Saturday, December 30, 2017

GNANAPPANA





சோகம் தந்த ராகம். ஞானப்பான J.K SIVAN

Karmangalkku vibhuvayitolloru ,
Janama desamee bhoomi yennarinjalum,
Karma nasam varuthenam engilum,
Chemme mattengum sadhiya nirnayam.19

ஐயாமார்களே , அம்மாமார்களே, நமது பாரத தேசத்துக்கு கர்ம பூமி என்று பெயர். இங்கே பிறந்து தான் கர்மங்களை தொலைக்க வழி தேடிக்கொள்ளவேண்டும். எண்ணற்ற வழிகள் இருக்கிறது அதற்கு. நாம் தான் உபயோகிக்கவில்லை. இதை விட்டு வேறு எங்கோ காசுக்கும் பேருக்கும், வசதிக்கும் அலைகிறவர்கள் முக்கியமாக ஒன்றை மறந்து விடுகிறார்கள். ''நகர வசதி'' தேடுபவர்களுக்கு ''நரக வசதி'' எப்படி என்று தெரியும்போது தான் கிருஷ்ணனை தேடுவார்கள். அப்போதும் அவன் உதவுவான். நிச்சயம்.

Bakthanmarkkum mumukshu janaNgalkkum,
Saktharaya vishayee janangalkkum,
Ichicheedunnathokke kodutheedum,
Viswa mathavu bhoomi siva! Siva! 20

முக்தி தேடும் பக்தர்களே, ஆன்மாவோடு ஒன்றரக்கலந்து ஜீவன்முக்தர்களாக முயலும் முமுக்ஷுக்களே, இதையெல்லாம் விட்டு மற்றதெல்லாம் தேடும் மாந்தர்களே, ஒரு முக்கிய விஷயம் இது. நன்றாக மண்டையில் ஏற்றிக்கொள்ளுங்கள். இந்த தேசத்தை என்னவென்று அழைக்கிறோம். தாய் நாடு. அம்மா டா இது. கருணை மிக்கது. ஹர ஹரா சிவ சிவா எவ்வளவு அற்புதமான மண் இந்த கர்மபூமி. காமதேனு இது. கேட்டதெல்லாம் வாரி வழங்குகிறதே.

Viswanathante moola prakrithi than,
Prathyakshena vilangunnu bhoomiyayi, 21

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், லோகரக்ஷகனான பரமாத்மாவின் அத்தனை கல்யாணா குணங்களையும் உருவமாக கொண்டது தான் இந்த கர்ம பூமியோ? பரமாத்மாவே தான் இந்த பரந்த பூமியோ?

Avani thala paalanithinallo ,
Avatharangalim palathorkkumbol,
Athu kondu viseshichum Bhoolokam,
Pathinallilum uthamam ennallo,
Veda vadhikalaya munikalum,
Vedavum bahumamichhu chollunnu. 22

நான் யோசித்து பார்த்ததில் புரிந்தது என்ன வென்றால், இந்த பரந்த புண்ய பூமியை பரிபாலிக்க யாரால் முடியும்? அதற்காக தான் பல அவதாரங்களை அந்த மகா விஷ்ணு நாராயணன், என் கிருஷ்ணன் எடுத்தானோ. அதனால், அந்த ஒரே காரணத்தால் தான், இந்த உலகம், பூலோகம், மொத்தம் பதினாலு லோகங்களிலும் மிக சிறந்த, பிரதானமானது. இதை நானா சொல்கிறேன். இல்லை. வேதமுணர்ந்த ஞானிகள், மஹான்கள், ரிஷிகள், வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஸ்தோத்ரங்களில் பாடுகிறார்கள்.

Lavanambhdhi madhye vilangunna,
Jambhu dweeporu yojana lakshavum,
Saptha dweepukal adhil undethrayum,
Uttamamennu vazhthunnu pinneyum.23

பூந்தானத்துக்கு கடல் தான் பூமியை விட அதிகம் என்று நன்றாக தெரியும். எங்கும் ஜலமயம். உப்பு நீர். ஒரு வாய் கூட குடிக்க பிரயோசனம் இல்லை. இதில் தான் இருக்கிறது இந்த ஜம்பு த்வீபம் (தீவு). பத்து லக்ஷம் மைல் நீளமாம். அதற்குள் ஏழு குட்டி தீவுகளாம். வேதங்கள் புராணங்கள் சொல்வதிலிருந்து இதை ஏதோ ஒருவாறு புரிந்து கொண்டேன்.

Bhoo padmathinnu karnigayayittu,
Bhoo darendran adil allo nilkunnu,
Idhil ombadhu gandangal undallo,
Adil uttamam bharatha bhoo thalam. 24



இந்த பூமித் தாமரை மேலே, நடுவிலே, ஒரு உயர மலை தெரிகிறதா? அது தான் மஹா மேரு. இதை தவிர ஒன்பது முக்கிய பாகங்கள் இதற்கு இருக்கிறது. அதில் எல்லாவற்றிலும் அதி உன்னதமானது இந்த பாரத வர்ஷம். நமது பாரத தேசம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...