Thursday, December 21, 2017

AVVAIYAR




திருடாதே, பாப்பா பொய் சொல்லாதே
J.K. SIVAN
''நீ கொஞ்சமும் தயக்கப்படாதே. எவ்வளவு பெரிய தப்பு, குத்தம் பண்ணினாலும் உன்னை காப்பாத்த ஒரு அருமையான வக்கீல் சோமு தான். அவன் கிட்டே போ. கொஞ்சம் பீஸ் ஜாஸ்தி. மணிக்கு இருபதாயிரம் என்று கேட்பான். நீ சம்பாதிச்ச கோடிகளை காப்பாற்றிக்கொள்ள சில லக்ஷங்கள் போனால் என்ன?'' வக்கீல் அறிவானந்தன் சொன்னதும் மோசடி முத்துவுக்கு தைர்யம் வந்தது. அவன் கண் பார்த்த காசுகளை கபளீகரம் பண்ணும் கேடி. பட்டப்பகலில் எல்லோருக்கும் தெரிந்தே திருடும் கோல்மால் பேர்வழி. தான தர்மம் பண்ணுபவன் என்று காசு கொடுத்து எல்லோரையும் சொல்லவைத்து சில போட்டோக்கள் போட்டு பத்திரிகையில் அடிக்கடி சத்தியத்தை தவிர வேறு எதுவுமே என்ன பேச தெரியாது என்பவன்.

கோர்ட்டில் கீதை புஸ்தகத்தை கையில் கொடுத்ததும் கூசாமல் பொய் சொல்வான்.
அவன் எப்படியெல்லாம் பொய் சாட்சியங்கள் கொண்டுவரவேண்டும், எப்படி தஸ்தாவேஜுகளை காசுகொடுத்து மாற்றவேண்டும் என்று பாடம் பாடமாக சோமு சொல்லிக்கொடுப்பான் . நாட்டில் எத்தனையோ முத்துக்கள் சோமுக்கள்.

கோர்ட் என்பது ஒரு நீதி தர்ம ஸ்தலம். நியாயஸ்தலம். அங்கு பொய் அதர்மம் அநியாயம் என்பதெல்லாம் வாசல்படியே மிதிக்கக்கூடாது என்று ஆத்மநாதன் மாதிரி நிறையபேர் சொல்வார்.அவர்கள் தான் போய்விட்டார்களே.

எதற்கு இதெல்லாம் நினைவுக்கு வந்தது ? அதுவும் நேற்று? பேப்பரில் ஏதாவது படித்தேனோ?

ஒளவையாரின் 'நல்வழி"யில் ஒரு பாடல் ஏன் அப்போது நினைவுக்கு வந்தது.

அந்த காலத்தில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைகள் மிக கடுமையாக இருந்தன போலும். அரசன்மாறுகால் மாறு கை வெட்டினான். மதுரை வீரன் படத்தில் வருமே அதுபோல். தூக்கில் தொங்கவிட்டார்கள். கழுமரத்தில் ஏற்றி கொன்றார்கள்.

யாருமே தப்புகள் சொல்லக்கூடாது என்று பள்ளியில் ஆசிரியர்கள் போதித்தார்கள். இப்போது சில ஆசிரியர்கள் சிறிய குழந்தைகளையே பாலின கொடுமைகள் செய்பவர்களாக இருக்கிறார்களே. என்ன சொல்ல?

நல்வழி காட்டி புத்தி சொல்லும்பெரியவர்கள் வீட்டிலும் இல்லை வெளியிலும் இல்லை.

இது தான் அந்த ஒளவையார் பாடல் எளிதில் புரிவதால் அர்த்தம் எதற்கு சொல்லவேண்டும்?

"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை."

கோர்ட்டிலோ, பொது இடங்களிலோ, நியாயம் சொல்லும் பஞ்சாயத்திலோ வீட்டிலோ பிறருக்கு ஏன் நாட்டுக்கே கூட துன்பம் விழையும்படி பொய் வழக்கு, பொய் சமாச்சாரங்கள், ஏமாற்று வித்தைகள் காட்டினால், பொய் சாட்சி பூதலிங்கங்களாக இருந்தால், என்ன ஆகும் தெரியுமா?

"வீட்டில் பேய் பிசாசு வந்து சேரும், அவலட்சணமான, துரதிஷ்டமான வெள்எருக்கம்பூ, சப்பாத்தி கள்ளி படர்ந்து வளரும், துர் தேவதையாக அறியப்படும் மூதேவி வந்து வாழ்வாள், பாம்புகள் வந்து குடி புகுந்து விடும்"



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...