Thursday, July 23, 2020

A GREAT PHYSICIAN



டாக்டர்  ரங்காச்சாரி     J K   SIVAN                                                                                                                                       வைத்யநாத சுவாமி...

பலரால் தெய்வமாக கொண்டாடப்படும்  டாக்டர்கள் அபூர்வமானவர்கள்.

சமீபத்தில்   மறைந்த   ஆரம்பத்தில் ரெண்டு ரூபா , பின்னர் பல வருஷங் களுக்கு பின்   விலைவாசி உயர்வினால் , இருபது ரூபா மட்டுமே   வாங்கிக் கொண்டு உதவிய   கோயம் பத்தூர் டாக்டர் பால சுப்ரமணியத்தை நாடே புகழ்ந்தது. தன்னலம் கருதாது மக்கள் சேவை யை யே கடமையாகக் கருதி பணிபுரிந்த பல மகத்தான மருத்து வர்கள் சென்னையில் வாழ்ந்தி ருக்கிறா ர்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கி றார்கள்.
மறக்கமுடியாத பொன்னேட்டில்  பொறித்த சில  அமர டாக்டர்கள் பெயர் மட்டும் சொல்கிறேன். எழுத  அவகாச மில்லை.  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, , டாக்டர்  சருக்கை  ரங்காச்சாரி, டாக்டர் குருசாமி முதலியார், ,  டாக்டர் லட்சுமண ஸ்வாமி முதலியார், டாக்டர் கே.எஸ். சஞ்சீவி,  டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், டாக்டர் என். ரங்க பாஷ்யம், டாக்டர் ஏ.எஸ்.தம்பையா,   சென்னையில் சேவையாற்றிய  இந்த  மருத்துவர்களின் பட்டியல் நீள்கிறது.  நீண்டுகொண்டே போக வேண்டும்..  இவர்களில் சிலர்  சிலையாக,  தெருக்கள் பெயராக  இன்றும்  நமது மனதில் இடம்பெற காரணம்,  தன்னலமற்ற சேவை,  விலை பேசாத சேவை.

நான்  மேலே குறிப்பிட்ட  டாக்டர்கள்   தொழில் நுட்பங்கள்  விஞ்ஞான, கணினி சேவை வளராத காலம்.  மெடிகல் இன்சூரன்ஸ்  இல்லாத காலம். அநேகர்  அடித்தட்டு, நடுத்தர மக்களே. ஆகவே  இது போன்ற   ஏழை, எளிய மக்களுக்கு  இந்த டாக்டர்கள் செய்த  சேவை  அவர்களை நினைவில் பீடமிட்டு அமர்த்தி யிருக்கிறது . தியாகிகள் என்று சொன்னால் தப்பே இல்லை .
சென்னையில் மருத்துவ வளர்ச்சியை தொடங்கி  வைத்தவர் டாக்டர் முத்து லட்சுமி  ரெட்டி. நாட்டின் முதல் பெண்  டாக்டர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர். ஆதரவற்ற பெண்களுக்கான அவ்வை இல்லத்தை நிறுவியவர். சமூக சேவகி.   பெண்கள்  கல்வி பெறாத காலத்தில்  கற்று வளர்ந்தவர்.

அடுத்து எனது  இந்த கட்டுரை கதாநாயகன் கும்பகோணத்தில்  பாபநாசம் அருகே சருக்கை  கிராமத்தில்  1882-ம் ஆண்டு பிறந்த    வைணவர் டாக்டர் சருக்கை ரங்காச்சாரி.
அப்பா  கிருஷ்ணமாச்சாரி நேப்பியர் பாலம்,  சென்ட்ரல்  எதிரே உள்ள  அரசு பொது மருத்துவ  மனை கட்டியவர். அப்பா  கட்டிய  மருத்துவ மனை வாசலில் கையை பின்னால்  கட்டிய  டாக்டர் ரங்காச்சாரி சிலையாக நிற்கிறார்.  அந்த சிலையில் காக்கை எச்சத்தை கழுவ கூட  யாருக்கும் நேரமோ, அக்கறையோ இல்லை.
டாக்டர் ரங்காச்சாரி 1917ல் எழும்பூர்  மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனையின் டெபுடி சுப்பரின் டென்டென்ட் .  வெள்ளையன்  நிர்வாக செயல்பாடுகள் பிடிக்காததால் 1922ல்  அரசசுப் பணியி லிருந்து விலகி பூந்தமல்லி நெடுஞ் சாலையில்   கென்சிங்டன்  நர்ஸிங் ஹோம்  எனும்  மருத்துவமனையை   ஆரம்பித்தார்.  மருத்துவ சிகிச்சை வாய்க்காத எளிய மக்களைத் தேடிச் சென்று சிகிச்சை யளித்தார்.  1939-ம் ஆண்டு  அவர் மறைவுக்கு பிறகு   சென்னை அரசு பொதுமருத்துவமனை வாசலில் இவருக்கு சிலை அமைத் தார்கள் இவரது சேவைக்கு அளிக்கப் பட்ட கௌரவம் அது.
டாக்டர் சருக்கை ரங்காச்சாரி  சிறந்த அறுவை மருத்துவர், சர்ஜன்,  பிரபல  மகப்பேறு மருத்து வர். என் அம்மா  இவர் சாகசங்களை கதை கதையாக சொல்வாள்.  ஒருமுறை ஒரு பெண்ணுக்கு  பிரசவ வலி எடுத்து விட்டது. அவளால் சிசுவை வெளியே தள்ள  சக்தி இல்லை. குழந்தை அவசரம் வெளியே  வந்தாக வேண்டும்.  அறுவைக்கு  அவள்  தகுதி பெறவில்லை.  டாக்டர் ரங்காச்சாரி என்ன செய்தார் தெரியுமா?,  ஒரு  பூதம் மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு திடீர் என்று அவள் முன் வந்து குதித்தார். பயத்தில் கத்திய அந்த பெண் முக்கி குழந்தையை வெளியே தள்ளினாள், அடுத்து ஆக வேண்டிய  காரியங்களை டாக்டர் வேஷம்  கலைத்து  விட்டு  கவனித்தார். இரு உயிர்களும் க்ஷேமமாக வாழ்ந்தன.
டாக்டர் ரங்காச்சாரிக்கு  பறக்கும் டாக்டர் என்று பெயர்.அந்தக் காலத்தில் ரோல்ஸ்ராய்ஸ் ROLLSROYCE PHANTOM   கார்  வைத்திருந்தவர்.   சொந்தமாக ஒரு பிளேன்  PUSS MOTH  AIRPLANE வைத்திருந்து பறந்து பல ஊர்களுக்கு சென்று சேவை புரிந்தவர்.  அவசரத்துக்கு  மருந்து பெட்டியை பின்னால்  வைத்து கட்டிக்கொண்டு சைக்கிள்   மிதித்து  சென்றும்  கூட  நோயாளிகளை கவனித்திருக்கிறார்.

எத்தனையோ  ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை செய்தவர்.

ஒரு  மீன் விற்கும்  பெண்ணுக்கு  பிள்ளைப்பேறு இலவசமாக பார்த்து  குழந்தையின் பராமரிப் புக்கு  நூறு ரூபாய்  தனது சொந்தப் பணம் (இப்போது லக்ஷத்துக்கு சமம்) கொடுத்த டாக்டர். போதுமா?  சில  நோயாளி களுக்கு தினமும்  சிகிச்சைக்கு வர  தினமும் வந்தால் ஒரு வெள்ளி  ரூபாய் கொடுப்பர். அதற்காகவே தவறாமல் வந்து மருந்து இலவசமாக பெற்று செல்வார்கள், நோயும் குணமாகும்.
விடிகாலை  4 மணி முதல்  11மணி வரை   நோயாளிகளை  கவனிப்பார்.  பிறகு  நோயாளி கள் வீடுகளுக்கு செல்வார்.   பசித்தால் காரிலே யே உண்பார். சேவை தொடரும்.
ஒரு நாள்  நள்ளிரவு  காரில் எங்கோ  போய் கொண்டிருக்கிறார் டாக்டர்.  ஒரு குடிசையின் வாசலில் கூட்டம். அங்குமிங் கும்  அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்ன என்று ட்ரைவரை விசாரிக்க சொல்கிறார்.  ட்ரைவர் மூலம் காரில் இருப்பது பிரசவ டாக்டர்  ரங்காச்சாரி என்று தெரிந்து அந்த தெலுங்கு காரர்கள் ஓடிவருகிறார்கள். அந்த வீட்டில் ஒரு பெண் நிராதரவாக  பிரசவ வேதனை யில் ரத்தப்போக்கோடு தவிக்கிறாள்.  உள்ளே நுழைந்த டாக்டர் அந்த பெண் ஒருத்தியின்  உதவியோடு  வெந்நீர் கொதிக்க வைக்க சொல்லி தன்னுடைய கருவிகளை காரிலிருந்து கொண்டுவந்து அவற்றையும்  அந்த அறையை யும் முதலில் சுத்தப்படுத்த சொல்கிறார். அது தான் ஆபரேஷன் தியேட்டர். 
நிபுணனான  டாக்டர்  சிறிய  சில அறுவை மூலம் அந்த பெண் ஒரு நல்ல  ஆண்குழந்தையை பெற உதவுகி றார்.  அந்த வீட்டிற்கு தேவையான சாமான் களுக்கு தன்னிடமிருந்து கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு இலவச பிரசவம் பார்த்து விட்டு செல்கிறார்.   சில நாள் கழித்து  அந்த பெண், அவள் கணவன் தந்தையுடன்  ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழங்களுடன்  நாலு  ஒரு அணா  நாணயத்தோடு  அவரை  பூந்த மல்லி ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கிறாள்.   அவளையும்  குழந்தையும் பார்த்து மேற்கொண்டு அவர்களுக்கு மருந்து அளித்து  விட்டு அவள் நீட்டிய  தட்டை பார்க்கிறார்.  நாலு அணா  காசு, பழங்கள் எல்லாம் சரி, அவள் கழுத்தில்  பிரசவத்தின்  போது  பார்த்த  சிறிய தங்க சங்கிலி எங்கே??  எங்கே அது என்று கேட்கிறார்.  டாக்டருக்கு   சீர் கொண்டு வருவதற்காக அதை அடமானம் வைத்திருக் கிறான் கணவன்.   உண்மை தெரிந்ததும்  அந்த காசோடு  மேலும்  ஒரு  ரூபாயை வைத்து  முதலில் அந்த நகையை மீது அவளுக்கு கொடு என்று அறிவுரை கொடுக்கிறார் டாக்டர் ரங்காச்சாரி. அவருக்கு   சிலை வைப்பதில் என தவறு?
பெர்ஹாம்பூரில்,  ஒரு பெண் பூரண கர்ப்பிணி,  அடிவயிற்றில் ஏதோ புண். அதன் வழியாக வெளியே  ஒரு சிறுவிரல் சிசுவுடையது சற்று நீட்டிக் கொண்டிருக் கிறது. டாக்டர் உதவியா ளரை அழைத்து என்னவென்று கவனி என்கிறார். 
 சிசுவின் விரலை உள்ளே தள்ளி  தையல் போடவேண்டும்.  ஆபரேஷன் பண்ணி சிசுவை வெளியே எடுக்க  இன்னும்  நேரம் கூடவில்லை. சில நாட்களாகும் .  டாக்டருக்கு  வாசலில் சுருட்டு புகைத்துக் கொண்டிருந்த கணவன் மேல்  பார்வை  விழுகிறது.  சட்டென்று  வெளியே போய் அவன் சுருட்டை வாங்கி உள்ளே சென்று  ஒரு கணம்  அந்த சிறிய விரலை சட்டென்று தொட  அது விரலை உள்ளே இழுத்துக் கொண்டது.  வயிற்று  புண் ஆறுவதற்கு மருத்துவம் செயது,  வயிறு கிழிந்த இடத்தை மூடி தையல் போட்டுவிட்டு,  சில நாட்களில்  சுகப்பிரசவமாக அந்த குழந்தையை வெளியே எடுத்து தருகிறார். அவருக்கு மக்கள் பணத்தில் சிலை வைத்ததில் என்ன தவறு?   டாக்டர்   பட்டம் கேட்டோ வாங்கியோ  போட்டுக்கொண்டு சிலை யாக  தெருவுக்கு  தெரு  நிற்பவரா  அவர்.    இப்படி ஒரு டாக்டர் சிலை இருப்பது  நமக்கு  பெருமையும்  கௌரவமும்  தருகிறது. வெள்ளைக்கார அரசாங்கம் திவான் பகதூர் பட்டம் கொடுத்து கௌரவித்தது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...