இது எத்தனை பேருக்கு தெரியும் - J.K SIVAN
இந்திய பிரதமர் ஸ்ரீ மோடி அவர்கள் பல அற்புத காரியங்கள் செயது வருகிறார். அதிகம் சப்தம் இல்லாமல் எத்தனையோ நல்ல காரியங்கள் நடைபெற்று வருகிறது அநேகருக்கு தெரியவில்லை. ஏனென்றால் மற்ற பத்த்ரிகைகள், மீடியாக்கள், டிவி சேனல்கள் இதெல்லாம் வெளிக் கொண்டு வந்து காட்டுவதில்லை.
நான் சொல்லும் இந்த விஷயம் ரெண்டு வருஷங்களுக்கு முற்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட பணம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதை கிட்டத்தட்ட ரூபாய் 60க்கு ஒரு டாலர் என்று பெருக்கி நிறைய சைபர்கள் போட்டுக்கொண்டு திணருங்கள். இது காசாக வரவில்லை. இந்தியாவின், முக்கியமாக தமிழகத்திலி
ருந்து பல கோவில்களிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்ட 200க்கு மேலான அபூர்வ பஞ்சலோக கடவுள் சிலைகள். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றிருந்த மோடி அவர்கள் இவற்றை பார்வையிட்டு இந்தியாவுக்குத் திரும்ப ஏற்பாடு செய்திருந்தார்.
''ஐயா, இவற்றை நீங்கள் பணத்தால் ஈடுகட்டி மதிப்பை பார்க்காதேர்கள். அதற்கும் மேலாக எங்களது பாரம்பரியம், பண்பாடு,பக்தி இவற்றில் கலந்திருக்கிறதே அதற்கு விலையே இல்லை. '' என்று அங்கே பேசி இருக்கிறார் மோடி.
2000 வருஷங்களுக்கு முன்பான வெண்கல, டெர்ரகோட்டா, பஞ்சலோக ஆலய மற்றும் பண்டைய சரித்திர புகழ்வாய்ந்த வஸ்துக்கள் இவ்வாறு மீட்கப்பட்டு திரும்ப நமக்கு கிடைத்துள்ளது.
அவற்றில் ஒன்றின் படம் என்னை கவர்ந்தது. சோழ காலத்து சிலை. சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்க வாசகர் உருவச்சிலை. 850-1250 கி.பி. காலத்தியது.சென்னை கோவில் ஒன்றிலிருந்து அமேரிக்கா பறந்து சென்றிருக்கிறது. மாணிக்க வாசகரின் விலை மட்டுமே 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று விற்கப்பட்டிருக்கிறது.
1000 வருஷத்திய கணேசர் வெண்கல சிலை ஒன்று. ஓஹோ அற்புதமான சிலைகள். இவை இந்தியாவின் சரித்திரத்தை , அருமையான நாகரிகத்தை, பண்பாட்டை, கைவண்ணத்தை, சிற்ப நுணுக்கத்தை பறை சாற்றுகிறது என்று அமெரிக்க அட்டர்னி ஜெனெரல் லாரெட்டா லின்ச் சொல்லியிருக்கிறார். இவற்றை திருப்பி அனுப்பவதில், இந்தியாவின் பாரம்பரிய கோட்பாடு, பண்பு எல்லாவற்றையும் அமெரிக்க நாட்டு மக்கள் மதித்து இரு நாட்டு நல்லுறவு பெருக ,வளர மரியாதையோடு திருப்பி அனுப்புகிறோம் என்கிறார். இந்தியாவுக்கு உரிமையான, சொந்தமான இந்த அரும்பொருள்களை அவை பிறந்த நாட்டுக்கே அனுப்புவதில் எங்களுக்கு பெருமை என்று அமெரிக்க அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள்.
அரசு அதிகாரிகள் மிக்க கவனத்துடன் உலக அளவில், இது போன்ற கடத்தல்களை ஒடுக்கி, லாபம் கருதி இதில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நமது நாட்டில் சிலர் காதில் இது விழுந்திருந்தால் ஹா ஹா என்ற சிரிப்பு. வேலியே பயிரை மேய்ந்தால் பயிருக்கு பாதுகாப்பு ஏது !
No comments:
Post a Comment