Tuesday, November 7, 2017

சுபாஷிதம் - 4



ராஜா பர்த்ருஹரியின் நீதி சதகம்: J.K. SIVAN
சுபாஷிதம் - 4
साहित्यसङ्गीतकलाविहीनः
साक्षात्पशुः पुच्छविषाणहीनः ।
तृणं न खादन्नपि जीवमानस्
तद्भागधेयं परमं पशूनाम् ॥ 1.12 ॥

sāhityasaṅgītakalāvihīnaḥ
sākṣātpaśuḥ pucchaviṣāṇahīnaḥ |
tṛṇaṃ na khādannapi jīvamānas
tadbhāgadheyaṃ paramaṃ paśūnām || 1.12 ||

ஸாஹித்யஸங்கீதகலாவிஹீனஃ
ஸாக்ஷாத்பஶுஃ புச்சவிஷாணஹீனஃ |
த்றுணம் ன காதன்னபி ஜீவமானஸ்
தத்பாகதேயம் பரமம் பஶூனாம் || 1.12 ||

இதை நான் சொல்வதாக நினைக்கவேண்டாம். ராஜா பர்த்ருஹரீ சொல்கிறார்: எவன் ஒருவனுக்கு இலக்கியம், சங்கீதம் அதன் இனிமையோ, சுகமோ, அறியாத, தெரியாத ஓளரங்கசீப் மாதிரி இருக்கிறானோ, அவன் கொம்பும், கொளம்பும், வாலும் வாயும் மட்டுமே கொண்ட மிருகம் என்று கல்பூரம் ஏத்தி அவன் தலையிலே அடித்து சொல்லலாம். அவன் புல் பூண்டு தின்று மேயாத கால்நடை.

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणो न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूता
मनुष्यरूपेण मृगाश्चरन्ति ॥ 1.13 ॥

yeṣāṃ na vidyā na tapo na dānaṃ
ṅñānaṃ na śīlaṃ na guṇo na dharmaḥ |
te martyaloke bhuvi bhārabhūtā
manuṣyarūpeṇa mṛgāścaranti || 1.13 ||

யேஷாம் ன வித்யா ன தபோ ன தானம்
ஜ்ஞானம் ன ஶீலம் ன குணோ ன தர்மஃ |
தே மர்த்யலோகே புவி பாரபூதா
மனுஷ்யரூபேண ம்றுகாஶ்சரன்தி || 1.13 ||

ஐயோ இதை நான் எப்படி சொல்வேன். எவனிடத்தில் கல்வியறிவோ, ஞானமோ, அறிவோ, தவமோ, த்யாகமோ, தாராள மனமோ, நன்னடத்தை, நல்ல குணமோ, எதுவுமே இல்லையோ, அவன் உலகத்தில் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து சமூகத்தில் நடமாடினாலும் நிச்சயம் காட்டில் உலவும் துஷ்ட மிருகங்களில் ஒன்று தான்.

वरं पर्वतदुर्गेषु
भ्रान्तं वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः
सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥

varaṃ parvatadurgeṣu
bhrāntaṃ vanacaraiḥ saha
na mūrkhajanasamparkaḥ
surendrabhavaneṣvapi || 1.14 ||

வரம் பர்வத துர்கேஷு
ப்ராந்தம் வனச்சரை: ஸஹ
ந மூர்க்கஜனஸம்பர்கா
சுரேந்திர பவனேஸ்வபி:

ஒன்று நிச்சயமாக தெரிந்து கொள். காடு மேடு வனாந்தரம், மலைக்குகை, கணவாய் என்று சுற்றி அலைந்து மிருகங்களோடு இருப்பது, ஒரு அழகிய சொகுசு வசதி கொண்ட தேவ மாளிகையில் சர்வ முட்டாள் ஒருவனோடு சேர்ந்து இருப்பதை விட பல மடங்கு சௌகர்யமானது.

शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयागमा
विख्याताः कवयो वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।
तज्जाड्यं वसुधादिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका हि मणयो यैरर्घतः पातिताः ॥ 1.15 ॥

śāstropaskṛtaśabdasundaragiraḥ śiṣyapradeyāgamā
vikhyātāḥ kavayo vasanti viṣaye yasya prabhornirdhanāḥ |
tajjāḍyaṃ vasudhādipasya kavayastvarthaṃ vināpīśvarāḥ
kutsyāḥ syuḥ kuparīkṣakā hi maṇayo yairarghataḥ pātitāḥ || 1.15 ||

ஶாஸ்த்ரோபஸ்க்றுதஶப்தஸுன்தரகிரஃ ஶிஷ்யப்ரதேயாகமா
விக்யாதாஃ கவயோ வஸன்தி விஷயே யஸ்ய ப்ரபோர்னிர்தனாஃ |
தஜ்ஜாட்யம் வஸுதாதிபஸ்ய கவயஸ்த்வர்தம் வினாபீஶ்வராஃ
குத்ஸ்யாஃ ஸ்யுஃ குபரீக்ஷகா ஹி மணயோ யைரர்கதஃ பாதிதாஃ || 1.15 ||

இப்போது நடக்கின்றதை படம் பிடித்தால் போல பர்த்ருஹரீ பல நூற்றாண்டுகளுக்கு முன் பாடி இருக்கிறார். எந்த நாட்டில், வேத சாஸ்திரங்களை கரைத்து குடித்து தமது சிஷ்யர்களுக்கு அமிர்தமாக அறிஞர்கள், கற்றோர், குருமார்களாக போதித்தாலும் , வறுமையில் வாடி தவிக்கிறார்களோ, அந்த நாட்டின் அரசன் முட்டாளாக தப்பும் தவறும், தகறாருமாகி நாட்டை நிர்வகிக்கிறானோ, உண்மையில் அந்த நாடு திருந்துவது அந்த முட்டாள் கையில் இல்லை, மெத்த படித்த கற்ற அறிஞர்களே அதன் நிர்வாகிகள். கையில் கோமேதகம், வைரம் வைடூர்யம், இருந்தாலும் வெறும் கல்லாக அதன் மதிப்பு தெரியாமல் அதை விட்டெறிந்தவனுக்கு இணையானவன் அந்த நாட்டை ஆளும் முட்டாள் .

நமது நாட்டில் யாராவது பர்த்ருஹரீ யை படிக்கமாட்டார்களா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...