Thursday, March 7, 2019

A DISCUSSION



நாரணனும் நாரதனும்.. J.K SIVAN

'' நாரதா என்ன ரொம்ப குழம்பி போய் காண்கிறாய். என்ன நடந்தது பூலோகத்தில் சொல்லு?''
''நாராயணா, என்னவோ தெரியவில்லை, பூலோகம் போக கிளம்பினால் என் கால்கள் என்னை அறியாமல் பாரத தேசத்தை சுற்றி சுற்றி தான் வருகிறதே தவிர வேறு எங்கும் செல்ல இயலவில்லை''
''சரி. பாரத தேசத்தில் என்ன விசேஷம்?''
''ஒவ்வொரு முறை பாரத தேசம் செல்லும்போதும் ஒரு புது வித அனுபவம் என்னை பற்றிக்கொள்கிறது பிரபு''
''என்ன அது?''
''ஒரு மனிதனை எல்லோரும் வெறுக்கிறார்கள்?
''அடடா? ஏன் அவன் அவ்வளவு கெட்டவனா?''
''அது தான் இல்லை, அவன் நேர்மையானவன், பொறுப்புணர்ச்சி கொண்டவன். சுயநலமின்றி உழைப்பவன் என்பதால் தான்''
''ஆச்சர்யமாக அல்லவா இருக்கிறது நீ சொல்வது?'' ஒருவேளை அவன் ரகசியமாக ஏதாவது தப்பு தவறுகள் செய்பவனோ, அது வெளி வந்ததால் பிரஜைகள் கோபமாக இருக்கிறார்களோ?''
''அதுவும் இல்லையே. அவனை எதிர்ப்பவர்கள் அவனது எதிர் கட்சி காரர்களே தவிர மக்கள் அனைவரும் அல்ல''
''என்ன நாரதா இது புதிர் போடுகிறாய்?'' ஒருவன் இவ்வளவு நல்லவன், உழைப்பவன், கை சுத்தமானவன், நேர்மையும், பரந்த நோக்கமும் கொண்டவன் என்கிறாய், அவனை ஏன் எதிர்க்கவேண்டும்.?''
''பதவி ... பதவி ..பதவி மோகம். அவனை வரவிடாமல் தடுத்தால் தாம் அந்த பதவியில் உட்கார்ந்து பயனை தானும் தன்னை சேர்ந்தவர்களும் அனுபவிக்கலாமே என்ற பேராசை'' . இப்படி தான் பல வருஷங்கள் அனுபவித்த ருசி''.
''நாரதா சில நாட்களாக நீ இந்திய அரசியல்வாதிகள் போல் பேசுகிறாய். எதை நம்புவது, எது உண்மை அல்ல என்றே புரியவில்லையப்பா''
''அது தான் எனக்கும் புரியவில்லை பிரபு. ஒவ்வொருவரும் பாரத தேசத்தில் தன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சுயநலக்காரர்கள், பதவி வெறி பிடித்தவர்கள், தேச அக்கறை இல்லாதவர்கள் என்று சொல்கிறார்கள்...ஆனால் ..
என்ன ஆனால்..
நான் சொன்ன அந்த ஒரு நல்லவனைத்தவிர மற்றவர்கள் பற்றி பக்கம் பக்கமாக சொத்து சேர்த்த விபரம், உள்ளூர் வெளியூரில் கணக்கில் வராத விஷயம் என்று என்னென்னவோ பயங்கரமாக சொல்கிறார்கள் பேசுகிறார்கள் சம்பந்தப்பட்டவனோ அத்தனையும் அபாண்டம் என்கிறான். முழுப்பூசணி யை சோற்றில் மறைப்பது எளிதாக இருக்கிறது. இதற்கென்றே சில வக்கீல்கள் பிழைக்கிறார்கள் பிரபு''
சரி நான் ஒருமுறை பூமிக்கு சென்று இதெல்லாம் சரி செய்ய வேண்டுமோ?
இப்போதைக்கு கலியுகம் கால் பாகம் தான் நடக்கிறது. இன்னும் முக்கால்வாசி இருக்கிறதே. ஒருவேளை இந்த நல்ல மனிதனே மீண்டும் பதவிக்கு வந்தால் உங்களுடைய பளு கொஞ்சம் குறையும் என்று தான் எனக்கு தோன்றுகிறது பிரபு''
ஓஹோ.. நாம் என்ன செய்யவேண்டும் இப்போது.
நாம் என்றால் நீங்களும் நானும் அல்ல... பாரத தேச மக்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும். எனக்கு தெரிந்து அவர்கள் தூக்கம் நிறைய கலைந்து விட்டது.விழிப்பாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு செய்வார்கள்''
எப்படி... ஏதாவது போர் ... யுத்தம் நிகழுமோ?
இல்லை. இல்லை நாராயணா. கத்தியின்றி ரத்தமின்றி, எல்லோரும் கையில் மைதடவி ...
என்னது மை வித்தையா ...?''
அந்த பில்லி, சூனியம், மை வித்தை இல்லை இது சுவாமி. தேர்தல் என்று நான்கு ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அன்று பதவிக்கு வர ஆசைப்படுபவர்கள் எல்லாம் பேர் கொடுக்கிறார்கள். மக்கள் யார் வேண்டுமோ அவர்களை ''நீ தான் வேண்டும் '' என்று தேர்ந்தெடுக்கிறார்கள்.
இதற்கும் மைக்கும் என்ன சம்பந்தம்.
ஒரு காகிதத்தில் பெயர்கள் இருக்கும் என்று சொன்னேனே. அதில் வேண்டிய நபரின் பெயருக்கு முன் குறியீட்டு பெட்டியில் போட்டுவிட்டு கையில் மைதடவிக்கொண்டு வெளியே வருவார்கள். பின்னால் அந்த காகிதங்கள் எண்ணப்பட்டு யார் முதன்மையாக அதிக எண்ணிக்கை பெறுகிறார்களோ அவர் நாட்டை ஆளுகிறார்கள் .
கை விரலில் மை என்று சொன்னாயே... அது ஏன்?
அதே ஆசாமி மீண்டும் வந்து மற்றொருமுறை தனக்கு வேண்டியவனை மறுபடியும் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காக. அந்த மை ஒருவாரமாவது அழியாமல் இருக்குமே,
எனக்கு தலை சுற்றுகிறது நாரதா,. உன்னைப் பார்த்து ஏன் குழம்பி இருக்கிறாய் என்று கேட்டேன். நானே குழம்பிப் போய்விட்டேன்... அப்புறம் உன்னை சந்திக்கிறேன்.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...