ஒரு முக்கிய வேண்டுகோள். J K SIVAN
இந்த வருஷம், ஆகஸ்ட் 22, 2020 அன்று சனிக்கிழமை விநாயக சதுர்த்தி வருகிறது. கோலாகலமாக மன திருப்தியோடு கஜமுகன் பிறந்தநாளை கொண்டாடப்போகிறோம்.
ஒரே ஒரு விண்ணப்பம். எல்லோரிடமும் நீங்களும் சொல்லுங்கள், அதாவது நான் சொல்வது சரியாக இருந்தால் .
எல்லா தெருக்களிலும் பெரிய பொம்மையாக POP PLASTER OF PARIS அல்ல காகித பொம்மை
வண்ணத்தோடு காட்சியளிப்பார். பிறகு ஒருநாள் அவரை லாரிகளில் ட்ராக்டர்களில் எடுத்து கடலில் அல்லது எங்கோ நீர்நிலையில் தூக்கி எறிகிறார்கள். இதுவா பக்தி, இதுவா நமது பண்பாடு? பிள்ளையாரை வேண்டுமென்றே உடைப்பவர்களுக்கும் நமக்கும் வழிபடும் நமக்கும் என்ன வித்யாசம்,? இது தான் பிள்ளையாரை வழிபடும் லக்ஷணமா? சில காட்சிகளை இணைத்துள்ளேன். விநாயக பக்தர்களில் கண்ணீர் வழியாவிட்டால் நல்ல கண்டாக்டரை உடனே பார்ப்பது அவசியம்.
வேண்டாம். இப்படி ஒரு வழிபாடு நமக்கு வேண்டாம். களிமண்ணில் பிள்ளையார் பொம்மை வாங்கி பூஜையில் வைத்து அதை கிணற்றில், ஆறுகளில் போடுவது வழக்கம். இப்போது கிணறோ, ஆறோ கிடையாது, அசுத்தமான நீர்நிலைகளில் போடக்கூடாது. ஆகவே ஒரு பக்கெட்டில் நீரில் கரைத்தது தென்னை மரம், ஏதாவது மரத்துக்கு வேரில் அந்த கரைந்த நீரை கால் படாமல் ஊற்றுங்கள். அது போதும். சிலர் கோவில்களில் கொண்டுபோய் வைக்கிறார்கள், கோவில்காரர்கள் எங்கே போவார்கள் அத்தனை பொம்மையும் கரைக்க. அவர்களுக்கும் கிணறு, ஆறு பிரச்னை சென்னை போன்ற பெரிய பட்டணங்களில் பொது தானே.
கோவிலில் இருக்கும் பிள்ளையாரை சென்று வணங்கினால் போதும். தெருக்களில் POP தரிசனம் வேண்டாம். பின்னர் சின்னாபின்னமாக்க வேண்டாமே. வீட்டில் கும்பிடுவோம் கோயிலில் சென்று பிள்ளையாரை வணங்குவோம் அது போதுமே சமீப காலமாகத்தான் இப்படியெல்லாம் புது பழக்கங்கள் வந்தது பழைய காலங்களில் இது இல்லையே. எதற்கு இந்த விபரீதம்? மனம் புண்படுகிறது. இப்படி பொம்மை செய்பவர்கள் தயவு செய்து இதெல்லாம் தயாராக்கி வியாபாரம் வேண்டாம். வரும்படியும் ஒட்டாது.
No comments:
Post a Comment