துள்ளு மத வேட்கை.... J.K. SIVAN
இன்றைக்கு ஒரு திருப்புகழை ரசிப்போம்.
இது முருகனை நாயக நாயகி பாவத்தில் தொழும் ஒரு பிரார்த்தனை என்பதால் இதில் விரகம் த்வனிக்கும்.
'' துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே''
தொல்லைநெடு நீலக் ...... கடலாலே
மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே
மெய்யுருகு மானைத் ...... தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே
செய்யகும ரேசத் ...... திறலோனே
வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே
வள்ளிமண வாளப் ...... பெருமாளே.''
இளைமைக்கே உதாரணமான ஒரு செருக்குடன் துரு துருவென்று காட்சியளிக்கும் மன்மதனின் ஆயுதமான கரும்புவில்லிலிருந்து புறப்படும் மலர் அம்புகளால் துளைக்கப்பட்டு வாடுகிறேன்.
கண்ணுக்கெட்டிய நீல நிறக்கடல் போல எனது நீண்ட மனத்துள் வளரும் தாபத்தை, துயரத்தை , மெல்ல மெல்ல மெதுவாக வந்து இனிய குரலால் இசைக்கும் குயில் இன்னும் அதிகமாக்கி விடுகிறதே, என்பதாலும், உன்மீது கொண்ட தீராத காதலால் உடல் உருகும் மான் போன்ற உன்மீது இரவு பகல் உறக்கமில்லாமல் தவிக்கும், அழகிய பெண்ணான என்னை 'முருகா நீ வந்து அணைத்து அவள் துன்பம் தீர்க்கமாட்டாயா?'
இனிமையான தீந்தமிழ் பாடல்களைப் பாடவல்ல, தமிழர் தெய்வம், தெள்ளிய ஞானம் கொண்ட அறிவோனே, சிவந்த அழகிய உருவம் கொண்ட குமரேசன் என்ற நாமத்தால் வணங்கப்படும் முருகா, அதி தீர வீர பராக்கிரம சாலியே, தேவ சேனாபதியே, உலகுக்கே ஆதாரமான கேட்டதெல்லாம் கொடுக்கும் அருள்
வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற சிவகுருவின் பேர் படைத்த தந்தைக்குபதேசம் செய்த சுவாமி நாதா, சரணடைய சிறந்த ஞானத் திருவடிகளை உடையவனே,வள்ளி கணவா முருக பெருமாளே, சரணம் சரவணபவா!
No comments:
Post a Comment