ஒரு துயர சம்பவம் j k sivan
ஒரிஸ்ஸாவில் காலஹண்டி எனும் ஊரில், தானா மாஜி என்ற ஐம்பது வயது ஏழையின் மனைவியை காச நோய் கொண்டுபோனது பெரிய விஷயமல்ல. அதற்குப்பிறகு நடந்தது தான். ஆம் அவன் நடந்தது தான்.
கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் 42 வயதில் அவள் காலமானாள் . தானாமாஜியும் அவன் பெண்ணும் அழுதார்கள். ஆஸ்பத்திரி ''உன் மனைவி உடலை தூக்கிக்கொண்டு போ'' என்றது.
தூக்கிக்கொண்டு போவது என்றால் வண்டியில் எடுத்து போவது தான் நமக்கு தெரியும். 10 கிமீ. தூரம் உள்ள அவன் வீட்டுக்கு எடுத்துப்போக ஆஸ்பத்திரியிடம் வண்டி உதவி கேட்டான். சாரி வண்டி எல்லாம் கொடுக்க முடியாது. வண்டி இல்லை போ. ''
அவனாலும் வண்டி வாடகைக்கு பிடிக்க முடியாது. காசு இல்லை. வெயில் சுள்ளென்று ஏறிக்கொண்டேயிருந்தது.
'' நேற்று ராத்திரி 1230 மணிக்கு என் மனைவி இறந்தாள் . ஆஸ்பத்திரியில் வண்டி உதவி கேட்டேன். இல்லை என்கிறார்கள். என்னிடம் காசு இல்லை. ஆகவே என் இறந்த மனைவியை தோளில் தூக்கிக்கொண்டு நடந்தே ன்'' என்ற தானாமாஜி ஒரு கூலி வேலையாள்..
தானா மாஜி பார்த்தான். இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று முடிவு தான். பெட்ஷீட்டை எடுத்து மனைவியின் உடலை சுற்றினான். விறைத்து போயிருந்தாள் அவள். தோளில் தூக்கிக்கொண்டு நடக்கமுடியாமல் நடந்து போனான் ஆறுமணி நேரம் பயணம். ஒரு ஈ காக்காய் உதவ வில்லை. அவனுடைய 12 வயது பெண் வழியெல்லாம் அழுதுகொண்டே கூட நடந்தாள் .
ஏதோ பத்திரிகை நிறுவனம், ஊடகம், அவனைப் பார்த்துவிட்டு ஒரு அம்புலன்ஸ் ஏற்பாடு பண்ணி சொச்ச தூரத்தை வண்டியில் கடந்தான். அவனை, அவன் மனைவியை தூக்கி நடப்பதை படமெடுத்தார்கள். அரசாங்கத்துக்கு தெரிவித்தார்களோ என்னவோ, எது நடந்து என்ன பயன்?
நாம் உதவுவோம். ஏழைகளுக்கு கணக்கு பார்க்காமல் முடிந்தவரை உதவுவோம். கொரோனாவுக்கு ஆஸ்பத்திரி நிறைய செலவாகிறது என்கிறார்களே, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்க கிருஷ்ணன் மனத்தை இளக்கட்டும் , தாராளமாக அது உதவட்டும். நான் பார்த்த யூட்யூப் https://www.youtube.com/watch?v=5XIElkScEZ0&feature=youtu.be
No comments:
Post a Comment