Monday, November 6, 2017

ராஜா பர்த்ருஹரியின் நீதி சதகம்


ராஜா பர்த்ருஹரியின்  நீதி சதகம்:    J.K. SIVAN         

                             சுபாஷிதம்  -   3


यदा किञ्चिज्ञोऽहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञोऽस्मीत्यभवदवलिप्तं मम मनः ।
यदा किञ्चित् किञ्चित् बुधजनसकाशादवगतं
तदा मूर्खोऽस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥

Yadaa kimchijjno’ham dwipa iva madaandhah samabhavam
Tadaa sarvajno’smeetyabhavadavaliptam mama manah
Yadaa kimchit kimchit budhajanasakaashaadavagatam,
Tadaa moorkho’smeeti jwara iva mado me vyapagatah 1.8


யதா கிஞ்சிஜ்ஜ்ஞோ‌உஹம் த்விப இவ மதான்தஃ ஸமபவம்
ததா ஸர்வஜ்ஞோ‌உஸ்மீத்யபவதவலிப்தம் மம மனஃ
யதா கிஞ்சித்கிஞ்சித்புதஜனஸகாஶாதவகதம்
ததா மூர்கோ‌உஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யபகதஃ || 1.8 ||

மனித ஸ்வபாவமே வேடிக்கையானது.  அரை குறையாக  கொஞ்சம்  விஷயம் தெரிந்தால் போதும்.  அடேயப்பா. ஆளைக்  கையில் பிடிக்க முடியாது.  உலகத்தையே  கரைத்து குடித்தவன் போல் பேசுவான். வியாசர் வசிஷ்டர் பிச்சை வாங்கவேண்டும் அவனிடம் என்பது போல் இருக்கும் அவன் தோரணை. மதம் பிடித்த யானையாக திரிவான். கற்றோர்கள், ஞானிகளிடம் சேர்ந்து சத் சங்கம் கிடைத்த   போது  தான் நிறைகுடம் தளும்பாது என்பது அவனுக்கு புரியம்.   தான் எவ்வளவு முட்டாளாக நடந்து கொண்டோம் என்பது வெளிப்படும். வெட்கப்படுவான்.


कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

kṛmikulacittaṃ lālāklinnaṃ vigandhijugupsitaṃ
nirupamarasaṃ prītyā khādannarāsthi nirāmiṣam |
surapatim api śvā pārśvasthaṃ vilokya na śaṅkate
na hi gaṇayati kṣudro jantuḥ parigrahaphalgutām || 1.9 ||


க்றுமிகுலசித்தம் லாலாக்லின்னம் விகன்திஜுகுப்ஸிதம்
னிருபமரஸம் ப்ரீத்யா காதன்னராஸ்தி னிராமிஷம் |
ஸுரபதிம் அபி ஶ்வா பார்ஶ்வஸ்தம் விலோக்ய ன ஶங்கதே
ன ஹி கணயதி க்ஷுத்ரோ ஜன்துஃ பரிக்ரஹபல்குதாம் || 1.9 ||

நாயைப்பற்றி நாம் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை. அதற்கு ஒரு  அழுகிய மாமிசத்தோடு  எலும்புத்துண்டு கிடைத்தால் போதும்.எதிரே  ஒரு ராஜா வந்து நின்றால்  கூட  லக்ஷியம் பண்ணாது.  அதை விட  மோசமானவன் அஞ்ஞானமுள்ள மனிதன்.  இந்த உலகவாழ்க்கை சுகத்திற்கு அவன் ஆடி ஓடி தேடி சம்பாதித்த, சேர்த்த பொருள் மீது இருக்கும் ஆசையும் பாசமும்  அவனுக்காக காத்திருக்கும்  நல்வழி, ஞான வழி, ஆத்ம ஞானம் பக்கமே அவனை போகாமல் தடுத்துவிடும்.  


शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं
म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।
अधो‌உधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्
अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥

śiraḥ śārvaṃ svargātpaśupatiśirastaḥ kṣitidharaṃ
mhīdhrāduttuṅgādavanim avaneścāpi jaladhim |
adho‌உdho gaṅgeyaṃ padam upagatā stokam
athavāvivekabhraṣṭānāṃ bhavati vinipātaḥ śatamukhaḥ || 1.10 ||

ஶிரஃ ஶார்வம் ஸ்வர்காத்பஶுபதிஶிரஸ்தஃ க்ஷிதிதரம்
ம்ஹீத்ராதுத்துங்காதவனிம் அவனேஶ்சாபி ஜலதிம் |
அதோ‌உதோ கங்கேயம் பதம் உபகதா ஸ்தோகம்
அதவாவிவேகப்ரஷ்டானாம் பவதி வினிபாதஃ ஶதமுகஃ || 1.10 ||

கங்கை  ஆகாசத்திலிருந்து  பூமிக்கு இறங்குகிறாள் .  அவளது வேகம், சக்தி, அளவை  எப்படி பூமி  நேரடியாக தாங்க முடியும்.  ஒரே ஒரு பரமாத்மா அல்லவோ அவளைத் தனது சிரசில் தாங்கி வேகத்தை குறைத்து ஹிமாச்சலத்தில் இறங்க வழி செய்தவர்.  பிறகு?  அவள் வேகம் தணிந்து பல நதிகளாக பிரிந்து பூமியில் இறங்கி கடைசியில் சமுத்திரத்தில் சங்கமமாகிறாள்.     மேலே  இருந்து கீழே இறங்க இறங்க தான் சக்தி குறையும்.  சரியான நேரத்தில் நேர்மையான  நியாயமான  தகுந்த முடிவு எடுக்காதவன், ஆத்திரக்காரன் கதியும் இப்படி தான். அவனை விட்டு அவன் சக்தி,மதிப்பு, அந்தஸ்து மரியாதை எல்லாமே  கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஒன்றுமில்லாத  செல்லாக்காசாக ஆகி  விடுவான்.

शक्यो वारयितुं जलेन हुतभुक्च्छत्रेण सूर्यातपो
नागेन्द्रो निशिताग्कुशेन समदो दण्डेन गोगर्दभौ ।
व्याधिर्भेषजसङ्ग्रहैश्च विविधैर्मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधम् अस्ति शास्त्रविहितं मूर्खस्य नस्त्यौषधिम् ॥ 1.11 ॥

śakyo vārayituṃ jalena hutabhukcchatreṇa sūryātapo
nāgendro niśitāgkuśena samado daṇḍena gogardabhau |
vyādhirbheṣajasaṅgrahaiśca vividhairmantraprayogairviṣaṃ
sarvasyauṣadham asti śāstravihitaṃ mūrkhasya nastyauṣadhim || 1.11 ||

ஶக்யோ வாரயிதும் ஜலேன ஹுதபுக்ச்சத்ரேண ஸூர்யாதபோ
னாகேன்த்ரோ னிஶிதாக்குஶேன ஸமதோ தண்டேன கோகர்தபௌ |
வ்யாதிர்பேஷஜஸங்க்ரஹைஶ்ச விவிதைர்மன்த்ரப்ரயோகைர்விஷம்
ஸர்வஸ்யௌஷதம் அஸ்தி ஶாஸ்த்ரவிஹிதம் மூர்கஸ்ய னஸ்த்யௌஷதிம் || 1.11 ||

அக்னி ஜ்வாலையோடு  ஆளுயரம்  எரிகிறதா?   நிறைய பக்கட்  பக்கட்டாக  ஜலத்தை கொண்டு வந்து கொட்டினாய். அக்னி அணைந்துவிட்டது.   கொடிய சூரியவெப்பம்  தரையில்  தார் உருகும் அளவுக்கு அனலாக தஹிக்கிறதா.  குடையைப் பிரி.  நட.    உக்கிரமான சூரியனை சின்ன குடை  உன்மேல் வெப்பம் வராமல் தடுத்து விட்டது.  மா மத யானையை  அதன் மேல் அமர்ந்திருக்கும் மாவுத்தனின்  ஒரு முழம்  அங்குசம் அடங்கிவிட்டது. 
பெரிய  மாடு, கழுதையை  வண்டியில் பூட்டி, பொதி சுமக்க வைக்கும்  வண்டிக்காரனின்  மூங்கில் குச்சி சொன்னபடி கேட்க வைக்கிறது. கொடிய நோயை  சிறிய மாத்திரை விரட்டுகிறது. விஷம் தலைக்கேறி விட்டதா. விஷ முறிவு ஒளஷதம், மாத்திரை மந்திர உச்சாடனம்   அதை இறக்கி உடலை விட்டு அகலச் செய்து விடும். ஆகவே  எல்லாவற்றிற்கும் சாஸ்திரத்தில் ஒரு தடுப்பு முறை உண்டு. அடக்க வழி உண்டு. அடாடா  என்ன செய்தால்  ஒரு முட்டாளை  திருத்த முடியும்? யோசி யோசி. யோசித்து யோசித்து வாழ்நாள் தான் முடிந்து விடும். அவன் அப்படியே  நாளொரு வயதும் பொழுதொரு முட்டாள்தனமுமாக வளர்ந்து கொண்டே தான் வருவான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...