Monday, July 20, 2020

MEANING OF MAHABARATHAM




குருக்ஷேத்திர  தத்வம் . J K SIVAN

எதிரே   கண்ணுக்கெட்டியவரை  பரந்த  அளவற்ற  யுத்த பூமி.  அதன் பெயர் தான் குருக்ஷேத்ரம்.  பதினெட்டு நாட்கள்  உலகம் இது வரை  காணாத யுத்தம் நடந்த இடமா  இது ?  பதினெட்டு அக்ஷரோணி  சைன்யங்கள் இருபக்கமும் சேர்த்து  துளி இடம் விடாமல் அடைத்து க்கொண்டு  மோதிய  பூமியா.இது?கணக்கிட்டு சொல்லமுடியாத   நிறைய   நிறைய சைபர்  போட்ட  இலக்கங்கள்  கோடிக்கு அப்புறம் என்னென்னவோ  பேரில்  உள்ள அளவாக எண்ணப்பட்ட  யானைகள், குதிரைகள், காலாட்படைகள், தேர்கள், வீராதி வீரர்கள், சூரர்கள் .....எங்கே எல்லாம்?

''ஓ..   இது தான்  மயான அமைதியோ?  ஒரே நிசப்தமான  அசையாத  பிணக்குவியல்கள். அத்தனை பிணங்களும்  என்ன வெல்லாம்   பேசியவை?   எவ்வளவு வீரமான சொற்கள்? கோப, ஆவேச அதிகார, மனதை  வதைக்கும்   வசைச் சொற்கள், பச்சை பொய்கள்,,,,,,,  பாரத  தேசத்தின் பல பகுதி, பாகங்களில் இருந்து வந்த  வீரர்கள், சேனைகள்,  படைகள், பலசாலிகள்.    இதோ காக்கை,  நாய் ,  கழுகு ஓநாய் தான்  அவற்றைச்  சுற்றி. 

 வீராதி வீரர்கள்,  பணியாட்கள், நாடு நகரம், யானை குதிரை  எங்கே அவை எல்லாம்?

சஞ்சயன் சுற்றிலும் பார்த்தான்.  18 நாள் யுத்தம்முழுதும் ஒரு சம்பவம் விடாமல்  பார்த்து திருதராஷ்டிரனுக்கு சொன்னவன்.

எல்லாம்  முடிந்த இடம்.  குருக்ஷேத்திர பூமி   எல்லா உயிர்களையும் குடித்து விட்டு மிஞ்சிய ரத்தத்தை வெளியே ஆறாக ஓட விட்டிருந்தது.
இங்கே தான் கிருஷ்ணன்  உதவ அர்ஜுனனும்  பீமனும்  தோட்டத்தில் மாங்காய்  பறிப்பது போல்  எல்லா உயிர்களையும்  சூறையாடினார் களோ. எறும்பு கூட்டத்தின் மேல்  நடந்து காலால்  நசுக்கிய  யானையாக பீமன் கௌரவ சேனையை அழித்தானோ.

''உனக்கு அதெல்லாம் புரியாதடா'' -      யார்  பேசுவது ?.
 திரும்பிப்பார்தான் சஞ்சயன். எதிரே  ஒரு காவி உடுத்த  கிழவன்
''என்ன சொல்கிறீர்கள்?''
'உண்மையிலேயே யுத்தம் என்றால் எது  தெரியுமா?  அது  புரிந்தால் தான் குருக்ஷேத்திர யுத்தம் அர்த்தம் விளங்கும்''
'' சுவாமி நீங்கள்   நீங்கள்  யாரோ  ஒரு மஹான் என்று புரிகிறது.  நீங்கள்  என்ன சொல்கிறீர் கள்? -- சஞ்சயன்.
'' மஹா பாரதம்  ஒரு கதையல்ல,  ஒரு தத்துவம்.  சொல்கிறேன் கேள்''  

 எல்லாம் உனக்குள்ளே நடப்பது தான் பெரிதாக இங்கே குருக்ஷேத்திர  வெள்ளித்திரையில் படமாக ஓடியது....  
பாண்டவர் யார்?  உன்னுள்ளே  இருக்கும் ஐந்து புலன்கள் . 
கௌரவர்கள் யார்? “உள்ளே இருந்து ஆட்டுவிக் கும் நூறு   தவறுகள்.   நாள் தோறும் உன்  ஐந்து புலன்கள் அவற்றோடுபோராட கிறது.  அது தான் யுத்தம்.  

உன் மனோ ரதத்தில் கிருஷ்ணன் குதிரைகளை ஓட்டுகிறான்.  அவன் தான் உன் அந்தர்யாமி  ஆத்மன். உள்ளிருந்து குரல் கொடுப்பவன்.  வழி காட்டி.  அவன் உன்னை செலுத்தும்போது உன் வாழ்க்கை குதிரை ஜோராக ஓடும்.  துளி கூட கவலையே வேண்டாம்.''

''சுவாமி  சற்று  எனக்கு விளக்குங்கள்:   கெட்ட
வர்கள் என்று தெரிந்தும் ஏன்  பீஷ்மாச்சார்யார், த்ரோணர்  போன்றவர்கள் கௌரவர்களுக்கு உதவி யுத்தம் செய்தார்கள்?''

'வயது, படிப்பு, அந்தஸ்து,  மட்டும் ஒருவனை பெரியவனாக்காது.  தவறு செய்வது எல்லோர்க் கும் சகஜம்.  தெரிந்து செய்வது குற்றம்.  யாரா யிருந்தாலும்  அதற்கு தண்டனை உண்டு.  ஆகவே அதைப் பெற்றார்கள்.  பாண்டவர்கள் அவர்களையும் போரிட்டு அழிக்கத்தான் வேண்டி யிருந்தது.  அதை  புரிந்து கொள்ளத் தான்  கிருஷ்ணன் கீதை உபதேசித்தான்.”

''சுவாமி  பாண்டவர்கள்  கௌரவர்கள் பற்றி சொன்னீர்கள். அப்படியானால் ...  கர்ணன் யார்?

'ஆஹா.  கர்ணன் என்பது உனது புலன்களோடு ஒட்டிய உறவு. சகோதரன் மாதிரி. அதன் பெயர்  ''ஆசை'' . அதனால் தான் சகல துன்பங்களும் விளையும். 

திருமூலர் சொல்வாரே ....'' ஆசை படப்பட  ஆகி வரும் துன்பங்கள். ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்'' என.கௌரவர்கள் செய்த  தவருக்கெல்லாம் பக்க பலம் கர்ணன்.    தவறுக்கு   ஆசை போல..''

 சஞ்சயன்  நீண்ட நேரம் தனியே  நின்று கொண்டு யோசித்தான்.  நிறைய எண்ணங் கள் மனதில் ஓடின. குருக்ஷேத்திர பூமியை மீண்டும்  முழுதாக   கண்ணால் பார்த்தான்.   
ஓ.. ஆசையினால், பேராசையால் விளைந்த  பெரு நஷ்டமா  நிகழ்ந்தது இங்கு?  முகம் வியர்த்தது. மனம் பட பட வென்று அடித்துக்   கொண்டது. உண்மை புலப்பட்டது.  அந்த  துறவியிடம்  ஏதோ கேட்க  திரும்பியபோது  அவரில்லை. 

தூரத்தில்  கிருஷ்ணன் போவது போல்  தோன்றியது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...