சூர் ஸாகரம் . J.K SIVAN
'' நடையா... ஒரு நாடகம் அன்றோ நடக்குது''
எல்லோரும் கவனமாக கேளுங்கள் நான் சொல்வதை.
இன்று ஒரு அதி அற்புதம் நடக்கப்போகிறது. ஆமாம், மெதுவாக நடக்கப்போகிறது.
அற்புதம் வேகமாக நடக்காது. மெதுவாக தான் நடக்கும். தள்ளாடி தள்ளாடி. குடித்தவன் நடப்பது போல் அடி தடுமாறும்.
அவன் குடித்தவன் தான். ''கள்'' நிறைய.
பக்தர்கள் அன்பை நிறைய, நிறைய
நடமாட முடியாத கால் பின்னுகிறது. நடந்து பழக்கமே ஆகவில்லையே.
நடக்க வேண்டியது நடந்து தானே தீரவேண்டும்.
நடப்பவன் தான் நடத்துபவனும், நடிப்பவனும்
உடம்பு ஆட, கால் தரையில் பாவாமல் ஆட,, கைகள் பாலன்ஸ் செயகிறது. அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் குஞ்சு கைகள் நீட்ட
அம்மா யசோதா ஜாக்கிரதையாக அவற்றை பிடித்து கொண்டு நடை பழக்குகிறாள்
நடக்கும் சந்தோஷம் அவன் முகத்தில். எது எப்படி நடக்கிறது என்று அவனைவிட வேறு
யாருக்கு நன்றாக தெரியும்.
அம்மா யசோதா அந்த அழகில் தன்னை இழக்கிறாள்.
''மெதுவா கண்ணா, .. அந்த காலை எடுத்து முன்னாலே வை...... அம்மாவை கெட்டியா பிடிச்சுக்கோ.... ஆமாம்.... அப்படித்தான். இப்போ வலது காலை தூக்கு....... பயப்படாதே. நான் கெட்டியா பிடிச்சுண்டிருக்கேன் உன்னை.... ம்ம்ம்.... அப்படி...... மறுபடியும் இடது காலை த்தூக்கு... முன்னாலே வை...''
கண்ணன் நடக்கிறான். அவனுக்கும் முகத்தில் சந்தோஷம். அதைவிட அவன் நடப்பதில் அம்மாவுக்கு பரம சந்தோஷம்
இதயத்திலிருந்து சந்தோஷம் பூரித்து கண்கள் வழியாக வெளியே பீறிட்டு வழிகிறது. கடைவிழியில் ஆனந்தக் கண்ணீர்.
என் கண்ணன் நன்றாக நடக்கக் கற்றுக்கொண்டான்.
எந்த தெய்வத்திடம் நன்றி சொல்வது??. கடவுளே இங்கே நடக்கின்றதே!
''என் குழந்தை தீர்க்காயுசாக இருக்கணும் பகவானே.''
''அப்படியே''
என்று கண்ணன் மனதில் நினைத்து க்கொ
ண்டிருப்பானோ. அதனால் தான் அவன் தனக்கு தானே 125 வயசு அளித்துக் கொண்டானோ?
''பலராமா ஓடிவாடா. வந்து பார். உன் தம்பி எவ்வளவு ஜோரா நடக்கிறான்''.
பலராமன் தனக்குள் சிரித்துக் கொண்டி
ருப்பான்.
'' இவனா நடப்பவன்?. நடத்துபவன். . நான் ஊர்பவன் நடப்பவன் இல்லை (ஆதி சேஷன்) அதனால் அவன் என் மேல் படுப்பவன்...!!..
நாளொரு அழகும் பொழுதொரு பலமுமாக ராக்ஷஸர்களை எதிர் நோக்கி கண்ணன் வளர்ந்து வந்தான். விளையாடினான்.
சூர் தாஸ் கண்ணன் நடப்பதை அழகாக மனக் கண்ணால் நினைத்து பார்க்கிறார்.
NEXT POEM Hands stretched out hesitantly,
A foot on the ground unstably,
Yasoda, teaching the Lord to walk.
Sometimes watching His adorable face
Storing away the joy in her heart,
Sometimes praising the family deity:
Give long life to her Kanhaiya.
Sometimes calling to Bal
Two to play in her courtyard.
Surdas see the Lords leela
The lustre of bliss of Nandraiya (Yasoda).
No comments:
Post a Comment