Monday, March 11, 2019

A SCENE IN HEAVEN

விண்ணுலகில் ஒரு மாலைக் காட்சி
J K. SIVAN

நாரதன் தலை குனிந்து சோகமாக நின்றுகொண்டிருந்தான். ஏன் எதற்கு என்று ஒன்றுமே அவனுக்கே புரியவில்லை. காரணம் சமீபத்தில் அவன் மேற்கொண்ட பாரத தேச விஜயம்.

என் பிரபு நாராயணனுக்கே இதெல்லாம் புரியுமா என்று சந்தேகமாக இருக்கிறதே. நடப்பதெல்லாம் நாரயணன் செயல் என்று சொல்கிறார்களே. அவரா இதற்கெல்லாம் காரணம்?? இருக்காதே.

விண்ணுலகில் இன்னொரு பக்கத்தில் காந்தி ஒரு மேடையில் அமர்ந்திருக்க அவரை சுற்றி அநேகர் அவரது ராம நாம பிரார்த்தனையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். உள்ளூர பிடிக்காவிட்டாலும் தொப்பி அணிந்த தலையை ஆட்டிக்கொண்டு நேரு முதல் வரிசையில் அமர்ந்திருந்தாலும் அவர் மனது எண்ணம் எல்லாம் அவர் மகளையே நாடியது. சற்று தூரத்தில் கண்ணுக்கெட்டியபடி அவர் பிரியதர்சனி ஒரு ஆகிருதியான சாமியார் ஒருவரிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது அவர்கள் ஏதோ பெரிய திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று காட்டியது. பூமியில் இன்னுமா அவர்களின் திட்டம்?

பிரார்த்தனை கூட்டம் முடிந்து காந்தி தனது குடிசைக்கு திரும்பும்போது நேரு கண்ணில் படவே முகத்தை திருப்பிக் கொண்டு நடந்தார்
''பாபுஜி, உங்களிடம் ஒரு விஷயம் கேட்கவேண்டும் ''
''ஜவஹர், என்னிடம் இன்னும் கேட்க என்னஇருக்கிறது. நீதான் எதையும் சமயோசிதமாக செய்பவனாயிற்றே. உன்னை ஒரு வாரிசாக பாரதத்தின் காவலனாக நான் செய்ததற்கு நான் நிறையவே பரிசுகள் பெற்றுவிட்டேனே . பூமியில் எழும்பும் பலவிதமான ஆத்திர கூக்குரல் இங்கே என் காதை துளைக்கிறதே. ஏன் உன் காதில் விழவில்லையா. விழுந்தும் அலட்சியமா? மார்பில் பட்ட குண்டுகள் துளைத்ததை விட இன்னும் அதிகமாக என் நெஞ்சில் வலிக்கிறதே. ''

''ஏன் பாபுஜி விரக்தியாக பேசுகிறீர்கள். நான் இருக்கும்போது என்ன கவலை உங்களுக்கு.
''என் பெயர் தான் எனக்கு கவலை அளிக்கிறது.''
''என்ன சொல்கிறீர்கள் பாபுஜி?''
''ஒருவன் தனது பெயரை எவ்வளவு உன்னதமாக எல்லோரும் புகழும்படியாக வைத்துக்கொள்ள முடியும். எனக்கு மட்டும் ஏனோ இந்த துர்பாக்கியம்?''
''உங்கள் பெயர் எவ்வளவு அழியாப்புகழ் வாய்ந்தது பாபுஜி''
''அதனால் தான் உன் பெயரை விட்டு என் பெயரை நீ உன் வமசத்துக்கு சூட்டி விட்டாயோ. அவர்கள் என் வாரிசா உன் வாரிசா? உன் பேர் நேரு என்றால் காஷ்மீரில் ஏதோ ஒரு கால்வாயோ வாய்க்காலோ அதன் பெயராமே . உன் அப்பா அந்த பெயரை வைத்துக்கொண்டாராம். நமது தேசத்தில் என்னன்னவோ சொல்கிறார்களே. ''
''உங்கள் பெயரை என் வம்சம் பெருமையாக அல்லவோ வைத்துக்கொண்டிருக்கிறது.''
''ஆஹா, ஜவஹர் நீ சாமர்த்தியசாலி. ராஜாஜியை தான் தீர்க்க தரிசி என்று சொல்வேன். நீ அவரையே விழுங்கி சாப்பிடுபவன் என்று தெரியாமல் போய்விட்டது.
''என்ன பாபுஜி இப்படி பேசுகிறீர்கள்?''
''நீ ஒரு முறை பாரத தேசத்தில் ஒரு சந்து பொந்து விடாமல் முழுதும் சுற்றிவிட்டு காதை தீட்டிக்
கொண்டு யார் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுவிட்டு இங்கே வந்து என்னிடம் உண்மையை சொல்லேன்.''
அப்போது தான் நாரதர் குறுக்கே வந்தார்.
''என்ன நாரதா சோகம்'' என்கிறார் பாபுஜி
''நான் நீங்கள் சொன்னபடி சந்து பொந்து எல்லாம் சுற்றி விட்டு தான் வந்திருக்கிறேன் பாபுஜி.
'' ஓஹோ அப்படியா என்ன விஷயம் சொல்லு.
எலெக்ஷன் என்றால் என்ன பாபுஜி?''
''நல்லவர்களை, நம்பகமான, பொதுநலம் ஒன்றே மனதில் கொண்டு, தன்னை தேச நலனுக்கு அளிப்பவர்களை கண்டு பிடித்து ஆட்சியை அவர்கள் கையில் கெட்டியாக ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக மக்கள் இருக்க ஒரு வழி''.
''அப்படியென்றால் ஏன் நீங்கள் ஆட்சியை நடத்த ஒப்புக்கொள்ளவில்லை?''.
''எனக்கு மக்கள் சேவை மகேசன் சேவை என்ற கொள்கை . பதவி வேண்டாமே அதற்கு என்று இருந்து விட்டேன். கட்சியே வேண்டாம் கலைத்து விடு என்று நேருவிடம் சொன்னேன்.. அவர் எங்கே கேட்டார்?''


''ஐயோ எலெக்ஷன் பற்றி ஏதோ கூட்டணி என்கிறார்கள் புரியவில்லை.... ஒருவரை ஒருவர் யதுகுல வ்ருஷ்ணிகள் யாதவர்கள் கிருஷ்ணன் காலத்தில் நடந்ததைப்போல ஏதேதோ வெறித்தனமாக எதிர்ப்பதை, சண்டை போடுவதை, பேசுகிறதை பார்த்தால் தலை சுற்றுகிறது. என் பெயரே நாரதனா காந்தியா என்று சந்தேகம் வந்துவிட்டது பாபுஜி. இன்னும் சில காலம் பாரதம் பக்கமே போகமாட்டேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...