Tuesday, July 21, 2020

GNANAPANA

கிருஷ்ணன்  அழைக்கிறான் வாருங்கள்
J K SIVAN
எனக்கு  மற்ற மதத்தினரை பற்றி தெரியாது.  ஆனால்  எண்ணற்ற  ஹி
ந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு  க்ஷேத்திரங்கள்  பெயரை வைப்பது வழக்காக பல நூற்றாண்டுகளாக  தொடர்கிறது.   சுவாமி பெயர் வைப்பதும்  தாத்தா  பாட்டி பெயர்  வைப்பதும்  ஒன்று தான்.  ஏனென்றால்  அந்த தாத்தாக்கள், பாட்டிகள்  எல்லோருமே  சுவாமிபெயர், ஊர் பெயர்  கொண்டவர்களாக  இருந்தார்கள். 

 இப்போதெல்லாம்  அந்த பழக்கம் தேய்ந்து விட்டது.   புதுசு புதுசாக  என்னென்னவோ  வாயில் நுழையாத  பெயர்களை  ஸ்டைலாக  இருக்கட்டும் என்று வைக்கிறார்கள்.

இன்னும் நம்மிடையே  எத்தனையோ  பேர்  இப்படி   சிதம்பரம்,   பழனி,  மதுரை, ராமேஸ்வரன், காசி,  திருப்பதி, காளஹஸ்தி,  கைலாசம்,  உடுப்பா,   சுசீந்திரன்,  என்று  இருக்கிறார்கள்.  

மலையாள  தேசத்தில்   வீட்டு  பெயரை  சூட்டிக்கொள்வார்கள்.   மலப்புரம் அருகே  கீழாத்தூர்   என்கிற ஊரில் இப்படி  பூந்தானம்  என்ற வீட்டு பெயர் கொண்ட  ஒருவர்  இருந்தார்.  அவருக்கு  பெற்றோர்  வைத்த  பெயர்  காணாமல் போய் விட்டது.    பரம  கிருஷ்ண பக்தர்.  பக்கம் பக்கமாக  நிறைய  கிருஷ்ணன் மீது  இனிமையாக  மலை யாளத்தில்    ஸ்லோகங்கள் எழுதியவர். 
 பாவம் ஒரு  குறை  அவருக்கு  வெகுநாளாக.  மடியில்  வைத்து கொஞ்ச  ஒரு  பிள்ளை இல்லையே?கிருஷ்ணனிடம் முறையிட்டால்  வீண் போகுமா?  ஒரு பிள்ளை பிறந்தான்.   குழந்தைக்கு  ஒரு வயதில்  அவர் வீட்டில்
  அன்ன  பிராசனம்  ஏற்பாடு தடபுடலாக நடந்தது.   எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும்   கூடியிருக்க அன்ன பிராசனம்   முகூர்த்த    நேரத்துக்கு  ஒரு  மணி  முன்பாகவே   அந்தகுழந்தை  இறந்து விட்டது.  

எப்படி பட்ட  சோகம்?  குருவாயுரப்பன் என்ன   செய்தான்?  

“பூந்தானம் நீ  ஏனப்பா  கவலைப்   படுகிறாய் .நானே இனி  உங்கள்  பிள்ளை.   எங்கே காட்டு  உன்  மடியை, நான்  படுத்துக்க கொள்ள வேண்டும்  ”  என்று அவர் மடியில் வந்து அமர்ந்து கொண்டான்.  படுத்து கொள்ளட்டுமா”  என்றான்.   

பரம  கிருஷ்ண பக்தர்  பூந்தானத்துக்கு    ஆனந்த பரவசம்.  பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து  தெள்ளிய  எளிய  மலையாள  கவிதை  ''ஞானப்பானா ''   பிறந்தது.  அற்புதமான  ஒரு காவியம் அது.   ஒருநாள் முழுதும் அதை எழுதுகிறேன். 

 "நம்  உள்ளத்தில்  என்றும் வந்து  நடமாட  கிருஷ்ணன்  இருக்கும் போது   தனியாக நமக்கு  என்று  ஒரு  பிள்ளை எதற்கு ?"  கடல் மடை   போல   கவிதை  தொடர்ந்து  பிறந்து  அனை வரும்  அந்த  பக்த ரசத்தில்  மூழ்க  இது  ஒருவருக்கு  பிடிக்க வில்லை.   அவர் யார் ?
நாராயணீயம்  இயற்றிய  பிரபல  மேல்பத்தூர்  நாராயண  பட்டத்ரி  தான் அவர்.   குருவாயுரப் பன் மீது  அவர் எழுதிய  நாராயணீயம்  ஒவ்வொரு  வீட்டிலும்  ஒலிக்கிறது அல்லவா?   அவருக்கு   பூந்தானம்  மீது அசாத்திய கோபம்.    
''சே, இவனெல்லாம்  ஒரு கவிஞனா ? சம்ஸ்க்ரிதம் தெரியாதவன்,  இலக்கணம்  புரி யாதவன்''  என்று   இகழ்ந்தார்.   எல்லோர் காதிலும்  இப்படி  அவர்  வசை பாடுவது  விழும்போது   குருவாயூரில்  கிருஷ்ணனுக்கும்  கேட்காதிருக்குமா?   அவனுக்கு பட்டத்ரி பேச்சு பிடிக்கவில்லை.

 ஒருநாள்  பட்டாத்ரி  வழக்கம்போல  குருவாயூர்  வந்து  குட்டி கிருஷ்ணன் சந்நிதியில் அவன் முன் நின்றபோது, 

"பட்டத்ரி நான் உனக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.   சொல்கிறேனே என்று  வருத்த படாதே   எனக்கென்னமோ உள்ளூற   உன்னுடைய  ஸமஸ்க்ரித  இலக்கணம்  தோய்ந்த  ஸ்லோகங்களை காட்டிலும்  பூந்தானத்தின்   பரிசுத்த மலையாளத்தில் இயற்றிய   பக்தி பூர்வ  ஸ்லோகங்கள்  ரொம்ப  பிடிக்கிறதே  என்ன  செய்ய? "  என்றான்

 கிருஷ்ணன்.    பட்டத்ரியும் ஒரு  மும்முரமான   கிருஷ்ணபக்தர் ஆச்சே. அதற்கப்பறம் என்ன? பட்டாத்ரி  ஓடி  சென்று பூந்தானத்தின்  காலில்   விழுந்து மன்னிக்க வேண்டினார்  என்பது   சாதாரண விஷயம்.

காலம் சென்றது.    பாகவதத்திலும்  கிருஷ்ண கானத்திலும் தனது  காலம்  ஓட  ஆனந்தமாக  எப்போதும் மனதில் கிருஷ்ணனோடு  இணைந்து  வாழ்ந்த  பூ ந்தானத்தின்  பூலோக  வாழ்க்கை முடியப்போகிறது என்று கிருஷ்ணனுக்கு தெரிந்தது.     பூந்தானத்தை   இனி தன்னுடன் வைத்துகொள்ள  ஆசை  அவனுக்கு. 

 "பூந்தானம் என்னிடம்  வா"  என்று  அழைத் தான் கிருஷ்ணன். பூந்தானம் தலை கால்  புரியாமல் ஆனந்தத்தில்  நர்த்தனமாடினார்.  தெருவெல்லாம்  ஓடினார்.   பார்ப்பவர்கள் பைத்தியம் என்று தான் சிரிப்பார்கள். ஆனால்  அவருடைய  பிரம்மானந்தம் அவருக்கு தானே தெரியும் . கிராமத்தில்  தெருவில்  யார் கண்ணில் பட்டாலும்   கேட்டார் 

" கிருஷ்ணன் என்னை  வரச்சொல்லி இருக்கி றான். நான்  வைகுண்டம் போகப்போகிறேன்.  உங்களில் யார் யாருக்கெல்லாம்  என்னோடு  கிருஷ்ணனிடம் போகவேண்டும் என்ற ஆசையோ  உடனே  என்னோடு வாருங்கள். போகலாம்''  

 கொஞ்சம்  யோசியுங்கள்,  அப்போதும் சரி, இப்போதும் சரி    யாராவது  பூலோக வாழ்க்கை யை விட்டு  மேல் மேல்  லோகமோ, கோ லோகமோ  வா  என்று அழைத்தால்  வருவார்களா?

ஊர்க்காரர்கள்  ஒரே ஓட்டமாக  பூந்தானத் திடமிருந்து  கொரோனாவை கண்டு  பயந்து ஓடுவது போல் தலை தெறிக்க ஓடினார்கள்.   அவர்   வீட்டில்  பணிபுரிந்த  ஒரு  வயதான   பெண்மணி 

 "ஐயா என்னையும் உங்களோடு   கிருஷ்ணனி டம்   அழைத்து செல்கிறீர்களா?"  என   வேண்டி னாள். 

ஒருநாள்  முன்கூட்டியே   குறித்த   நேரத்தில்  ஒரு விமானம் வந்து பூந்தானம் வீட்டு வாசலில்  இறங்கியது.  தனது பூத   உடலோடு  பூந்தான மும்  அந்த முதியவளும் அதில் புறப்பட்டு   வைகுண்டம் சென்று  கிருஷ்ணனோடு கலந்தார்கள்.     

இந்த செய்தி  காட்டுத்தீ  போல் எங்கும்  பரவியது.  நாராயண பட்டத்ரி காதிலும் விழுந்தது.    

பக்தியை வெளிப்படுத்த  மொழியோ இலக்க ணமோ  தேவையில்லை. உள்ளத்தில்  பக்தி பூர்வ  எண்ணம்  ஒன்றே  போதுமே  என்று  உணர்ந்து தலை ஆட்டினார். கண்களில் நீர். 
   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...