Tuesday, November 14, 2017

ராஜா பர்த்ருஹரியின் நீதி சதகM




ராஜா பர்த்ருஹரியின் நீதி சதகம்: - J.K. SIVAN
சுபாஷிதம் - 6

विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं
विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता

विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥

vidyā nāma narasya rūpam adhikaṃ pracchannaguptaṃ dhanaṃ
vidyā bhogakarī yaśaḥsukhakarī vidyā gurūṇāṃ guruḥ |
vidyā bandhujano videśagamane vidyā parā devatā
vidyā rājasu pūjyate na tu dhanaṃ vidyāvihīnaḥ paśuḥ || 1.20 ||

வித்யா னாம னரஸ்ய ரூபம் அதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்
வித்யா போககரீ யஶஃஸுககரீ வித்யா குரூணாம் குருஃ |
வித்யா பன்துஜனோ விதேஶகமனே வித்யா பரா தேவதா
வித்யா ராஜஸு பூஜ்யதே ன து தனம் வித்யாவிஹீனஃ பஶுஃ || 1.20 ||

ஹே , மஹா ஜனங்களே, உங்கள் எல்லோருக்கும் தெரிந்து நீங்கள் எல்லோருமே மறந்துபோன விஷயம் தான் மீண்டும் சொல்கிறேன். அறிவுச்செல்வம் ஒன்று தான் மிகச்சிறந்த செல்வம். அது போன்ற விலை உயர்ந்த நகை, திருடனால் அறுத்துக்கொண்டு ஓடமுடியாதது, ரெய்டு செய்து பிடித்துக்கொண்டு போகமுடியாத செல்வம் வேறு எதுவுமே இல்லை. ஆனாலும் நாம் மிக ஜாக்கிரதையாக போற்றி மேலும் பெறுக வைக்க வேண்டும். அதற்கு அளவே கிடையாது. எந்த பாங்கிலும் அதை வைக்க முடியாது. அது ஒன்று தான் சோறு போடும், பெருமை தரும், பெரியோர்கள், ஞானிகளின் ஆசியை பெற்றுத்தரும். வெகு தூரம் தெரியாத அறியாத ஊர்களில் கூட அவனுக்கு உறுதோழனாக உதவுவது அது ஒன்றுதான். உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதுஎன்று ராஜாக்கள் கூட பார்க்கமாட்டார்கள். இருந்தாலும் லக்ஷியம் பண்ணமாட்டார்கள். ஆனால் உன் அறிவுச் செல்வம் அவர்களை உன்னை வணங்கச் செய்யும். அறிவு ஞானம் இல்லாத மனிதன் மற்ற நாலுகால் பிராணிகளோடு சேர்ந்த ரெண்டு கால் பிராணி.


क्षान्तिश्चेत्कवचेन किं किम् अरिभिः क्रोधो‌உस्ति चेद्देहिनां
ज्ञातिश्चेदनलेन किं यदि सुहृद्दिव्यौषधं किं फलम् ।
किं सर्पैर्यदि दुर्जनाः किम् उ धनैर्विद्या‌உनवद्या यदि
व्रीडा चेत्किम् उ भूषणैः सुकविता यद्यस्ति राज्येन किम् ॥ 1.21 ॥

kṣāntiścetkavacena kiṃ kim aribhiḥ krodho‌உsti ceddehināṃ
ṅñātiścedanalena kiṃ yadi suhṛddivyauṣadhaṃ kiṃ phalam |
kiṃ sarpairyadi durjanāḥ kim u dhanairvidyā‌உnavadyā yadi
vrīḍā cetkim u bhūṣaṇaiḥ sukavitā yadyasti rājyena kim || 1.21 ||

க்ஷான்திஶ்சேத்கவசேன கிம் கிம் அரிபிஃ க்ரோதோ‌உஸ்தி சேத்தேஹினாம்
ஜ்ஞாதிஶ்சேதனலேன கிம் யதி ஸுஹ்றுத்திவ்யௌஷதம் கிம் பலம் |
கிம் ஸர்பைர்யதி துர்ஜனாஃ கிம் உ தனைர்வித்யா‌உனவத்யா யதி
வ்ரீடா சேத்கிம் உ பூஷணைஃ ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்யேன கிம் || 1.21 ||

பொறுமையை பூஷணம் என்பார்கள். அது மட்டும் ஒருவனிடம் இருந்தால் அவனுக்கு ஆனால் அதுவே ஒருவனுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வளையம். தற்காப்புக்கு எந்த ஆயுதமும் வேண்டாமே. அவன் மனதில் கோபம் இருந்தால் அதை விட வேறு எந்த எதிரியையும் கண்டு அவன் பயப்பட வேண்டாம். அவனிடம் அறிவு பெருகி இருக்குமானால் தீய எண்ணங்களை, அதுவே தீயாக பொசுக்கிவிடும். இப்படிப்பட்ட அறிவுள்ளவன் ஒருவன் நண்பனாக இருப்பானேயானால் அவனைவிட சிறந்த ஒளஷதம், மருந்து வாழ்க்கையில் தேவைப்படாது. இத்தகைய அற்புதமான அறிவுள்ளவன் அருகே சில தீயவர்கள் இருந்தால் அவர்களை விட கொடிய விஷ பாம்புகளைக்கண்டு அவன் பயம் கொள்வானா? அவனிடம் அறிவு பெருகி இருந்தால் அதைவிட சிறந்த செல்வம் எது? அவன் அமைதியாக அடக்கத்தோடு இருப்பதால் எந்த ஆபரணம், நகை அவனுக்கு எ அழகூட்ட தேவை? சொல்லுங்கள். அவன் கவிதையில் கவனம் செலுத்தி அவன் அறிவு அதில் பிரதிபலிக்கும்போது வேறு எந்த சக்தி அவசியம் என்றும் சொல்லுங்கள்?

दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने
प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजने धृष्टता
ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥ 1.22 ॥

dākṣiṇyaṃ svajane dayā parijane śāṭhyaṃ sadā durjane
prītiḥ sādhujane nayo nṛpajane vidvajjane cārjavam |
śauryaṃ śatrujane kṣamā gurujane kāntājane dhṛṣṭatā
ye caivaṃ puruṣāḥ kalāsu kuśalāsteṣveva lokasthitiḥ || 1.22 ||

தாக்ஷிண்யம் ஸ்வஜனே தயா பரிஜனே ஶாட்யம் ஸதா துர்ஜனே
ப்ரீதிஃ ஸாதுஜனே னயோ ன்றுபஜனே வித்வஜ்ஜனே சார்ஜவம் |
ஶௌர்யம் ஶத்ருஜனே க்ஷமா குருஜனே கான்தாஜனே த்றுஷ்டதா
யே சைவம் புருஷாஃ கலாஸு குஶலாஸ்தேஷ்வேவ லோகஸ்திதிஃ || 1.22 ||

உறவுகளோடு சுமுகமான நட்பு தேவை. அது நன்மை பயக்கும். நமது நிலையை விட தாழ்ந்தவர்களுக்கு தாராளமாக உதவலாம். தீயவர்களை அறவே வெறுக்கவேண்டும். நல்லவர்களை தேடி நாட வேண்டும். அரசனிடம் மரியாதை பக்தி அவசியம். அறிஞர்களை அன்போடு உபசரித்தல், மரியாதை செய்தல் வேண்டும். எதிரிகளிடம் மன உறுதியோடு இருக்கவேண்டும். கற்றோரை வணங்கவேண்டும். பெண்களோடு ஜாக்கிரதையாக சாமர்த்தியத்தோடு இருக்கவேண்டும். அவர்களோடு பழகும்போது கெட்டிக்காரனாக இரு. மூளையை உபயோகி. (இது பர்த்ருஹரி சொல்வது என்பது ஞாபகம் இருக்கட்டும்) . இப்படியெல்லாம் கடைபிடிப்பவன் உலகில் வளமோடு வாழ்வான்.


जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

jāḍyaṃ dhiyo harati siñcati vāci satyaṃ
mānonnatiṃ diśati pāpam apākaroti |
cetaḥ prasādayati dikṣu tanoti kīrtiṃ
satsaṅgatiḥ kathaya kiṃ na karoti puṃsām || 1.23 ||

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்
மானோன்னதிம் திஶதி பாபம் அபாகரோதி |
சேதஃ ப்ரஸாதயதி திக்ஷு தனோதி கீர்திம்
ஸத்ஸங்கதிஃ கதய கிம் ன கரோதி பும்ஸாம் || 1.23 ||

அறிஞர்களோடு கலந்து உரையாடுவது மனதின் சோர்வை போக்கும். அறியாமையை சுட்டெரித்து ஞானம் ஒளி வீசும். புத்தி கூர்மையாகி அவன் வாக்கில் சத்தியம் த்வனிக்கும். அறிவும் ஞானமும் என்ன தான் தராது ஒருவனுக்கு?

जयन्ति ते सुकृतिनो
रससिद्धाः कवीश्वराः ।
नास्ति येषां यशःकाये
जरामरणजं भयम् ॥ 1.24 ॥

jayanti te sukṛtino
rasasiddhāḥ kavīśvarāḥ |
nāsti yeṣāṃ yaśaḥkāye
jarāmaraṇajaṃ bhayam || 1.24 ||

ஜயன்தி தே ஸுக்றுதினோ
ரஸஸித்தாஃ கவீஶ்வராஃ |
னாஸ்தி யேஷாம் யஶஃகாயே
ஜராமரணஜம் பயம் || 1.24 ||

கற்றறிந்த அறிவோர் கவிஞர்களாக இருப்பின் அவர்கள் புகழ் மேலும் பரவும். அது மங்காத என்றும் நிலைக்கும் புகழ்.

सूनुः सच्चरितः सती प्रियतमा स्वामी प्रसादोन्मुखः
स्निग्धं मित्रम् अवञ्चकः परिजनो निःक्लेशलेशं मनः ।
आकारो रुचिरः स्थिरश्च विभवो विद्यावदातं मुखं
तुष्टे विष्टपकष्टहारिणि हरौ सम्प्राप्यते देहिना ॥ 1.25 ॥

sūnuḥ saccaritaḥ satī priyatamā svāmī prasādonmukhaḥ
snigdhaṃ mitram avañcakaḥ parijano niḥkleśaleśaṃ manaḥ |
ākāro ruciraḥ sthiraśca vibhavo vidyāvadātaṃ mukhaṃ
tuṣṭe viṣṭapakaṣṭahāriṇi harau samprāpyate dehinā || 1.25 ||

ஸூனுஃ ஸச்சரிதஃ ஸதீ ப்ரியதமா ஸ்வாமீ ப்ரஸாதோன்முகஃ
ஸ்னிக்தம் மித்ரம் அவஞ்சகஃ பரிஜனோ னிஃக்லேஶலேஶம் மனஃ |
ஆகாரோ ருசிரஃ ஸ்திரஶ்ச விபவோ வித்யாவதாதம் முகம்
துஷ்டே விஷ்டபகஷ்டஹாரிணி ஹரௌ ஸம்ப்ராப்யதே தேஹினா || 1.25 ||

ஒரு ஒழுக்கமான பண்புள்ள பிள்ளை, அன்பும் ஆதரவும் தரும் மனைவி, அளவில்லாமல் கற்பிக்கும் குரு, அன்பே உருவான உண்மை நண்பன், சுயநலம் இல்லாத உறவினன். கவலையில்லாத மனம். நல்ல கம்பீரமான உருவம், போதிய செல்வம், வாக் சாதுர்யம், இதெல்லாம் அந்த ஹரி எனும் நம்மை காப்பவன் யாருக்கு இதெல்லாம் தேவை என்று உணர்ந்து அன்போடு பரோபகாரமாக அருள்பவை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...