விட்டலா பாண்டுரங்க விட்டலா J K SIVAN
ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை. ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவம் வாய்ந்தது. சாதுர் மாஸ்ய காலத்தில் வருகின்ற ஏகாதசி சயனி ஏகாதசி எனப்படும். இந்த ஏகாதசி நாளில் தீப தானம் செய்வது சிறப்பாகும். ஆஷாட மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர். சயனம் என்றால் உறங்குதல் திருமால் ஆடி பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரை உறங்குகிறார். அதனால் இக்காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயனி ஏகாதசி என்கின்றனர்.
இந்த நாள்களில் சன்னியாசிகள் ஒரே இடத்தில் தங்குகிறார்கள். இந்த நாளைப் பற்றி கார்த்திகை மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. பித்தளை, வெங்கலம், வெள்ளி ஆகிய தனிமங்களில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட விளக்கினை எடுத்து தட்டின் நடுவே வைக்க வேண்டும். அந்த விளக்கினை நெய்யால் நிரப்பி திரியிட்டு ஏற்ற வேண்டும். வேதம் கற்றவர்களுக்கு அதனை தானமாக தந்தால் ஞானமும், செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் யோக நித்திரையில் ஆளும் மகாவிஷ்ணு பின்பு கார்த்திகை மாதத்தில்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பதாக ஐதிகம். இதைத் தொடர்ந்துவரும் பௌர்ணமியிலிருந்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. தேவசயனி ஏகாதசிக்குப் பின்வரும் பௌர்ணமியிலிருந்து நான்கு மாத காலம் மேற்கொள்ளப்படும். இந்தக் காலம் மிகவும் புனிதமான காலமாகப் போற்றப்படுகிறது.
பண்டரிபுரத்திலும் மற்ற பாண்டுரங்கன் ஆலயங்களிலும் இந்த ஆஷாட ஏகாதசி ரொம்ப விசேஷம் பாண்டுரங்க பக்தர்கள் அநேகர் அற்புதமான அவர்கள் வாழ்க்கையில் பாண்டுரங்கன், விட்டலனும் ஒரு குடும்ப அங்கத்தினர் போல் பழகி இருக்கிறான். அவனைப்பற்றிய மஹாத்ம்யயத்தை ''தெவிட்டாத விட்டலா என்ற புத்தகத்தில் தமிழிலும் ''விடோபா தி நெக்டார்'' VITOBA THE NECTAR என்று ஆங்கிலத்திலும் 100 கதைகள் எழுதி புத்தகமாக வெளிவந்தது.
ஒரு சிறந்த பாண்டுரங்க பக்தர் கோரா கும்பர் அவரது சரித்ரம் தமிழிலும் பிற மொழிகளும் படமாக வந்தாலும் ''பக்த கும்பரா'' என்கிற கன்னட படம் கண்களில் நீர் வரவழைத்தது. கோரா கும்பர். மண்பாண்டம் செய்யும் குயவர். கையும் காலும் தான் மண்ணில் இருந்ததே தவிர மனமெல் லாம் கண்ணனாகிய பாண்டுரங்க விட்டலினிடம்.
ஒரு நாள் மண் பிசைந்து குழியில் மிதித்து குழைவாக்குகிறார். மனம் விட்டலின் மேல். ஒன்று- ஒன்றரை வயது குழந்தை தூளியில் தூங்குகிறது. ''குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் இதோ வந்து விடுகிறேன்'' என்று அவள் எங்கோ அவசரமாக போகிறாள். ''விட்டலா விட்டலா'' என்று பாடிக் கொண்டே குழியில் மண்ணை மிதித்துக் கொண்டு கண் மூடி விட்டலனை நினைத்து ஆடுகிறார். குழந்தை தோழியை விட்டு இறங்கி தவழ்ந்து தாயைத் தேடி, காணாமல், தந்தை வாசலில் குழியில் ஆடுவதை பார்த்து நெருங்கி குழியில் இறங்குகிறது. களிமண்ணோடு சேர்த்து அதையும் மிதித்து குழந்தை மறைகிறது. கதை நீள்கிறது. சொல்ல இங்கே நேரமோ இடமோ இல்லை.
இந்த கன்னட படம் பக்த கும்பரா என்று சக்கை போடு போட்டது கன்னடத்தில். சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கோரா கும்பர். PB ஸ்ரீனிவாஸ் பாடல்கள் சூப்பர் ஹீட் . அதில் ஒரு பாடலை அற்புதமாக பாண்டுரங்கன் மேல் பாடி இருக்கிறார். அந்த பாடலை நானும் பாடிப்பார்த்தேன் . அதை நினைவு கூர்கிறேன் யு ட்யூப் லிங்க் https://youtu.be/ShlnGEB1t1M
No comments:
Post a Comment