Wednesday, December 20, 2017

GNANAPPANA

சோகம் தந்த ராகம்.. ஞானப் பான - 5
j.k. sivan

மொழி தெரியாத விஷயத்தை எழுதுவது ஒரு கயிற்றின் மேல் நடப்பது போல.எப்போது தவறு ஏதாவது நேரும்,   எந்த நேரம் சரிந்து விழுவோம் என்று தெரியாது. ஒரு நண்பர் ஞானப்பானை அல்ல சிவன் சார், அது  ஞானப்பான என்கிற  நாடோடி பாட்டுக்கான ஒரு ''சந்தம்'' என்றார்.  நமது நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து போல் ஒரு இசை மெட்டு.  அது எளிமையான நாடோடிப்பாடலா,  அல்லது அன்றாட கடைத்தெரு மலையாளத்திலா  என்பது மலையாளம் அறிந்தவர்களுக்கு தான்  தெரியும். நம்மில் பலர்  அவ்வாறு இருப்பார்களே, அவர்கள் சொல்லட்டும். மொத்தத்தில் இது ஒரு  உன்னத நீதி நூல் என்பதில் சந்தேகமே இல்லை.  

இன்டர்நெட் சில சமயங்களில் தவறான செய்திகளை, தாங்கி வருவது தெரிந்ததே.  இன்டர்நெட்டில்  எழுதுபவர்கள் ஆதாரத்தோடு எல்லாவற்றையும் எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பதே தேவையற்றது.
ஆகவே  ஒரு சிலர்  ஞா னப்பான,   ஒரு மண் சட்டிப்பானை என்று சிலர் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அப்படி அது சட்டியாக அது இருக்குமானாலும்  அதில் நிரம்பி இருக்கும் உயர்ந்த  கிருஷ்ண பக்தி ஒன்றே எமக்கு விருப்பமானது.  அதன் உயர்ந்த கருத்துகளை மட்டும் அறிவோம்.

മുന്നമിക്കണ്ടവിശ്വമശേഷവും
ഒന്നായുള്ളൊരു ജ്യോതിസ്സ്വരൂപമായ്

Munnam ikkanda viswam aseshavum
Onnaayulloru jyothi swaroopamaay

ഒന്നും ചെന്നങ്ങു തന്നോടു പറ്റാതെ
ഒന്നിനും ചെന്നു താനും വലയാതെ
Onnum chennangu thannodu pattaathe
Onnilum chennu thaanum valayaathe

ഒന്നൊന്നായി നിനയ്ക്കും ജനങ്ങൾക്കു
ഒന്നുകൊണ്ടറിവാകുന്ന വസ്തുവായ്‌
Onnonnaayi ninakkum janangalkku
Onnukondariyaavunna vasthuvaay

ഒന്നിലുമറിയാത്ത ജനങ്ങൾക്കു
ഒന്നു കൊണ്ടും തിരിയാത്ത വസ്തുവായ്‌
Onnilum urakkaattha janagalku
Onnu kondum thiriyaatha vasthuvaay

ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളതി
ന്നൊന്നായുള്ളോരു ജീവ സ്വരൂപമായ്‌
Onnu pole onnillaathe ullathil
Onnaayulloru jeeva swaroopamaay

ഒന്നുകൊണ്ടു ചമച്ചൊരു വിശ്വത്തില്‍
മൂന്നായിട്ടുള്ള കര്‍മ്മങ്ങളൊക്കെയും
Onnu kondu chamachoru viswathil,
Moonayitulla karmangal okkeyum,

ഒന്നിലുമൊരു ബന്ധമില്ലാതെയായ്‌
നിന്നവൻ തന്നെ വിശ്വം ചമച്ചുപോൽ
Ninnavan thanne viswam chamachu pol,

മൂന്നുമൊന്നിലടങ്ങുന്നു പിന്നെയും
ഒന്നുമില്ല പോൽ വിശ്വമന്നേരത്ത്
Moonnum onnil adangunnu pinneyum
Onnu kondu chamachoru viswatthil 

இதை என்னவென்று சொல்லலாம். ஆச்சர்யம் என்றா. அதிசயம் என்றா? முன்பு பிரளயம் என்று நாம் கேள்விப்பட்டோம் அல்லவா. அப்போது அழிந்து மீண்டும் துளிர்த்த அந்த ப்ரபஞ்சமா இது? பிரளயத்தின் போது எங்கே பார்த்தாலும் ஒரே ஜோதி பிரகாசமாக இருந்ததாம்.

வேறே எதுவுமே அதை தவிர இல்லையே. அதுவும் வேறே எதுவுடனும் சேர்ந்து காணப்படவில்லையே. இது என்ன என்று குனிந்து கண் விரித்து ஒன்று ஒன்றாக தேடினால் .....எல்லாமே ஒரே வஸ்துவாக அல்லவோ இருக்கிறது. அதுவே தான் எல்லாமே! கண்ணுக்கோ மனசுக்கோ ஒண்ணு போலவே இருந்தாலும் உண்மையாகவே வேறே வேறேயாக அல்லவோ இருக்கிறது. ஒண்ணு போல் இன்னொண்ணு இல்லை. வித்தியாசத்திலும் வித்தியாசமா? ஒன்று நிச்சயம். வெவ்வேறெயாக தோன்றினாலும் அந்த வேறு வேறு வஸ்துகள்  எல்லாவற்றுக்குள்ளும் உள்ளே ஒரே ஒரு வஸ்து தான் இருக்கிறது என்பது தான் ஆச்சர்யம். ஆஹா அந்த பகவான் என்பவனின் சிருஷ்டியின் மஹிமையை என்ன வென்று சொல்வது.

எல்லாமே தானாகி, தானே யாவுமாகி, மூன்று உலகமாக பிரிந்து காட்சியளித்தாலும் எல்லாம் அவனே என்று அறியும்போது இதைத் தான் அந்த ப்ரம்மம் என்கிறார்களோ! அறிந்தவன் ஒன்றாகவும் அறியாதவன் வேறாகவும் அல்லவோ இதை காண்கிறான்.

பக்தியை எத்தனையோ வழிகளில் காணலாம். கேட்டல் (ஸ்ரவணம் ) , பாடுதல் (சங்கீர்த்தனம்) ஜபித்தல் (விஷ்ணு நாம ஸ்மரணம்) பணிதல் ( பாத சேவனம்) அர்ச்சித்தல் (அர்ச்சனை), வணங்குதல் (வந்தனம்) சேவைசெய்தல் (தாஸ்யம்) , நேசித்தல் (சக்யம்) அர்பணித்தல் (ஆத்ம நிவேதனம்).  இது அத்தனையிலும்
 சிறந்தது கேட்டலும் பஜித்தலும் தான்.


5. കണ്ടാലൊട്ടറിയുന്നു ചിലരിതു
കണ്ടാലും തിരിയാ ചിലർക്കേതുമേ
കണ്ടതൊന്നുമേ സത്യമല്ലെന്നതു
മുൻപേ കണ്ടിട്ടറിയുന്നിതു ചിലർ

Kandal ottariyunnathu chilar,
Athu kandalum thiriya chilarkethume,
Kandathu onnume satyamallennathu,
Mumbe kandariyunnathu chilar.

ஒரு கிரவுஞ்ச பறவையின் சோகத்தில் ராமாயணம் பிறப்பித்தான் வால்மீகி. சிவனை தூஷித்து, சமண மதம் தழுவி, சூலை நோய்வாய்ப்பட்டு அக்கா கொடுத்த திருவதிகை விபூதியில் மருணீக்கியார்  என்ற சமணர்  நாவுக்கரசர்  என்றும்  அப்பர் என்றும்  பெருமையுடன் அழைக்கப்பட்டவர்.    இதனால்  கோபமுற்றசமண அரசன்  அவரை கல்லோடு கட்டி கடலில் போட்டபோதும் கூட,   ''கற்றூணை பூட்டி கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே'' என்று சிவன் மேல் இனிய தேவாரம் வழங்கினார் . சிவனை கண் முன் கொண்டு நிறுத்தினார். 

பசியின் கொடுமை அறிந்து வடலூரில் சத்ய ஞான சபையில் இரவும் பகலும் பசிநோய் மருத்துவனானார் ராமலிங்க அடிகள் எனும் வள்ளலார்.

பூந்தானம் ஒருவயது பிள்ளையை இழந்த அக்கணமே குருவாயூரப்பன் அருளால் இந்த ஞானப்பான தருகிறார்.வாழ்க்கை அநித்தியம் பற்றிய  இன்னொரு மலையாள மொழியில் கீதையாக, கிருஷ்ணன் அருள் பாடும் இன்னொரு பாகவதமாக விருந்தளிக்கிறார்.   உலகின், ஐம்புலன்களின், ஈர்ப்புகளில் சிக்கிக் கொள்ளாமல் தனித்து நின்று வாழும் ஒவ்வொரு கணமும் கண்ணன் அருளாலே என அவன் நினைவில் வாழும் பக்தர்கள் வந்ததை எந்த உணர்வோ  உந்துதலோ இன்றி எதிர்கொள்பவர்கள்.

6. മനുജാതിയിൽ തന്നേ പലവിധം
മനസ്സിന്നു വിശേഷമുണ്ടോർക്കണം
പലർക്കുമറിയേണമെന്നിട്ടല്ലോ
പലജാതി പറയുന്നു ശാസ്ത്രങ്ങൾ

Manu jaathiyil thanne palavidham
Manassinnu visheshamundorkanam
Palarkkum ariyenam ennittallo
Pala jaathi parayunnu saasthrangal

There are many types of people among us We should always remember that There are many people who wish to know this truth (transient nature of life, 5 the mystery of god, etc.) And many Shastras talks about all these in many different ways. Though all human beings are rational, there is difference among themselves with an aim that lot many a people should realize, Our religious science has made many paths to follow. It is with view to make the various types of people understand that our religion tells us about varying paths.

மனிதர்களில் தான் எத்தனை வகை. ''சே!, இது மாறும் உலகம். நிலையில்லாதது. நமது வாழ்க்கை ஒரு திசை தெரியாமல் மிதக்கும் ஓடம் என்று அறிவோர் சிலர். 
தெரிந்தும் இதை தெரியாததாக மறந்து, வாழ்வு சசாஸ்வதம் என்று மனப்பால் குடித்து, அல்ப சுகத்தில் மகிழ்வோர் சிலர். 
இன்னும் சிலர் தான் முக்கியமானவர்கள். ''ஆஹா! இது மாயை அல்லவோ?. நிஜமாக தோன்றுவது நிச்சயத்தில் நிஜமே அல்ல. ஒரு மாய பிம்பம், மாயத் தோற்றம். இந்த வாழ்க்கையை பற்றிய கவலை தேவையில்லாத தொன்று'' என நினைப்பவர்கள். இவர்களை தான் உத்தமன், மத்யமன், அதமன் என்று அவனது குணத்தை வைத்து பிரித்து அறிகிறோம். 
எனவே எத்தனை எத்தனை விதமான மனிதர்கள். பறவைகள் பட்டாம்பூச்சிகள் மாதிரி. பலவிதமானவர்களுக்கு பலவிதமான மனது. எண்ணங்கள். ஒன்று போல் மற்றொன்றில்லை. ஓஹோ அதற்குத்தான் ஒரே ஊருக்கு பல வழிகள் போல் நமது சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் எல்லாம் மாறி மாறி இருக்கிறதோ?
அவரவருக்கு எது பிடிக்கிறதோ, எது ஈர்க்கிறதோ அதன் வழி செல்லுங்கள் என்று அந்த கிருஷ்ணன் செய்த ஏற்பாடா  இது?

7. കർമ്മത്തിലധികാരി ജനങ്ങൾക്കു
കർമ്മ ശാസ്ത്രങ്ങളുണ്ടു പലവിധം
കർമ്മശാസ്ത്രങ്ങൾ യോഗങ്ങളെന്നിവ
സംഖ്യയില്ലതു നിൽക്കട്ടെ സർവ്വവും

Karmathiladhikaari janangalkku
Karma saasthrangalundu palavidham
karma saasthrangal yogangal enniva
Sankhyayillathu nilkkatte sarvavum]

ஆயிரம் வாசல் கொண்ட வீடு. யாரோ வருவார் யாரோ போவார் வருவதும் போவதும் தெரியாது. அவரவர் கர்மத்துக்கு தக்கவாறு வாழ்க்கை நடத்துகிறார்கள்.  எண்ணற்ற சாஸ்திரங்கள் நம்பிக்கைகள் இருக்கிறது.  சிலருக்கு அதை பின்பற்றுவதே கடினமாக தோன்றும். சிலருக்கு எளிதாகும். எனவே தான் அவரவர் விருப்பத்துக்கு தக்கவாறு யோக சாஸ்திரங்கள், ஸாங்க்ய கோட்பாடுகள், பிரமாணங்கள்.

இதெல்லாம் தேவையே இல்லை என்றும்  சில முக்தர்கள்.

8. ചുഴന്നീടുന്ന സംസാരചക്രത്തി
ലുഴന്നീടും നമുക്കറിഞ്ഞീടുവാൻ
അറിവുള്ള മഹത്തുക്കളുണ്ടൊരു
പരമാർത്ഥമരുൾചെയ്തിരിക്കുന്നു
ഏളുതായിട്ടു മുക്തി ലഭിക്കുവാൻ
ചെവി തന്നിതു കേൾപ്പിനെല്ലാവരും

നമ്മെയൊക്കെയും ബന്ധിച്ച സാധനം
കർമ്മമെന്നറിയേണ്ടതു മുമ്പിനാൽ

Chuzhaneedunna samsara chakrathil,
Uzhaneedum namakku aringheeduvan,
Arivulla mahathukal undoru,
Paramarthangal chey thirikkunnu,
Eluthayittu mukthi labhippanai,
Chevi thannethu kelpin ellavarum.

Nammeyokkeyum bandhicha saadahanam
Karmam ennariyendathu mumbinaal

நாம் ஒவ்வொருவரும் அவரவர் செய்த கர்மபலனை அனுபவிக்கவே பிறந்துள்ளோம். இங்கே தான் ஒவ்வொருவரின்  வாழ்க்கையின் வித்த்யாஸம் உருவாகிறது. பிறப்பு இறப்பு என்பது ஓயாத அலை. புனரபி ஜனனம் புனரபி மரணம். பிறப்பு உடனே இறப்பு, அடுத்து உடனே பிறப்பு...... என்று செய்வினையின் பலனை அனுபவிக்க பிறக்கும்போது அதன் துன்பத்தை குறைத்துக் கொள்ள தான் சத் சங்கம், சத் காரியங்களில் ஈடுபடுவது. 

எத்தனை மஹான்கள், ரிஷிகள், முனீஸ்வரர்கள்  நமக்கு படித்து படித்து கிளிப்பிள்ளை மாதிரி போதனை செய்துள்ளபோதும், நாம்  காதையும் கண்ணையும் மூடிக்கொண்டால் நஷ்டம் யாருக்கு,  அவர்களுக்கா நமக்கா? 'அநித்தியம் அசுகம் லோகம்''  என்று சும்மாவா சொல்லப்பட்டிருக்கிறது? வாழ்வே மாயம் அர்த்தமற்ற பாடலா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...