Tuesday, January 8, 2019

ADHI SANKARAR

ஆதி சங்கரர்      J.K. SIVAN
சுப்ரமணிய புஜங்கம்:

        4.  ஆறுதலை அளிக்கும்  ஆறு தலையனே!

ஒரு   நாகர்கோயில்  காரர் ஹைதராபதில் உத்யோகம்.  முருக பக்தர்,  வெகுகாலமாக  திருச்செந்தூர் முருகனுக்கு  முடி காணிக்கை தர  வேண்டிக்கொண்டு என்றோ ஒருநாள் பல வருஷங்களுக்கு பிறகு   அதை குடும்ப சகிதம்  சென்று நிறைவேற்றினார்.  அவரது 70 வயது அப்பா வுக்குசரும நோய். எந்த மருந்திலும்  குணமாகவில்லை. உடல் புண்ணாகி அவஸ்தை. பண விரயம் தான் மிச்சம். முடி இறக்கி சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து  முருகன்  சந்நிதியில்  பக்தி கண்ணீரில் நீராக பொங்க நிற்கிறார்.   ஒரு வயதான  அர்ச்சகர்  கைநிறைய  விபூதி தருகிறார். ''பூசிக்கொண்டால்  வியாதி பறந்து போகும்'' என்கிறார்.  அவர் தாயும் அவரும்  அந்த விபூதியை அப்பா உடல் முழுதும் பூசுகிறார்கள். கையில் இன்னும் இருப்பதை பொட்டலம் கட்டி மறுநாள் பூச வைத்துக் கொள்கிறார்கள்.   அன்றே ரயில் ஏறி ஹைதராபாத் மறுநாள் அடைகிறார்கள்.  வீட்டுக்கு சென்றதும்  அப்பா உடம்பில் முன்னேற்றம்.  புஜங்க ஸ்தோத்ரம் படித்து முடிக்கிறார். அடுத்த திங்கக்கிழமை ஒரு வாரத்தில், உடம்பு பொன்னிறம். மாசு மாறவில்லை. புண்ணெல்லாம்  எங்கே போயிற்று?


இன்று மேலும் ஐந்து சுப்ரமணிய புஜங்க ஸ்தோத்ரம் படிப்போம்:

16.   सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा
जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् ।
जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः
किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥१६॥

Suta-Anggo[a-U]dbhavo Me-Asi Jiive[a-I]ti Ssadd-Dhaa
Japan-Mantram-Iisho Mudaa Jighrate Yaan |
Jagad-Bhaara-Bhrdbhyo Jagan-Naatha Tebhyah
Kiriitto[a-U]jjvalebhyo Namo Mastakebhyah ||16||

ஸுதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
ஜகத்பாரபருத்யோ ஜகந்நாத தேப்ய
கிடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய (16)

''சுப்ரமணியா , பிரபஞ்ச நாயகா,  சாஷ்டாங்க நமஸ்காரம் உனக்கு  ஷண்முகா. ஆறு திருமுக மண்டலத்திலும் சிரத்தில் ஆறு  கிரீடங்கள் . ஒன்றை ஒன்று மிஞ்சும் அழகுடன்  ஒளிவீசி உள்ளத்தை கொள்ளை கொள்கிறதே. அந்த ஒளியே சர்வ நிவாரணி. லோக சம்ரக்ஷக உபாயம். ஞாபகம் இருக்கிறதா முருகா.  உன்னை அணைத்து  வணங்கி உச்சி  முகர்ந்து பரமேஸ்வரன் உன் திருமுடிகொண்ட சிற்பங்களில் முத்தமிட்டு  ''என்னிலிருந்து வந்தவனே, கார்த்திகேயா, நீ என்றும்  சிரஞ்சீவியாக  லோக பரிபாலனம் புரியவேண்டும் என்று ஆறுமுகத்துக்குமாக  ஆறுமுறை சொன்னாரே ''  என்கிறார்  ஆதி சங்கரர். '

17.  स्फुरद्रत्नकेयूरहाराभिरामः
चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः ।
कटौ पीतवास करे चारुशक्ति
पुरस्तान्ममास्तां पुरारेस्तनूज ॥१७॥

Sphurad-Ratna-Keyuura-Haara-Abhiraamah
Calat-Kunnddala-Shrii-Lasad-Ganndda-Bhaagah |
Kattau Piita-Vaasa Kare Caaru-Shakti
Purastaan-Mamaas-Taam Puraares-Tanuuja ||17||

ஸ்புரத்ரத்fன கேயூரஹாராபிராம
ஸ்சலத் குண்டல ச்லஸத் கண்டபாக
கடௌ பீதவாஸா கரே சாருசக்தி
புரஸ்தான் மமாஸ்தம் புராரேஸ் தனூஜ (17)

 என் முன்னே நீ வரவேண்டும்  வடிவேலா, குமரா, முப்புரமெரித்த  முழுமுதல் கடவுள் பரமேஸ்வர புத்ரா, எப்படி தெரியுமா?   உன் பன்னிரு தோள்களிலும்,  கைகளிலும், அகன்ற மார்பிலும் அழகுடன் மணம் வீசும் மாலைகள் அணிந்து, நவமணி மாலைகள் பளபளக்க உன்  மார்பிலும் கழுத்திலும் மின்ன, உன் பொன்னிற கணங்களில்  காதுகளில் இருந்து தொங்கும் வளையங்களும், ஆபரணங்களும் அசைந்து ஒளிவீச, பொன்னிற ஆடை, வஸ்திரங்கள், இடையில்  செந்நிற பட்டு ஆடைகள் அணிந்து கூர் வேல் தாங்கி, வா வா முருகா சுப்ரமண்யா'' என்கிறார்  உணர்ச்சிவசப்பட்ட சங்கரர். 

18.  इहायाहि वत्सेति हस्तान्प्रसार्या_
ह्वयत्यादशच्छङ्करे मातुरङ्कात् ।
समुत्पत्य तातं श्रयन्तं कुमारं
हराश्लिष्टगात्रं भजे बालमूर्तिम् ॥१८॥

Iha-Ayaahi Vatse[a-I]ti Hastaan-Prasaaryaa_
(Aa)Hvaya-Tyaada-Shacchangkare Maatur-Angkaat |
Samutpatya Taatam Shrayantam Kumaaram
Hara-[A]ashlisstta-Gaatram Bhaje Baala-Muurtim ||18||

இஹாயாஹி வத்ஸேதி ஹுஸ்தான் ப்ரஸார்யா
ஹுவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹுராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் (18)

''வாடா என் செல்லமே''  என்று  பாசத்தோடு   இரு கைகளை  நீட்டி அழைக்கும் தந்தையின் குரல் கேட்டதும் அம்மா  மடியில் ஸ்வஸ்தமாக  உரிமையோடு அமர்ந்துகொண்டு ஒரு கையால் அவளை அணைத்துக்கொண்டு  மற்றொரு கை விரல்களில்  ஒன்றை சூப்பிக்கொண்டு சாதாரண குழந்தைகளே  ஆர்வமாக  எழுந்து அப்பாவிடம் ஓடும்போது...... சுப்ரமணியன், ஆறுமுகன், தனது பிறவிக்கு காரணன்  ஸ்ரீ  பரமேஸ்வரன் வா என்றதும் ஓடிவரமாட்டானா? எனவே  ஆதிசங்கரர் திருச்செந்தூர்  முருகனை வேண்டி பக்தி பரவசத்துடன் ''வா வா முருகா, வரமருள் குமரா, வடிவேல் அழகா, பால குமாரா,  உன்னை  அப்படிப்பட்ட குழந்தையாக  காண்கிறேன் வணங்குகிறேன்  '' என்று ஸ்தோத்ரம் பாடும்போது எழுந்து அவரை நோக்கி  அருள் புரிய வரமாட்டானா?

19.  कुमारेशसूनो गुह स्कन्द सेना_
पते शक्तिपाणे मयूराधिरूढ ।
पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्
प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥१९॥

Kumaare[a-I]sha-Suuno Guha Skanda Senaa_
Pate Shakti-Paanne Mayuura-Adhiruuddha |
Pulinda-Atmajaa-Kaanta Bhakta-Arti-Haarin
Prabho Taaraka-Are Sadaa Rakssa Maam Tvam ||19||

குமாரேச ஸJனோ குஹு ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட
புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் (19)

சுப்ரமண்யா, சிவகுமாரா, உனக்கு  குகன் ஸ்கந்தன் என்றும்  நாமங்கள் உண்டே. தேவசேனைக்கு அதிபதியே, சக்திவேலாயுதா,  மயிலேறி விளையாடும் மைந்தா, வள்ளிக்கணவா,  தாரகனை வென்ற திருமுருகா,சதா சர்வ காலமும் ரட்சிக்கும்  தெய்வமே உன்னை வணங்குகிறேன் என்கிறார்  ஆதி சங்கரர்.

20.  प्रशान्तेन्द्रिये नष्टसंज्ञे विचेष्टे
कफोद्गारिवक्त्रे भयोत्कम्पिगात्रे ।
प्रयाणोन्मुखे मय्यनाथे तदानीं
द्रुतं मे दयालो भवाग्रे गुह त्वम् ॥२०॥

Prashaante[a-I]ndriye Nasstta-Samjnye Vicesstte
Kapho[a-U]dgaari-Vaktre Bhayot-Kampi-Gaatre |
Prayaanno[a-U]nmukhe Mayy-Anaathe Tadaaniim
Drutam Me Dayaalo Bhava-Agre Guha Tvam ||20||
ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்யாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹுத்வம் (20)

குமரேசா,  இருதய குகையில் ஒளிவீசும் குஹா, கந்தா காருண்யனே  அஞ்சு முகம்  தோன்றில் அஞ்சேல் என ஆறுதலை அளிக்கும் ஆறு தலையானே, நெஞ்சில் ஒரு கணம் நினைத்தாலும் இம்மையிலும் மறுமையிலும் காத்தருளும் கந்தா. உன்னை சரணடைகிறேன் என்கிறார்  ஆதி சங்கரர். கண் பஞ்சடையும் முன்னே, கடைவாயில்  பால் வழியுமுன்னே, மூச்சு திணறி வெளியேறும் முன்பே, நினைவொழிந்து மரமாகுமுன்பே, அப்போதைக்கு பதிலாக இப்போதே  சொல்லிவிடுகிறேன்  ஷண்முகா, உன் திவ்ய தரிசனம் தந்து  என்னை காத்தருள்வாய். உன்னையன்றி வேறெவர் அபயமளிப்பார் ஆபத் பாந்தவா?  என்கிறார்  ஆதி சங்கரர்.
தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...