சுப்ரமணிய புஜங்கம். 3 J.K SIVAN
ஆதி சங்கரர்
சங்கரர் கண்ட செந்தூரான்...
சுப்ரமண்ய புஜங்கம் நிறைய பக்தர்களை கவர்கிறது என அறியும்போது காற்றில் பறக்க வைக்கிறது. புஜங்கம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள். இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.
'புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள். பாம்புக்கு தோளும் இல்லை,காலும் இல்லை, விலா எலும்பு சதைகளால் ஊர்ந்து வளைந்து செல்கிறது. வளைந்து செல்வதால் வேகம் கிடைக்கிறது. ஏற்கனவே சொன்னேன். புஜங்கம் வடமொழியில் உள்ள ஒருவகை இசை சந்தம் .ஆதி சங்கரரின் சொல் கட்டு இப்புஜங்கச் ஸ்லோகங்களில் பாம்பொன்று வளைந்து வளைந்து செல்வதை நினைவு படுத்தும்.
கோகர்ணேஸ்வரர் கனவில் சொன்னதை நினைவில் கொண்டு திருச்செந்தூர் சென்ற ஆதி சங்கர் தனது சரும நோய் (ஒரு கொடியவனின் மாந்த்ரீகத்தால் உண்டானது) சுப்பிரமணியனை வழிபட்டு உடல் ஆரோக்யம் பெறுகிறார். திருச்செந்தூர் ஷண்முகன் சந்நிதியில் ஆதிசேஷன் முருகன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் காண்கிறார். அந்த காட்சியே புஜங்கம் சந்தத்தில் சுப்ரமணிய புஜங்கமாக 33
சுப்பிரமணிய புஜங்கத்திற்கு பல மஹான்கள் பல மொழியில் வியாக்யானம் எழுதியுள்ளார்கள் .ஏதோ நமக்கு தெரிந்த ஒரு சில வார்த்தைகளில் ஷண்முகனை நாமும் இதுவரை 10 ஸ்லோகங்களில் அனுபவித்து மேலும் இனி தொடர்கிறோம்.
11. पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग_
स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् ।
नमस्यामहं तारकारे तवोरः
स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥११॥
Pulindesha-Kanyaa-Ghanaa-Bhoga-Tungga_
Stana-[A]alinggana-[A]asakta-Kaashmiira-Raagam |
Namasyaam-Aham Taaraka-Are Tavorah
Sva-Bhakta-Avane Sarvadaa Sa-Anuraagam ||11||
புளந்தேச கன்யாக நாபோக துங்க
ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம்
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)
ஓ. தாரகாசுரனை வதம் செய்த தேவசேனாபதி சுப்ரமண்யா. குறமகள் வள்ளியை மனம் புணர்ந்த குமரா, உன் மார்பில் அவளை அனைத்து நீ காட்சி தரும்போது உன் மார்பும் செம்பஞ்சு, குங்குமம் நிறைந்த செம்மேனியாக உன் அழகுக்கு அழகூட்டுகிறதே. உன் கருணை, தயை பக்தர்களுக்கும் உண்டே, வள்ளியம்மா கொஞ்சம் சிபாரிசு செய்யம்மா! என்பது போல் சிரம் மேல் கரம் தூக்கி வணங்குகிறார் ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில்.
12. विधौ क्ऌप्तदण्डान् स्वलीलाधृताण्डान्
निरस्तेभशुण्डान् द्विषत्कालदण्डान् ।
हतेन्द्रारिषण्डाञ्जगत्त्राणशौण्डान्
सदा ते प्रचण्डान् श्रये बाहुदण्डान् ॥१२॥
Vidhau Klpta-Dannddaan Sva-Liilaa-Dhrta-Annddaan
Nirastebha-Shunnddaan Dvissat-Kaala-Dannddaan |
Hate[a-I]ndra-Ari-Ssannddaan.-Jagat-Traanna-Shaunnddaan
Sadaa Te Pracannddaan Shraye Baahu-Dannddaan ||12||
விதௌக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பகண்டான் த்விஷத்காலதண்டான்
ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண சௌண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் (12)
என்னருமை ஷண்முக சுந்தர ரூபா, உன் ஈராறு காரமும் கால தண்டம் என்று தீயவர்களுக்கு அசுரர்களுக்கும் மரண பீதியை தருவதாயிற்றே. இந்திராதி தேவர்களை ரட்சிக்கும் வலிமை வாய்ந்த கரங்கள். பிரம்மனுக்கும் தண்டனை கொடுத்தவை ஆயிற்றே. உலகம் காக்கும் வேலாயுதா, உன் பன்னிரு கரங்களை சரணடைகிறேன். ரக்ஷிக்கவேண்டும் ப்ரபோ.
13. सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः
समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।
सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीनाः
तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥१३॥
Sadaa Shaaradaah Ssann-Mrgaangkaa Yadi Syuh
Sam-Udyanta Eva Sthitaash-Cet-Samantaat |
Sadaa Puurnna-Bimbaah Kalangkaish-Ca Hiinaah
Tadaa Tvan-Mukhaanaam Bruve Skanda Saamyam ||13||
ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் (13)
சுப்ரமணியா , உன் அறு திருமுகங்களை எதனோடு ஒப்பிடலாம் என்று யோசித்து ஒருவேளை ஆறு பூரண சந்திரங்களுக்கு ஈடோ ? என்று தோன்றியது. அடுத்த கணமே அது சரியல்ல. பூரண சந்திரன் எங்கே சாஸ்வதமாக இருக்கிறான். பாதி நாள் தேய்ந்து காணாமல் போகிறான். அதுவன்றி, அவனில் களங்கம் வேறு கருப்பாக காண்கிறதே. அவன் சரியான உதாரணம் இல்லை. பூரண சந்திரனின் ஒளி பலமடங்கு ஒன்று கூடி சேர்ந்தது தான் இந்த திவ்ய முக தரிசனம். உன்னை வணங்குகிறேன்
14. स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्चत्
कटाक्षावलीभृङ्गसंघोज्ज्वलानि ।
सुधास्यन्दिबिम्बाधरणीशसूनो
तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥१४॥
Sphuran-Manda-Haasaih Sa-Hamsaani Can.cat
Kattaakssaa-Valii-Bhrngga-Samgho[a-U]jjvalaani |
Sudhaasyandi-Bimbaa-Dharannii-[Ii]sha-Suuno
Tava-[A]alokaye Ssann-Mukha-Ambhoruhaanni ||14||
ஸ்புரன் மந்தஹாஸை ஸஹும்ஸானி சஞ்சத்
கடாக்ஷaவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
ஸHதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸனோ
தவாலோகயே ஷண்முகம் போரு ஹாணி (14)
இன்னொரு எண்ணம் தோன்றியது காட்டில் அழகிய பெரிய தடாகத்தில் தாமரை மலர்களிடையே வெள்ளை வெளேரென்று, ஒரு கூட்டமாக சில அன்னங்கள் , வாய் மூக்கு சிவந்து, கம்பீரமாக அற்புதமாக அங்கும் இங்கும் கழுத்தை திருப்பி மிதந்து மகிழ்வூட்டின. உன் கண்கள் கருவண்டுகளா? தேன் உண்ட மயக்கத்தில் வண்ண வண்ண வண்டுகள் ரீங்காரமிட்டு மலர்களை சுற்றி சுற்றி பறக்குமே அதுவா? . நான் உன்னை உன் பக்தியில் திளைத்து உன்னை சுற்றி வந்து வணங்குகிறேன் சுப்ரமணியா.
15. विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्रं
दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु ।
मयीषत्कटाक्षः सकृत्पातितश्चेद्
भवेत्ते दयाशील का नाम हानिः ॥१५॥
Vishaalessu Karnna-Anta-Diirghessv[u]-Ajasram
Dayaa-Syandissu Dvaadashas-Viikssannessu |
Mayi-[I]issat-Kattaakssah Sakrt-Paatitash-Ced
Bhavet-Te Dayaashiila Kaa Naama Haanih ||15||
விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷ த்வாதசஸ் வீக்ஷணேஷ
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி (15
No comments:
Post a Comment