Wednesday, December 27, 2017

THIRUPPAVAI 13



சுடச்சுட  அக்காரவடிசல்                      

                          மார்கழி 13வது நாள்  


நாள் கிழமை எல்லாம் மனதிலே இருந்த காலம். நாள் காட்டி, டயரி, என்பதெல்லாம்  தோன்று முன் வாழ்ந்தவர்கள்.

மார்கழி பதின்மூன்றாம் நாள்  இன்றைக்கு, இதுவரை சந்தோஷமாக கழிந்ததற்கு காரணம் ஒவ்வொருநாளும் இந்த சிறுமி அசாத்தியமாக  ஏதாவது ஒரு பாசுரம் படைப்பதால் தான்.  இந்த நினைவுடன்  விஷ்ணு சித்தார் மெதுவாக எழுந்து கோதை அருகே வந்தார்.  அவள் தீபத்தை ஏற்றி அதன் அருகே கண்களை மூடியவாறு  அமர்ந்திருந்தாள். அவள் கையில் அவள் புதிதாக அன்று இயற்றிய திருப்பாவை பாசுரத்தை தாங்கிய  ஓலைச் சுருள்.

''இன்னிக்கி என்னம்மா கொழந்தே,  பாடப்போறே. அதி காலையில் அவர் குரல் அங்கே நிலவிய  அமைதியை விலக்கியது . 

கோதையின் அருகில் வந்து  அமர்ந்து கொண்டு விட்டார் விஷ்ணுசித்தர்.  அவர் கை அந்த புண்யவதி கோதையின் சிரத்தை பாசத்துடன் தடவிக்கொடுத்தது.

''இதோ பாருங்கள் அப்பா இது தான் அந்த பாசுரம்.  வெளிச்சம் போதாது  ஆகவே  உங்களால் படிக்க முடியாது. அதுவும் இல்லாமல் இந்த  ஓலையில் அதை நெருக்கி நெருக்கமாக எழுதியிருக்கிறேன். நானே படிக்கிறேன். அப்பறமா அதை பாடுகிறேன். கேளுங்கள் ''.   தான் எழுதிய பாசுரத்தை வார்த்தை  வார்த்தையாக கோதை வாசித்தாள்.

 '' புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
          கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
          வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
          குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
          கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.''

இது   விஷ்ணு சித்தரின் மனதில் அந்த ஆயர்பாடியை கொண்டுவந்து நிறுத்தியது.  அங்கே  அந்த பாசுரத்தின் நிகழ்வுகள் நடப்பதை  தெளிவாக மனத்திரையில் பளிச்சென  காட்டியது .

++

“இன்று  என்ன கிழமை ஆண்டாள்? வெள்ளிக்கிழமைதானே?''

''தாமோதர கிழமை''

''அப்படி ஒரு கிழமை இருக்கா என்ன?''

“எல்லா  நாளும் கிருஷ்ணன் நாள் தானே எனக்கு'' என்று சொல்லி மேலே பார்த்தாள் ஆண்டாள்.

''அங்கே  மேலே என்ன  பார்க்கிறே?''

''அதோ மேலே பார். வெள்ளி முளைத்து விட்டது. அப்படியென்றால் வியாழன் முடிந்து விட்டது, மார்கழி13வது நாள் என்று எடுத்து கொள்ளேன்? 
சரி சரி, வாருங்கள். இன்று வராதவள் யார்? அவள் வீட்டுக்கு போய் எழுப்பி  கூப்பிட்டு கூட்டி செல்வோம். நல்லவேளை, இந்த பெண்ணின் வீடு  நாம்  வழிபடும்  யமுனை  நதிக்கரை அருகிலேயே இருக்கிறதே. வெள்ளியை பற்றி சொன்னபோதே அந்த வெள்ளை நிற  கொக்கு போல் வந்த  பகாசூரன் கிருஷ்ணனை மோதி  வாய் கிழிந்து  வசமாக மாட்டிகொண்டு வதமானதையே  பாடுவோம். 

தூங்கு மூஞ்சி பெண்ணே, சீக்கிரம் வெளியே வா,  அற்புதமாக  பறவைகளின்  கானம்  மரங்களில் கேட்க,  குளிர் நீரில்  சுகமாக  முகம் கை கால் உடம்பு  பூரா சில்லென்று  புத்துணர்ச்சி அளிக்க  எங்களுடன் சேர்ந்து வந்து  நீராடு, நமது பாவை நோன்பு இன்று  நன்றாக நடக்கட்டும்''.

ஒரு சிறுமி மற்றோருவளிடம் சொல்கிறாள்:

“ஆனாலும் இந்த ஆண்டாள் ஒரு ராணி தான்டீ.  என்னமா  நம் எல்லோரையும் கவர்ந்து நோன்பை நடத்த  செய்கிறாள்.  

காட்சி எளிதாக ஓடினாலும் பெரியாழ்வார் அந்த சிறிய எளிய பாசுரத்தின் உட்பொருளில் மூழ்கினார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...