வா அம்மா சரஸ்வதி !! J K SIVAN
நமது புண்ய தேசம் பல ஜீவ நதிகளை மட்டும் கொண்டவை அல்ல. ஜீவன்களையே காத்து ரட்சிக்கும் மகா பெரிய நதிகளை கொண்டவை. அவற்றில் சிந்து, நம்மை விட்டு பிரிந்து பாகிஸ்தான் சென்று விட்டது. பிரம்மபுத்ராவின் பெரும்பகுதியும் அவ்வாறே கைவிட்டு சென்றுவிட்டது. கங்கையை நாம் சீர் குலைத்து விட்டு இப்போது சுத்தம் செயகிறேன் பேர்வழி என்று சிலர் வீண் செலவுகள் செய்து கொண்டிருக் கிறார்கள். சரஸ்வதி இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் வெகு காலம் முன்பே நமக்கு '' டா டா'' காட்டிவிட்டு மறைந்து விட்டவள்.
சரஸ்வதி ஒரு வேதகால நதி. பழம்பெரும் நதி. அவளுக்கு நம்மால் காணமுடியாத கலைமகள் பேர்.. காணாமல் போன மஹா பெரிய நதி, சரஸ்வதி.
திரிவேணி சங்கமத்தில் கங்கா யமுனா சரஸ்வதி ஒன்று கூடுவதாக ஐதீகம். சரஸ்வதி அந்தர்வாஹினி யாக பூமிக்கு அடியில் அங்கே வந்து சேர்கிறாள் என்பார்கள்.
ஐந்தாயிரம் ஆறாயிரம் வருஷத்துக்கு முன்பு சரஸ்வதி நதிக் கரை நாகரீகம் ரிக் வேதம், மனு சாஸ்திரங்
களில் வேதங்களில் காணப்படுகிறது.
ISRO, ONGC, ஆகியோர் விண்வெளி ஆராய்ச்சி செயது சரஸ்வதியை தேடி அது காகர் ஹக்ரா நதி தான் இப்போது என்கிறார்கள். பாதி வடமேற்கு இந்தியாவில். மீதி பாகிஸ்தானில் இருப்பது.
சரஸ்வதி சிந்துவை விடவே பெரியவள். 1500 கிமீ நீளம் 3–15 கி.மீ அகலம் இருந்தவள். பனிமலையில் உருகி உருவானவள்.
க்ஷத்ரியர்களை வதம் செய்த பரசுராமன் சரஸ்வதியில் நீராடி தான் பாபங்களை தொலைத்தான்.
தொலைந்து போன, காணாமல் மறைந்த சரஸ்வதியை ஹரியானாக்காரர்கள் கண்டுபிடித்திருக்கி
றார்கள். சரஸ்வதி கொஞ்சம் வெளியே வந்து விட்டாள் . குருக்ஷேத்ரம் நோக்கி ஓடப்போகிறாள்
எத்தனையோ யுகம் ஆகிவிட்டது. ஹரியானா அரசாங்கம் நன்றாக செயல் படுவதை பார்க்கும்போது நாம் அங்கே இல்லையே என்று தோன்றுகிறது.
யமுனாநகரில் தோண்டி காணப்பட்ட சரஸ்வதி நதியின் மேல் மூன்று அணைக்கட்டுகள் வரப்போகி
றதாம். அவ்வளவு நீரா? .
4000 வருஷத்துக்கு முன்பு சரஸ்வதி நதி வற்றி விட்டது. எனினும் அதன் கரையில் தான் ரிக்வேதத்தின் சில பகுதிகள் எழுதப்பட்டன.
ஆராய்ச்சியாளர்கள் பிரயாசைப் பட்டு தேடி சரஸ்வதி நதிப்போக்கை அனுமானித்து யமுனாநகர் ஜில்லாவில், முகலிவாலி கிராமத்தில் தோண்டி எட்டடி ஆழத்தில் ஜலம் வெளியே வர அது சரஸ்வதி என்கிறார்கள். இதற்கென ஹரியானா அரசாங்கம் ஒரு பெரிய அமைப்பு உண்டாக்கி பல வல்லுநர்கள் சரஸ்வதியின் ஆரம்பகால போக்கை அலசி தோண்டி சரஸ்வதியை மீட்க பாடு படுகிறார்கள், அதை வெளிக்கொணர்ந்து ஒரு அணையும் கட்ட போகிறார்கள். சரஸ்வதியை கண்டுபிடித்து மீட்க 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள்.
பத்ரிநாத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் மலைப்பாறைகளிடையே சரஸ்வதி வெளிவருகிறாள். வேகமாக கொதித்து எழுகிறாள். இன்னும் சமவெளியை அடையவில்லை. தூரத்தில் அலக்நந்தாவுடன் சங்கமிக்கிறாள். அந்த இடத்தை தான் கேசவ ப்ரயாக் என்கிறோம்.
சரஸ்வதி என்றாலே நிறைய கொப்புளிக்கும் புனிதமான நீரை, அலைகளை, சுழல்களை அபரிமித
மாக கொண்டவள் என்று அர்த்தம். ரிக்வேதம் சொல்கிறது. சரஸ்வதி ஹாரூத் நதியாக ஆப்கானிஸ்
தானில் பேர் மாற்றிக்கொண்டுவிட்டாள். அவளிடமிருந்து பிறந்த உபநதி திரிஷத்வதி. இது ப்ரம்மவர்த்தம் என்றும் ஆரிய வர்த்தம் என்றும் வேத காலம் சொல்லும் நமது தேசத்தில் பரிமளித்தவை.
சரஸ்வதியை நதியாக வணங்கியதைவிட கல்விக்கடவுளாக, வாக் தேவியாக தான் அதிகம் அறிந்து வழி படும் அளவிற்கு வேதகாலத்தில் சரஸ்வதி நதி மறைந்து விட்டது. ரிக்வேதம் இதை சொல்கிறது.
யஜுர்வேத வாஜசநேயி சம்ஹிதை (34.11) சரஸ்வதியை சிந்து என சொல்கிறது. அப்பவே காணோம் போல் இருக்கிறது."பஞ்ச நதிகள் பாய்ந்து ஓடி வேகமாக சரஸ்வதியை அடைந்து சரஸ்வதி ஐந்து நதிகள் ஆனாள் ''அந்த பிரதேசம் பிற்காலத்தில் பஞ்சாப் .
No comments:
Post a Comment