அறுபத்து மூவர் J K SIVAN
பெருமிழலை குறும்ப நாயனார்
கைலாயம் ஏகியவர்
எங்கும் தோப்பு, துரவாக, பச்சை வண்ணம் போர்த்திய செழிப்பான வயல்களைக் கொண்டது பெரு மிழலை கிராமம். . வாழையும் கமுகும் எங்கு நோக்கினும் கண்ணில் பட்ட வளமான பூமி. கிராமத்தில் எல்லோருமே வசதி படைத்தவர்கள். வறுமை தெரியாதவர்கள். சிவனடியார்கள் விரும்பி வந்த பிரதேசம். ஏனென்றால் அந்த ஊரில் குறும்பர் எனும் விவசாய வகுப்பை சேர்ந்த ஒரு நல்லிதயம் கொண்ட சிவனடியார் இருந்தார். சிவனடியார்கள் யாராக இருந்தாலும் அவர்களை தேடிச்சென்று அவர்களுக்கு உணவு, உடை தங்குவதற்கு இடம், போன்ற வசதிகளை செய்து தருபவர். அவர்களை தெய்வத்தை விட மேலாக வணங்கித் தொழு பவர். விபூதி அணிந்து கண்ணில் பட்டவர் எவருக்கும் இவ்வளவு ராஜ மரியாதை . அந்த ஊர் தலைவர்.
சதா சர்வ காலமும் சிவனைப்பாடி ஐந்தெ ழுத்து உச்சரித்தவர். அவனை ஆலயத்தில் வணங்கி மகிழ்பவர். பெருமிழலை கிராமம் இப்போது புதுக்கோட்டை ஜில்லாவில் பெருமாநல்லூர், தேவர்மலை என்று அறியப் படும் ஊர். தேவாரப்பாடல்களில் ஒரு வைப்பு ஸ்தலம்.
இவர் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவர். சுந்தரர் மீது சிவனைப்பார்த்த சந்தோஷம். மதிப்பும் மரியாதையும் கொண்டவர். சுந்தரர் அருளால் இந்த பெருமிழலைக் குரும்பருக்கு அஷ்ட மா சித்திகளும் கிடைத்தது. அவரையே ப்ரத்யக்ஷ தெய்வமாக பின்பற்றினார்.
சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாரோடு நட்பு கொண்டு அவன் ஆண்ட ஊருக்கு சென்று திருவஞ்சைக்களம் எனும் க்ஷேத்ரத் தில் இருக்கிறார் என்று அறிந்த பெருமிழலைக் கிழார் அங்கே தானும் செல்ல இயலாமைக்கு வருந்தினார். அங்கு நடக்கும் சம்பவங்களை ஞானத்தால் உணர்ந்தார்.
சுந்தரரின் பூமி யாத்திரை முடியும் காலம் வந்துவிட்டது. ஒரு வெள்ளை யானை மேல் கைலாய யாத்திரை செல்லப்போகிறதை அறிகிறார்.
சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் அவரைப் பிரிந்து இனிமேல் இங்கே வாழ மாட்டேன்" என்று மனதில் எண்ணம் தோன்றியது. சுந்தரர்
கைலாயம் புறப்பட்ட தினத்தன்றே தானும்
"இன்றைக்கு சுந்தரர் கொடுத்த தவ யோகத் தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்" என்று துணிந்து விட்டார். விடாது தனது யோகமுயற்சியினாலே பிரமரந்திரம் உச்சி மண்டையில் திறக்கச் செய்கிறார். இதைத்தான் கபால மோக்ஷம் என்கிறோம். அந்த பிளவின் வழியாக ஜீவன் தேஹத்தி லிருந்து பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானு டைய திரு வடியை அடைந்தார் இந்த பெருமிழலைக் குறும்பர்.
"சிவனே சிவஞானி யாதலாற் சுத்த -
சிவனே யெனவடி சேரவல் லார்க்கு -
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் -
பவமான தின்றிப் பரலோக மாமே;
தெளிவு குருவின் திரு மேனி காண்ட ல் -தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல் தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
தெளிவு குரு ரூபம் சிந்தித்தல் தானே
பெருமிழலைக் குறும்பர் திருமூலரின் மேலே சொன்ன பாடல் காட்டும் வழியில் வாழ்ந்தவர் அல்லவா ? இப்படி தவ வலிமையால், மகிமையால் சுந்தரர் கைலாயம் சென்ற டையும் முன்னர் தானும் கைலாயம் செல் கிறார். சிவனடி நிழலில் தூத்து மகிழ்ந்து வாழ்கிறார் என்று பெரியபுராணம் சொல் கிறது.அறுபத்து மூன்று சிவனடியார்கள் நாயன்மார்கள் எனப்படுவர் அவர்களில் இந்த மிழலைக் குறும்பரும் ஒருவர் என்பதால் கோவில்களில் விளக்கேற்றி மற்ற 62பேருடன் வரிசையுமாக நிற்கும் இவரையும் சிவாலய பிராஹாரத்தில் வணங்குகிறோம்.
No comments:
Post a Comment