Sunday, March 10, 2019

GEETHAGOVINDHAM




கீத  கோவிந்தம் 
ஜெயதேவர் 
                                                 
                     ராதா,   நீ   யாரம்மா?
                                                                                

ஜெயதேவரின்  கீத கோவிந்தம் எனும் அஷ்டபதி  ஸ்லோகங்களைப் பற்றி  பேசுவதற்கு  முன்பு கட்டாயம்  ராதவைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.   ராதாவை அறியாமல் கிருஷ்ணனையோ  கீதகோவிந்தத்தையோ அறிய முயல்வது   எங்கோ ஒரு ஊருக்கு போவதற்கு  பதிலாக வேறு ஏதோ ஒரு ரயில் வண்டியில் ஏறி பிரயாணம் பண்ணுவது போல் ஆகிவிடும். பலனே  இல்லை. .

அவளுக்கு எத்தனையோ பெயர்கள்.ராதாராதிகாராதா ராணிராதிகா ராணிகிருஷ்ணனுக்கு பிரியமானவளுக்கு கிருஷ்ணனைப்போல் பல பெயர்கள் இருந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?  வல்லபகௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் அவள் சக்தி ஸ்வரூபம்நிம்பர்கா வகுப்பினர் ராதாவும் கிரிஷ்ணனும் சத்யத்தின் உருவகம் என்று வழிபடுகிறார்கள்என்னவோ தெரியவில்லைமகாபாரதத்திலோவிஷ்ணு புராணத்திலோஹரிவம்சத்திலோபாகவத புராணத்திலோராதவைப் பற்றி அறியமுடியவில்லைஆனால் பிரம்ம வைவர்த்த புராணம்கர்க சம்ஹிதைப்ருஹத் கெளதமிய தந்த்ராபோன்றவை ராதாவைப் பற்றியும் கிருஷ்ணனுடன் அவள் உறவு பற்றியும் பேசுகின்றனராதை
நாம் அறிந்துகொள்ளவேண்டியது  ராதா ஒரு முக்ய கோபி.   கிருஷ்ணன் இள வயதில் பல கோபியருடன் பிருந்தாவனத்தில் களித்து வாழ்ந்தான் வளர்ந்தான் என்று அறிகிறோம் அதில் முக்ய கோபி ராதாபன்னிரண்டு வயதில் குருகுலத்துக்கு கிருஷ்ணன் சென்றான்பத்து வயது ஏழு மாதம் நிரம்பிய பாலகனாய் கிருஷ்ணன் மதுராவிற்கு சென்றான் என்று எல்லாம் அறியும்போது எங்கோ வயதில் தவறு இருக்க ஏதுவாகிறதுகிருஷ்ணனை விட ராதா பன்னிரண்டு வயதுபெரியவள் என்று கூட சொல்கிறார்கள்.
கீத கோவிந்தம் ராதாவைப் பற்றி நிறைய பாடுகிறதுராதாவை கிருஷ்ணன் மனைவியாக பாரதத்திலோ பாகவதத்திலோ அறிய முடியவில்லைநிம்பர்கா ஆச்சாரியார்ஜெயதேவர் மூலமாகவே ராதாவை நன்றாக கேட்டு படித்து களிக்கிறோம். 

நமக்கு தெரிந்தது ராதை கிருஷ்ணனின் நண்பிபக்தைவிஸ்வாசிஆலோசகிமற்ற கோபியர் அவளது தோழிகள்நாம் பாகவத ஸ்கந்த புராணத்தில் தெரிந்து கொள்வது கிருஷ்ணனுக்கு கணக்கற்ற பக்தைகள்அவர்களில் 16000 பேர் அறியப்பட்டவர்கள்108 பேர் முக்யமானவர்கள்அவர்களில் பேர் பட்ட மகிஷிகள்கிருஷ்ணனின் கோபியர் அனைவரிலும் பிரதானமானவள் ராதாமிகவும் நெருக்கமானவள் ருக்மிணியா ராதாவா என்றால் கிருஷ்ணனுக்கு ராதை தான்எல்லா கோபியரும் லக்ஷ்மி அம்சம் தான்ராதாகிருஷ்ணன் உறவு இருவகைஸ்வகீய ரசம், (நெருங்கிய உறவுமற்றது பரகீய ரசம் (உள்ளத்தின் உறவுசைதன்யரின் பக்தி     ராதா -கிருஷ்ணனின் இதய பூர்வ - உள்ள உறவு ஒன்றிலேயே லயித்து அது உயர்ந்த அன்பு என்பதேதனித்திருந்தாலும் சேர்ந்திருந்தவர்கள் அவர்கள்எண்ணத்தால் ஒன்றானவர்கள்கோபியர் கண்ணனிடம் கொண்ட காதல் உத்தம மன நிறைவான காதல் ஒன்றேஉடல் சம்பந்த பட்டது அல்லமனதில் ஊற்றாக வெள்ளமாக ஊறிய காதல்.  இதற்கு பிரேமை என்று பெயர். 

ராதா யார்வ்ரிஷபானு என்கிறவர் அவரது பூர்வ ஜன்மத்தில் ராஜா சுச்சந்திரா வாக இருந்தார்அவருக்கும் அவர் மனைவி கலாவதிக்கும் பிரம்மா கொடுத்த வரத்தின் பயனாக த்வாபர யுகத்தில் லக்ஷ்மி தேவியே பெண்ணாக அவதரித்தாள்அவளே ராதா.கலாவதி ராணியே வ்ரிஷ பானுவின் மனைவி கீர்த்தி குமாரி . 

ராதை குழந்தையாக இருக்கும்போது நாரதர் அவளைப் பார்க்க வந்தபோது வ்ரிஷபானுவிடம் என்ன சொன்னார் தெரியுமா

'' இந்த குழந்தை சாதாரணம் இல்லைலக்ஷ்மிதேவியே . தாயாராகவே இவளை வளர்த்து வாஇவள் காலடி பட்ட இடம் நாராயணன் இருக்குமிடம்அவரே கிருஷ்ணன் என அறிவாய்'' வ்ரிஷபானுவிடம் ராதை அவ்வாறே வளர்ந்தாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...