Saturday, March 2, 2019

ASOK KUMAR


பாகவதருடன் ஒருநாள்..... J K SIVAN 

அசோகர் என்ன செய்தார் என்ற கேள்வி  மூன்றாவது படிக்கும்போது தமிழில் கேட்டபோது  நாங்கள் எல்லோரும் எழுதிய, சொன்ன,  பதில் எங்கள் சரோஜினி டீச்சர் சொல்லிக்கொடுத்தது.

''அசோகர்  Tகுளங்களை வெட்டினார். சாலைகள்  அமைத்து,   அதன்   இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட்டார். எல்லோருக்கும் உணவு தானம் செய்தார்'' என்பது தான்.

அசோகருக்கு  எத்தனை குழந்தைகள்?  என்ற கேள்வி ஆங்கிலத்திலும் தமிழிலும் கேட்டபோது, நமக்கு தெரிந்த விஷயம்  சங்கமித்ரை என்ற பெண், மஹேந்திரன் என்ற  பிள்ளை இருவரும்  போதி மரத்தின் கிளைகளை  எடுத்துக்கொண்டு இலங்கை போய்  அங்கே   நட்டு புத்தமதத்தை பரப்பினார்கள்.  அசோகரால் புத்தமதம் இந்தியாவில் மற்ற நாடுகளில் எல்லாம் தழைத்தது. முற்றுப்புள்ளி. இதற்கு மேல் ஒன்றும்  எனக்கு நேற்று பகல்   வரை தெரியாது.

80 வயதுக்கு  பிறகு இளங்கோவன் வசனத்தில்  M.K. தியாகராஜ  பாகவதர் நடித்த ''அசோக் குமார் ''படம் நேற்று பார்த்த பிறகு புத்தர் போல்  ஞானோதயம் ஆன விஷயம்:

அசோகருக்கு   ஐந்து  மனைவிகள்.
1.பட்டத்துராணி   அசந்தமித்ராவுக்கு குழந்தைகள்  இல்லை.
2. தேவி.  விதிஷா நகர வணிகன் மகள்.  அவள் மூலம்  மஹேந்த்ரன், சங்கமித்ரை யுடன்  .சாருமதி என்று ஒரு பெண்.
3. காருவகி .  ஒரு  மீன்பிடிப்பவன் பெண். அவள் மூலம் ஜலாக் என்று ஒரு பிள்ளை. அவன் காஷ்மீர் ராஜாவாகிறான்.
4. பத்மாவதி  - திவளா  என்று ஒரு பிள்ளை. அகாலமரணம் அடைகிறான். அவள்  குநல் என்று பிள்ளையை சுவீகாரம் எடுத்து வளர்க்கிறாள்.  இவனை  குணாளன் என்ற பாத்திரமாக  அசோக் குமார் சினிமாவில்  எம்.கே.டீ.  பாகவதர்  நடிப்பதை பார்த்தேன்.
5.திஷ்யரக்ஷிதா  -  கண்ணாம்பா இந்த மனைவியாக  நடிக்கிறார்.  திஷ்யரக்ஷிதா   குணாளனை குருடாக்கி விடுகிறாள்.

சரித்திரம்  போதும்.இனி அசோக் குமார் படத்துக்கு வருவோம்.  (படம் பெயர் அசோக் குமார் ?  அசோகர் பிள்ளை குணாளன் பற்றியதாலா?)


1941ல்  ராஜா சந்திரசேகர் இதை டைரக்ட் செய்து நாகையா பாகவதர், கண்ணாம்பா,  NS   கிருஷ்ணன்,மதுரம் ஜோடி,  MGR  (மஹேந்திரனாக அடையாளமே தெரியாமல் ஒன்றிரண்டு  காட்சிகளில்) நடித்த படம். அசோகன் ஐந்தாம் மனைவி திஷ்யா குணாளன் மேல் காதல் கொள்ள, அவன் மறுக்க,  திஷ்யா  அவதூறாக குணாளன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக  ராஜா  அசோகரிடம்  (நாகையா)  குற்றம் சாட்டி , அவன் கோபம் கொண்டு  மகனை நாடுகடத்தி, பிறகு அவனை சூழ்ச்சியால் கண்களை குருடாக்க உத்தரவிட்டு  அவன் தவிக்கிறான். ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் நன்றாக பாடுகிறான். பாபநாசம் சிவன் வெளுத்து வாங்கிவிடுகிறார். படத்துக்காகவே ஓடிய பாகவதர் படங்களில் இது முக்கியமான ஒன்று. குணாளன் மனைவி காஞ்சனமாலையாக டிவி குமுதினி  வருகிறார், அழுகிறார், ஓடுகிறார். குழந்தை பெறுகிறாள். அது இறக்கிறது . பாட்டு பாட்டு பாட்டு. தந்தி அடிப்பது போல்  வார்த்தை வார்த்தையாக  பாகவதர் பேசுகிறார். அனால் பாடும்போது மட்டும்  சீறி வரும் வெள்ளம்போல்  அசாத்தியமாக பிர்காக்களோடு வார்த்தைகள்  சுகமான ராகங்களில்  செவிக்கினிய விருந்து. ''உனைக்கண்டு மயங்காத..''  பாட்டை  ஹரிதாஸ் படத்தில் பாகவதர் பாட,  T  R  ராஜகுமாரி ஆடி பார்த்தவன் அதே பாட்டுக்கு  P  கண்ணாம்பா ஆடியதை பார்த்தபோது கொஞ்சம் என்னவோ போல்  இருந்தது. கடைசியில் ராஜா அசோகர் உண்மையை உணர்கிறார். திஷ்யா என்ன ஆனாள் தெரியவில்லை, மாறிவிட்டாள். புத்த பிக்ஷு ஒருவர்  நடுநடுவே  படத்தில் வருபவர்,  புத்தர் சிலைமுன் நின்று வேண்ட வைத்து குணாளன் கண் பெருகிறான். பழைய ராராஜா உடை யில் பாகவதர்... சுபம் சுபம் சுபம். . 

15-16 பாடல்கள் கொண்ட  இந்த படம் வெகு நேரம் என்னை உட்கார வைத்து விட்டது.  ஆனால்  பாகவதர் பாடல்கள் என்னை சிலையாக்கி  மேலே  பாட்டுக்காகவாவது பார்க்க வைத்தது.  மனமே நீ, தியானமே எனது, உனைக்கண்டு,  மானிட வாழ்வு,, கண்ணே கண்மணியே, சத்வ குண போதன்  மறக்க முடியாத  இசை பொக்கிஷங்கள்.  ஒரு தரம் பாருங்களேன். புத்தர் ஆசி பெறுவீர்கள் .


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...