சுப்ரமணிய புஜங்கம். 1 J.K. SIVAN
ஆதி சங்கரர்
மந்திரமாவது நீறு
முழுமையாக செவ்வனே மூன்று யுகம் பிடிக்கும் மகத்தான ஆன்மீக சேவையை முப்பத்திரண்டு வருஷங்களில் முடித்த ஆதி சங்கரரை கொஞ்சம் நோயும் ஆட்கொண்டு .சரும நோயொன்று அவரை வாட்டியது. அது நம்மைப்போல் வரவழைத்துக் கொண்ட வியாதி அல்ல. அவர் மீதும், அத்வைத கோட்பாட்டின் மீதும் கொண்ட பொறாமையால் அபிநவ குப்தா என்பவன் தாந்த்ரீக ஏவலினால் (ஆபீசார பிரயோகம்) அவரை நோய் துன்புறுத்தியது.
ஒரு நாள் கனவில் ஸ்ரீ கோகர்ணேஸ்வரன் அவரை ''சங்கரா, நீ உடனே ஜெயந்தி புரம் சென்று சுப்பிரமணியனை துதிசெய் உன் நோய் விலகும்'' என்று சொல்ல ஆதி சங்கரர் திருச்செந்தூர் வருகிறார். அது தான் அப்போது ஜெயந்திபுரம். செந்தூர் முருகனை கடலலை ஓசையோடு கேட்டு தரிசித்த ஆதி சங்கரர் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார். இதயம் ஆன்ம ஒளியால் பூரிக்கிறது. தன்னை மறந்த நிலையில் சமாதி அடைந்தவராக ஆதி சங்கரர் சுப்பிரமணியன் எதிரில் நிற்க 33 ஸ்லோகங்கள் ப்ரவாஹனமாக அவர் நாவிலிருந்து வெளியேறுகிறது. அதுவே மிக சக்தி வாய்ந்த சுப்ரமணிய புஜங்க ஸ்தோத்ரம்.
நம் உடலை நோயின்றி வாழவைத்து உள்ளத்தை அமைதிபெறச்செய்யும் இந்த சுப்ரமணிய புஜங்கம் பற்றி சொல்லுமுன் '' புஜங்கம்'' என்பது ஒரு சந்த வகை. சர்ப்பம் அசைவது போன்ற ஒலி அமைப்பு. இன்றும் நாக ஸர்ப்பத்தை
சுப்பிரமணியன் என்று தான் சொல்வது வழக்கம். திருச்செந்தூரில் சுப்பிரமணியன் அருளால் ஆதி சங்கரரின் சரும நோய் விலகுகிறது. புஜங்கத்தில் மகிழ்ந்த சுப்பிரமணியன் சங்கரருக்கு ப்ரத்யக்ஷமாக தரிசனம் தந்து அருள்கிறான்.
ஒரு ஸ்லோகத்தில் (25வத) என்னென்ன வகை நோய்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியனின் பன்னீர் இலைத் திருநீறு ப்ரசாதத்தினால், மந்திரமாக, மருந்தாக நிவாரணம் அளிக்கும் என பட்டியல் இடுகிறார் ஆதி சங்கரர்
1. सदा बालरूपापि विघ्नाद्रिहन्त्री
महादन्तिवक्त्रापि पञ्चास्यमान्या ।
विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे
विधत्तां श्रियं कापि कल्याणमूर्तिः ॥१॥
sadA bAlaroopApi vighnAdhi hanthri, mahAdanthi vaktrApi panchAsyamAnyA
vidheendhrAdhi mrigyA gaNeshAbhidhAme, vidhatthAm shriyam kApi kalyANamurthi :
ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹுந்த்
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா காணசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி (1)
பார்ப்பதற்கு சிறியவன் கணேசன், விக்னேஸ்வரன் பாலகன், பிள்ளை(யார்) என்றாலும் அடடா என்ன சக்தி அவனுக்கு. மலையளவு துன்பங்களை சூரியன் முன் பனி போல அல்லவோ விலகச் செய்கிறான். சகல விக்னங்களையும் நீக்குபவன் அல்லவோ விநாயகன். பிரமன், இந்திரன் எல்லோரும் தொழும் அந்த யானைமுகனை மனதார பணிந்து ஏன்னை அருள வேண்டுகிறேன். ஐந்து முகங்களை கொண்ட அப்பா சிவனே அவனை வணங்குகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தம்பியைப் பாடும் முன் அவன் அண்ணாவை பாடி துவங்குகிறார் ஆதி சங்கரர்.
2 न जानामि शब्दं न जानामिचार्थं
न जानामि पद्यं न जानामि गद्यम् ।
चिदेका षडास्या हृदि द्योतते मे
मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ॥२॥
na jAnAmi padhyam, na jAnAmi gadhyam, na jAnAmi shabdam, na jAnAmi chArttham
chidekA shadAsyA hridhi dhyothathe me, mukhAnis saranthe giraschApi chitram
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹுருதி தயோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் (2)
ஐயா, நான் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு சப்தம் (ஒலி )எழுப்ப தெரியாது, ஒரு தெளிவாக எடுத்துச் சொல்லும் ஞானம் இல்லை, இலக்கண சுத்தமாக பாடுகிறார்கள் கத்யம், பத்யம் அதெல்லாம் ஒன்றுமே தெரியாது. வராது. உரைநடையாகவோ கவிதையாகவோ ''மூச்''. நான் ஒன்று மறியேன். ஆஹா என்ன ஆச்சர்யம், இந்த ஆறுமுகனைபர்த்து பிரமித்து, என்னை மறந்து நிற்கும்போது என்னுள் ஏதோ ஒரு ஒளி பளிச்சிட்டு, வார்த்தைகளாக என்னை அறியாமல் என் நாவிலிருந்து எப்படி எந்த முயற்சியும் இன்றி இவ்வளவு வருகிறது!
3 मयूराधिरूढं महावाक्यगूढं
मनोहारिदेहं महच्चित्तगेहम् ।
महीदेवदेवं महावेदभावं
महादेवबालं भजे लोकपालम् ॥३॥
mayUrAdhiroodam mahAvAkyagUdam manohArideham mahachittageham
mahIdevadevam mahavedabhAvam mahadevabAlam bhaje lokapAlam
ஹே சுப்ரமணியர், மகாதேவனின் புத்ரா, அழகிய தோகை விரித்த மயில் மேல் ஆசனமாக அமர்ந்திருக்கும் அழகா. உபநிஷத்துகள் சொல்லும் மஹாவாக்ய உட்பொருளே, கண்கவரும் அழகிய தேஹ காந்தி உடைய தெய்வமே, ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் மனங்களையெல்லாம், காந்தம் போல கவரும் அதிசய சக்தியே, வேத நாயகா, வேத சாரமே, இந்த பிரபஞ்ச தேவ சேனாபதியே , சுப்ரமணியா, உன்னை வணங்குகிறேன்.
மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹும் மஹத்சித்த கேஹம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம் (3)
यदा सन्निधानं गता मानवा मे
भवाम्भोधिपारं गतास्ते तदैव ।
इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते
तमीडे पवित्रं पराशक्ति पुत्रम् ॥४॥
yadhA sannidhAnam gathA mAnavA me, bhavAm bodhipAram gathAsthe thadhaiva
ithi vyanjayan sindhutheere ya aaste, thameede pavitram parAshaktiputram
யதா ஸந்நிதானம் கதாமானவா மே
பவம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)
பராசக்தி பார்வதி புத்ரா, ஓ சுப்ரமணிய ப்ரபு , ஒரு நிமிஷம் யோசனை செய்தேன் நீ எதற்காக இந்த பெரும் கடல் அருகே கோவில் கொண்டு திருச்செந்தூரில் நிற்கிறாய்? இப்போது தான் புரிந்தது, ''பக்தர்களே, என்னை சரணடையும் உங்களை,இந்த பவசாகரமாகிய உலக வாழ்கை,சம்சார கடலில் இருந்து, பிறப்பு இறப்பு துன்பங்களிலிருந்து கரை சேர்த்து மோக்ஷம் அடைய செய்கிறேன்'' என்று உணர்த்தவே தான்.
No comments:
Post a Comment