Sunday, July 26, 2020

KING KONG THE WRESTLER



பாரம்பரியம் J K SIVAN

நான்  சின்ன வயதில்  பத்திரிகைகளில் மற்றும்,    கலர் கலர்  துண்டு  பிரச்சார  நோட்டிஸ்கள், விநியோக   காகிதங் களில் சில பெயர்களை பார்த்தது நினைவுக்கு வருகிறது.   சென்னை கோட்டை  ரயில் நிலையம் அருகே     MUC  மைதானத்தில் கூடாரம் போட்டு  அங்கே  மல்யுத்தம் நடைபெறும்.  வருஷா வருஷம்  ''ரோஷமான'' குத்துச்சண்டை என்று சில வீரர்களின்  படம் போட்டு  துண்டு காகிதம்  நிறைய சேர்த்து வைப்பேன்.  

அப்போது துண்டு பிரச்சார காகிதங் களை நோட்டீஸ்களை   சேகரிக்க  என்னைப்போல  பல  சிறுவர்கள் ஆவலாக அலைவார்கள்.  ஒரு  நிகழ்ச்சிக்கும்  போகமாட்டோம்.   காகிதம் சேர்ப்பதோடு சரி. 

அதில் மேற்கண்ட  குத்துச்சண்டை வீரர்கள் படம் பெயர்கள் எல்லாம் வரும். நினைவிலிருப்பதை மட்டும் சொல்கிறேன்.

''சர்தார்  இடியப்ப நாயக்கர்  பரம்பரை,  சார்பட்டா பரம்பரை.. எல்லப்ப  செட்டியார் பரம்பரை, .  மாமிசமலை கிங் காங்,  தாரா சிங், செந்தேள்.. கருந்தேள்..  ஸ்பைடர்  சிலந்தி வீரன் ......''. .

வட சென்னை தான்  வீரம் விளைந்த மண். இந்தப் பகுதியில்தான் இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்ற பெயர்களில் அமைந்த இரண்டு குழுக்களிலிருந்து புறப்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மோதியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி என தமிழர்கள் கொண்டாடிய மாபெரும் மனிதர்களே ரசிகர்கள் போல உட்கார்ந்து இந்தக் குத்துச்சண்டையை ரசித்திருக் கிறார்கள். எவ்வளவு பெரிய விஷயம்!

மைதானத்தின் நாற்புறமும் தட்டிகள் கட்டி, நடுவில் வீரர்கள் மோதுவதற்கான மேடை அமைத்து, மேடையின் நாலு பக்கமும் கயிறுகள் கட்டப்பட்டு, பரபரப்பான கலவர சூழ் நிலையில் நடந்த போட்டி ஒவ்வொன் றும் திருவிழா.   
குத்துச்சண்டை, மல்யுத்த  நாயகன்  கிங்  காங். அவன் யாரென்றால்  Emile Czaja (July 15, 1909 – 16 May 1970),   ஆஸ்திரேலிய -இந்திய  மல்யுத்த வீரன். பிறந்தது  ஹங்கேரியில்.   ஜப்பான், சிங்கப்பூர், ஐரோப்பா, நியூசீலாந்து, ஆஸ்தி ரேலியா   இந்தியாவில் எல்லாம் சென்று வென்றவன்.   6 அடி  உயரம். 208 கிலோ  எடை.  அவன் எவ்வளவு முட்டை சாப்பிடு கிறான், எத்தனை பால் குடிக்கிறான் என்றெல் லாம்  ஆச்சர்யமான விஷயங் கள் எழுதுவார்கள்.  உண்மையிலேயே  அவன்  ஒரு மாமிச மலை....

 ஒரு போட்டியில் கிங் காங்  ஜெயித்தால், அடுத்த போட்டியில் தாராசிங்  ஜெயிப்பார்.  அதற்கு மேல் என்னை கேட்கவேண்டாம்.   
 நான் இப்போதெல்லாம் கிங்காங், மல்யுத்த ரசிகன் அல்ல. சிறுவயசு கோளாறு. பத்து-பதினைந்து வயதுக்குள்  என்னைப்போல் பலர் இப்படி தான்  எல்லாவற்றையும் நம்பும் சிறுவர்கள்.  தினத்தந்தியில் முதல் நாள் நடந்த போட்டி  விவரங்கள், படங்கள் எல்லாம் வரும்.   கேசவ நாயர்   டீ  கடையில்  கூட்டமாக  படிப்பார்கள். 
அதென்ன  பரம்பரை??
  ''அவர்கள் பரம்பரை. இவர்கள் பரம்பரை, எங்கள் பரம்பரை''  .....என்கிறோமே  அதற்கு வழி வழியாக,  அதாவது  தலைமுறை தலைமுறையாக  என்று அர்த்தம்.   பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்   பிரித்து படித்தால்  பரன் + பரை = பரம்பரை
 நமக்கு அடுத்த தலைமுறைகள்  வரிசையாக பாரத்தால்,   
நாம்,  நமது மகன், மகள்,  அவர்கள் புத்ர, புத்திரிகள் நமக்கு பெயரன் பெயர்த்திகள்,  அதற்கடுத்தது கொள்ளுப்பேரன் கொள்ளுப்பெயர்த்தி, இவர்கள் யார் என்றால் பேரனின் புதல்வன் புதல்விகள் அதற்கும் அடுத்தது   எள்ளுப்பேரன், பேத்தி,  அதாவது கொள்ளுப்பேரனின்  குழந்தைகள். 
இங்கிலீஷில்  தலைமுறையை ஜெனரேஷன்  என்போம்.  சராசரியாக  50-60 வருஷங்கள்.  
ஒரு தலைமுறை - சராசரியாக 60  பிறந்த வருஷங்கள் என்று கொண்டாடினாலும்  அநேகர்  22- 35 வருஷங்கள் தான் ஒரு தலைமுறை என்று கணக்கிடுகிறார்கள். அதற்குள் போகவேண்டாம். ,
நமது   உத்தேசப்படி  ஏழெட்டு  தலைமுறை  என்றால்  480 -500 வருஷங்கள்
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்.. அடேயப்பா  கிட்டத்தட்ட  ஆயிரம் வருஷங்களா?
ஹிந்துக்களை தவிர வேறெவரும் இப்படி தலைமுறை கணக்கு பார்ப்பதில்லை என்று தோன்றுகிறது.

பரம்பரையிலிருந்து வருவது  பாரம்பரியம்  என்ற சொல்.  முன்னோர்களிடமிருந்து  நமக்கு கிடைத்த சொத்து  பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கப்படுகிறது.   அதை நாமும் அடுத்த  சந்ததியினருக்குக் கொடுக்க வேண்டும்...  இதை மரபு எனும் பழக்க வழக்கமாக, பண்பாடாக, நம்பிக்கையாக,  ஏற்றுக் கொள்வோம். நல்ல விஷயங்கள், பழக்கங்கள் இப்படி தான் கை  மாறவேண்டும்.
காலத்திற்கேற்ப  நிறைய  மாறுதல்கள் வழக்கத்தில், பழக்கத்தில்  வந்து விடுவதால் பாரம்பரியம் கெடுகிறது.  உரு மாறுகிறது.  பழமை புதுமையோடு கலந்து வேறாக மாறுகிறது. அது  பழமையை அழிக்காமல் நல்லதாகவே இருக்கட்டும் என்று கிருஷ்ணனை வேண்டுகிறேன்.வெளி கலாச்சாரம், விஞ்ஞானம் இவற்றின் உந்துதலால்  பாரம்பரியம் சிதையாமல் பாதுகாப்போம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...