ஶ்ரீஹநுமத் பஞ்சரத்நம் ॥ श्रीहनुमत् पञ्चरत्नम्
J.K. SIVAN
वीताखिल-विषयेच्छं जातानन्दाश्र पुलकमत्यच्छम् ।
सीतापति दूताद्यं वातात्मजमद्य भावये हृद्यम् ॥ १॥
vītākhila-viṣayecchaṃ jātānandāśra pulakamatyaccham ।
sītāpati dūtādyaṃ vātātmajamadya bhāvaye hṛdyam ॥ 1॥
வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥
வாயு புத்ரா, வீரா, ஆஞ்சநேயா, உன்னை மனதில் நிறுத்தி, நிறைத்து கொள்கிறேன். எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? நீ யல்லவோ உதாரண புருஷன். தியாக செம்மல். ஐம்புலன்களை கட்டி ஆண்ட ஜிதேந்திரியன், ஆசை பாசங்களுக்கு இடம் கொடுக்காதவன், ராமா என்ற ரெண்டு அக்ஷரங்களுக்கு முழு சக்தி கொடுப்பவன், இந்த தாரக மந்திரத்தை யார் உச்சரித்தாலும் கேட்டு ஆனந்தத்தில் ஆழ்பவன், அனந்த பாஷ்பம் வடிப்பவன், உள்ளும் புறமும் பரிசுத்தன், பிரதான ராம தூதன். உன்னை திருவடி தொட்டு வணங்குகிறேன்.1.
तरुणारुण मुख-कमलं करुणा-रसपूर-पूरितापाङ्गम् ।
सञ्जीवनमाशासे मञ्जुल-महिमानमञ्जना-भाग्यम् ॥ २॥
taruṇāruṇa mukha-kamalaṃ karuṇā-rasapūra-pūritāpāṅgam ।
sañjīvanamāśāse mañjula-mahimānamañjanā-bhāgyam ॥ 2॥
தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥
தாமரையா உன் முகமா, எது என்றே வித்யாசம் கண்டுபிடிக்க முடியவில்லையே ஆஞ்சநேயா. ஒருவேளை நீ தான் கிழக்கே உதிக்கும் உதய பானுவா, சூரியனா, உன் கடைக்கண் தேடுவோம் நாங்கள் என்பதை உணர்ந்து தான் உன் கடைவிழிகளில் கருணையும் எல்லையற்ற அன்பும் தேக்கி வைத்திருக்கிறாயா ஹநுமானே, வாயு புத்ரா, நீ தான் எங்கள் ஆக்சிஜன், பிராண வாயு, உயிர் மூச்சு, உன் பெருமையே உன் கம்பீரம், ஆண்மை, வீரம், அழகு, அஞ்சனையை கேட்கிறேன் ''என்ன தவம் செய்தனை அஞ்சனா, இப்படி ஒரு மாணிக்கத்தை பெற ? நீ ரொம்ப ரொம்ப அதிருஷ்டக்காரி.''
शम्बरवैरि-शरातिगमम्बुजदल-विपुल-लोचनोदारम् ।
कम्बुगलमनिलदिष्टम् बिम्ब-ज्वलितोष्ठमेकमवलम्बे ॥ ३॥
śambaravairi-śarātigamambujadala-vipula-locanodāram ।
kambugalamaniladiṣṭam bimba-jvalitoṣṭhamekamavalambe ॥ 3॥
ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥
காமன் விடு கணை எங்கெங்கோ தூரத்தில் இருந்தாலும் கண் சிமிட்டுவதற்குள் சென்று சம்பந்தப்பட்டவனை/வளை வேகமாக சென்று இதயத்தை துளைக்கும் என்பார்கள். அடேயப்பா, ஆஞ்சநேயா நீ அதனிலும் படு வேகமானவன். உன்னை தஞ்சம் என அடைந்தேன். ஏற்றுக்கொள்ளப்பா. உன் கமல நயனங்கள் புத்தம்புதிதாக மலர்ந்த தாமரைஇதழ்கள் தான் என்பதில் எனக்கு தூக்கத்தில் கூட சந்தேகமில்லை. இதழ்கள் என்றா சொன்னேன். தவராயிற்றே. அவை கருணை நிரம்பிய பாத்திரங்கள் என்பது தான் பொருத்தம். உன் அழகிய கழுத்துக்கு நீ எந்த ஆபரணமும் சூடாதே . அற்புதமான சங்கை ஒத்த வெள்ளை வெளேரென்று கண்ணைப் பறிக்கிறது உன் கழுத்து மஹா வீரா. கழுத்தை ஒட்டி ஒரு தோளில் நீ கதையை சுமக்கும் அழகே அழகு அப்பனே. வாயு தேவன் ரொம்ப ரொம்ப புண்ணியசாலி, பாக்கியவான். இப்படி உன்னை புதல்வனாக பெற. எங்கள் வள்ளுவர் கூட வாயுவை பார்த்துவிட்டுத்தான் ''இவன் (உன் தந்தை) என்நோற்றான் கொல் எனும் சொல் '' என்று எழுதிஇருப்பார். உனது சிவந்த இதழ்கள் அழகிய தேன் சொட்டும் சிவப்பு பழமாக தோன்றி நாவில் ஊறுகிறது....''
दूरीकृत-सीतार्तिः प्रकटीकृत-रामवैभव-स्फूर्तिः ।
दारित-दशमुख-कीर्तिः पुरतो मम भातु हनुमतो मूर्तिः ॥ ४॥
dūrīkṛta-sītārtiḥ prakaṭīkṛta-rāmavaibhava-sphūrtiḥ ।
dārita-daśamukha-kīrtiḥ purato mama bhātu hanumato mūrtiḥ ॥ 4॥
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥
என் கண்கண்ட தெய்வமே, வீர மாருதி, ஒளிவீசுகிற திருமேனியுடன் என் முன்னே வா காட்சி கொடு, சீதைக்கு முன்பு அப்படித்தானே தோன்றி துயர் தீர்த்து, அவளுக்கு நிம்மதியை, தெம்பை, அளித்தவன் நீ, ராமனின் மேன்மையை பராக்கிரமத்தை எடுத்துச் சொல்லி ராவணன் பெருமையை மதிப்பை, தூளாக்கியவன்.
वानर-निकराध्यक्षं दानवकुल-कुमुद-रविकर-सदृशम् ।
दीन-जनावन-दीक्षं पवन तपः पाकपुञ्जमद्राक्षम् ॥ ५॥
vānara-nikarādhyakṣaṃ dānavakula-kumuda-ravikara-sadṛśam ।
dīna-janāvana-dīkṣaṃ pavana tapaḥ pākapuñjamadrākṣam ॥ 5॥
வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼஶம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥
வானர சேனையின் முக்கியனே, தீரனே, வீரனே, இரவுக்கு எதிரியான சூரியன் போல் ராக்ஷர்களுக்கும் அக்கிரம அதர்ம ஜீவன்களுக்கு எதிரியே, எளியோரின் துன்பம் தீர்ப்பவனே, தர்ம ரக்ஷகா, தீனபந்து, வாயு தேவன் செய்த எண்ணற்ற தவப்பயனே, பவனகுமாரா, உன்னை போற்றி வணங்குகிறேன்.
एतत्-पवन-सुतस्य स्तोत्रं यः पठति पञ्चरत्नाख्यम् ।
चिरमिह-निखिलान् भोगान् भुङ्क्त्वा श्रीराम-भक्ति-भाग्-भवति ॥ ६॥
etat-pavana-sutasya stotraṃ yaḥ paṭhati pañcaratnākhyam ।
ciramiha-nikhilān bhogān bhuṅktvā śrīrāma-bhakti-bhāg-bhavati ॥ 6॥
ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்நாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥
இந்த ஐந்து குட்டி ஸ்லோகங்கள் ஹனுமான் பஞ்சரத்ன ஸ்லோகங்கள். இதைக்காட்டிலும் இரத்தின சுருக்கமாக ஹனுமனை துதிக்க வழியில்லை. இதை பக்தியோடு துதிப்பவர்கள் ராமனுக்கு வேண்டியவன். சகல இகபர சுகங்களையும் பெறுபவன் என்பதில் ஆதிசங்கரருக்கோ எனக்கோ, உங்களுக்கோ எள்ளளவும் சந்தேகமே இல்லையே.
No comments:
Post a Comment