கொஞ்சம் மனசுக்கு கஷ்டம்
J K SIVAN
கொசு ரொம்ப சின்னது. கண்ணுக்கே தெரியாமல் இருந்தாலும் சில சமயங்கள் நம்மை கடிக்கும்போது கொஞ்சம் வலிக்கிறது. அதை பார்க்காமலேயே நமது கை அதை நசுக்குகிறது. அது போன்ற விஷயம் இது.
கிருஷ்ணனை பிடிக்காமல் இருந்தால் அது வேறு விஷயம். கிருஷ்ணனை தூஷிப்பது கிருஷ்ணன் இருந்த காலத்திலிருந்தே இருக்கிறது. சிசுபாலன் ஒன்றா இரண்டா நூறு தடவை அல்லவா பலர் முன்னிலை
யில் கிருஷ்ணனை தூஷித்தான். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா? அவன் தாய்க்கு கொடுத்த வாக்கின் படி நூறாவது முறை தூஷித்தபின் சிசுபாலன் உயிர் பறி போனது. இப்போதும் கிருஷ்ணனை தூஷிப்பவர்கள் சிசுபாலன் ரகம் அல்ல. கால் தூசிக்கு சமான மானவர்கள். நாய் குலைத்தால் நாம் திருப்பி குலைக் கிறோமா? அப்படி அதை லக்ஷியம் பண்ணாமல் இருந்ததால் அதற்கு தன்னை எதிர்க்க மனிதர்களுக்கு பலம் இல்லை.பயம் என்று அர்த்தம் புரிந்து கொள்வது வேடிக்கை. குளத்தில் குளித்துவிட்டு வந்த யானை எதிரே ஒரு சேற்றில் உழன்று விட்டு வரும் பன்றியை பார்த்து விலகிப்போகிறது.
''பன்றி தனது மனவியிடம் சொல்கிறது: பார்த்தாயா, கண்ணே, யானைக்கு கூட என்னைக் கண்டால் மரியாதை, பயம். என்னைக்கண்டதும் விலகிப்போகிறது''
யானையைக் கேட்டால் சொல்லும்:
''பன்றியை என் தும்பிக்கை தொட்டால், வீசி எறிந்தால் அதன் மேல் உள்ள சேறு என் மீது அனாவசியமாக ஒட்டிக்கொள்ளும். அதைத் தொடுவானேன், சேற்றை பூசிக் கொள்வானேன்''
ஹிந்துக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கிருஷ்ணனை சாதாரணமான மனிதனாக உருவகித்து அவன் செயல்களில் நாம் செய்யும் தவறுகளை திணிப்பது, புகுத்துவது அறிவின்மை. நமக்கும் மேலே உள்ள அதீத கருணாசாகரம் ஆண் பெண் பேதமற்றது. குற்றமற்றது. குறையொன்று மில்லாத கோவிந்தன் என்று பெயர் கொண்டவனை இழிவாக பேசுவது கெடுவரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே சமாச்சாரம். சில விஷயங்களை காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். ஆனால் முடிந்தவரை மற்றவர்க்கு எடுத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் இந்த மாதிரி துஷ்ப்ரச்சாரங்கள் வளர்வது விஷயம் தெரியாதவர்களை நம்ப வைப்பதன் மூலம். ஆள் பிடிக்கும் வேலை. இவர்களை தண்டிக்க கிருஷ்ணன் வரவே வேண்டாம். நமது காலணி ஒன்றே போதும்.
No comments:
Post a Comment