ஓடி தஞ்சாவூர் ராஜாவிடம் அடைக்கலம் புகுந்தார்.
காளையார்கோவில் காடுகளின் வழியாக சசிவர்ண தேவர் போய்க்
கொண்டிருந்த போது, சிவகங்கை என்ற நீருற்று அருகே உள்ள ஒரு நாவல் மரத்தின் கீழ்தியானம் செய்து கொண்டிருந்த சாத்தப்பையா என்ற ஒரு முனிவரை சந்தித்தார். மனம் உடைந்த ராஜா சசிவர்ண தேவர் முனிவருக்கு முன்பு கை கட்டி நின்று, தனது கஷ்டங்களை சொன்னார். முனிவர் தேவர் காதில் ஒரு சசிவர்ண தேவரின் காதுகளில் ஒரு மந்திரத்தை மந்திர உபதேசம் செய்து ''நீ தஞ்சாவூருக்கு போ '' என்கிறார்.
போகும் வழியில் சசி வர்ண தேவர் ஒரு பெரிய பயங்கரமான புலியுடன் சண்டையிட்டு அதை கொன்றார். காட்டு வழியில் தன்னைப் போல் அகதியாக வந்த கட்டய தேவரை சந்திக்கிறார். இந்த ரெண்டு போரையும் தஞ்சாவூர் ராஜாவுக்கு பிடித்து விட்டது. பவானி சங்கரை வீழ்த்த ஒரு பெரிய படையை தஞ்சாவூர் ராஜா சசிவர்ண தேவர், கட்டய தேவர் தலைமையில் அனுப்பி ராமநாதபுரம் ராஜா வுடன் ஒரியூரில் ஒரு யுத்தம் நடக்கிறது. 10வது ராஜா பவானி சங்கர் தோற்று 1730 ல் கட்டய தேவர் 11வது ராமநாதபுர ராஜா.
ராமநாதபுர ராஜ்யத்தை ஐந்தாக பிரித்து மூன்று ராமநாத புர ராஜா வசம். மற்ற ரெண்டு நாலு கோட்டை பாளைய சசிவர்ண தேவருக்கு. சசி வர்ணதேவர் தான் ர் ராஜா முத்து விஜயரகுநாத பெரியஉடையனத்தேவர்” என்ற சிவகங்கை ராஜா. .
அடுத்த சிவகங்கை ராஜா – முத்து வடுக நாத பெரியஉடையத்தேவர் (1750 – 1772)
அவரது மனைவி ராணிவேலு நா
ச்சியார். நாச்சியார் என்ற பெயர் வீர பெண்மணிகளுக்கு உரித்தானது. வெள்ளைக்காரர்கள் எங்கும் புகுந்து ஆக்கிரமித்த நேரம். வடுகநாதர் வெள்ளைக்காரர்களுக்கு உதவாமல் டச்சுக்கார்களுக்கு வணிக வசதிகளை வழங்கினார்.
அடுத்த சிவகங்கை ராஜா – முத்து வடுக நாத பெரியஉடையத்தேவர் (1750 – 1772)
அவரது மனைவி ராணிவேலு நா
ச்சியார். நாச்சியார் என்ற பெயர் வீர பெண்மணிகளுக்கு உரித்தானது. வெள்ளைக்காரர்கள் எங்கும் புகுந்து ஆக்கிரமித்த நேரம். வடுகநாதர் வெள்ளைக்காரர்களுக்கு உதவாமல் டச்சுக்கார்களுக்கு வணிக வசதிகளை வழங்கினார்.
வெள்ளைக்காரர்கள் டச்சுக்காரர்களை அழிக்க சிவகங்கையை ரெண்டு பக்கத்திலும் இருந்து தாக்குகிறார்கள். கிழக்கிலிரு ந்து ஜோசப்ஸ்மித் மற்றும் மேற்கில் இருந்து பெஞ்சூர் 1772 ஆம் ஆண்டு சிவகங்கை பளையம் மீது படையெடுத்தனர். சிவகங்கை பாளையம் கல் முள் நிறைந்த காட்டுப் பகுதி. வடுக நாத தேவர், வெள்ளையன் படையெடுப்பை எதிர்பார்த்து, சாலைகளில் தடைகளை அமைத்தார், காளையார்க்கோவில் காடுகளில் அகழிகளை நிறுவினார்.
இருந்தபோதும் 1772 ல் ஸ்மித் மற்றும் பெஞ்சூர் ஆகியோர் சிவகங்கை நகரை ஆக்கிரமித்து கைப்பற்றினர். ஆங்கிலப்படைகள் காளையார்கோவிலுக்கு அணிவகுத்து கீரனூர் மற்றும் சோழபுரம் பகுதிகளை கைப்பற்றின. 1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பெஞ்சூர் முற்றுகையிட்டு ராஜா முத்து வடுகநாதர் பல வீரர்களோடு போரில் மரணம் அடைந்ததும், வேலுநாச்சியார் முத்து வடுக நாதரை அடக்கம் செய்து விட்டு விருப்பாச்சி விரைந்தார். தண்டவராயன் பிள்ளை உடன் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சிநாச்சியார் திண்டுக்கல்லுக்கு விருப்பாச்சி பாளையம் சென்றனர்.பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளைமருது மற்றும் சின்னமருது ஆகியோர் இணைந்து கொண்டனர்.
ராணி வேலு நாச்சியாரும் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாச்சிபாளையத்தில் கோயில நாயக்கர் பாதுகாப்பில் கீழ் வசித்து வந்தனர். வேலுநாச்சியாரை எதிர்த்துப்போராட முடியாத நவாப், வேலுநாச்சியாருடன் உடன்படிக்கை செய்து கொள்கிறான். அதன்படி அவர்கல் சிவகங்கை திரும்பி, நவாபிற்கு கிஸ்தி செலுத்திவிட்டு சிவகங்கையை ஆள்கிறார். சின்னமருது முதல்அமைச்சராகவும் வெள்ளைமரு து நாட்டின் தலைமைத்தளபதியாகவும் ஆகிறார்கள். ராணி வேலு நாச்சியார் 1780 வரை சிவகங்கை ராணி.
அடாடா மனதில் 10.1.2019 அன்று சென்னை நந்தனம் ymca மைதானத்தில் காவ்யா பதிப்பக புத்தக கண்காட்சியில் ஒரு அற்புதமான ''நங்கூர நாச்சியார்கள் '' என்ற புத்த வெளியீட்டுக்கு அழைப்பு பெற்று அதை எழுதிய கொல்லம்கொண்டான் ஜமீன் ராணி பால்ராஜேஸ்வரி நாச்சியாரை சந்திக்க சென்றேன். 70வருஷங்கள் வெளியுலகில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத சிறந்த படிப்பாளி, எழுத்தாளர், கட்டுரையாளர் பண்பாளர் எனது முகநூல் நண்பராகவும் உள்ளவரை சந்தித்து மகிழ்ந்தேன். அவரது உறவினர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தினார். அவரது கணவர் கொல்லம்கொண்டான் ஜமீன் ராஜாவையும் சந்தித்தேன். அமைதியான தம்பதியர். அருமையான பிள்ளை, இளவரசன். இங்கிலாந்தில் வசிக்கும் மருத்துவர். அவர் என்னையும் அவரது பெற்றோரையும் சேர்த்து புகைப்படங்கள் எடுத்தார். ஒரு நல்ல ராஜ குடும்பத்தை சந்தித்த முதல் அனுபவம் முகநூல் நட்பால் பெற்றேன். இனிமேல் தான் நங்கூரநாச்சியார்களை படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment