தெய்வத்தின் பாதுகாவல் J K SIVAN
இந்தியா பாகிஸ்தான் எல்லை இந்தியாவின் வடமேற்கே, ராஜஸ்தான் ஜெய்சல்மேர் பக்கம் லோங்காவலா என்கிற ஊர் பக்கம் இருக்கிறது.
அந்த எல்லைப்பகுதியில் ஒரு அம்மன் கோவில். தானொத் மாதா என்று அந்த சக்தி தேவிக்கு பெயர். 51 சக்தி பீடங்களில் ஒன்றை சார்ந்தது அந்த ஆலயம். ஜெய்சால்மீர் 120 கி.மீ. தூரம். அங்கு தான் தீவிரமாக இந்தியா பாகிஸ்தான் யுத்தம் 1971ல் நடந்தது. பாலைவன பகுதியில் உள்ள இந்த ஆலயம் தெய்வீக சக்தி வாய்ந்தது என்றும் அதிசயங் கள் நடந்தது . 1965ல் பாகிஸ்தான் தாக்குதல் புது தானோத் மாதா ஆலயம் அருகே 8 இந்தியவீரர்கள் தான் காவல் இருந்தனர். பாக் ராணுவம் 3000 பேருடன் மோதியது. எட்டுபேரும் மாதாவின் ஆலயத்தில் வேண்டி நின்றனர். அவர்களுக்கு அப்போது மாத தோன்றி இங்கேயே இருங்கள் வெளியே போகவேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாளாம். பாக் ராணுவம் 3000 குண்டுகளை வீசியது. ஒரு குண்டும் வெடிக்கவில்லை. ஒரு குண்டு வெடித்தால் கூட அந்த பகுதியே சின்னாபின்னமாகி இருக்கும். அது தான் மாதாவின் சக்தி. இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டிவிட்டார்கள். 1971ல் இந்த பகுதியில் அம்பாள் சக்தியால் ஜெயிக்கமுடியவில்லை என்று பாக் ராணுவம் அருகே இருந்த லோங்கோவால் பகுதி யில் தாக்கியது. தானொத் சக்திமாதா ஆலயம் அருகே தானே லோங்கோவால். அங்கும் பாகிஸ்தானால் வெல்ல முடியவில்லை. அந்த கோவிலில் பூஜை செய்பவர்கள் எல்லை ராணுவ வீரர்கள் மட்டுமே. உலகில் எங்காவது இந்த அற்புதம் நிகழ்ந்ததுண்டா?.
எதோ தெய்வ சக்தி பாரதத்தை காக்கிறது. பாக் ராணுவ தளபதி ஷாநவாஸ் கான் இந்திய பகுதி அனுமதியுடன் தானொத் அம்மனை தரிசிக்க வந்து இந்த அதிசயத்தை கண்டு அந்த அம்மன் ஆலயத்துக்கு வெள்ளி கூரை வழங்கினார் என்று செய்தி. ஏராளமானவர்கள் 2500 ரூபாய் கொடுத்து டாக்ஸி பிடித்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள் என்று ஒரு சிறிய வீடியோ கிளிப்பிங்கில் படித்தேன். அதை இணைத்திருக் கிறேன் . https://youtu.be/oqM8y1Lrlkk

பாரதத்தை தர்மம் நியாயம், நீதி நேர்மை காக்கிறது. எண்ணற்ற சித்தர்கள் ஞானிகள் மஹான்கள் வாழ்ந்த பூமி. ஒரு சில புல்லுருவிகளால் இதை அழிக்க முடியாது.
No comments:
Post a Comment