சூர் சாகரம் J K SIVAN
ஸூர்தாஸ்
நாம் இருவரல்ல ஒருவர்
'' என்ன ஒரே கூட்டம் அந்த வீட்டின் முன்?''.
''பின்னே இருக்காதா. ஒரு அழகிய பிள்ளை பிறந்திருக்கிறானே . அவன் கொள்ளை அழகை பார்க்க கூட்டம் கூடாதா?''
கூட்டத்தின் இடையே யார் இவர்? ஒரே தாடி மீசை , உடலெல்லாம் விபூதி, உடலெங்கும் தலையில் ருத்திராக்ஷம். ஜடாமுடி ரிஷிக்கு இங்கே என்ன வேலை? எல்லாம் துறந்தவருக்கு இங்கே என்ன உறவு?
என்ன இப்படி ஒரு கேள்வி? எல்லாம் துறந்தபின் எது எஞ்சி இருக்கிறதோ அதல்லவோ இங்கே இருக்கிறது.
கோகுலத்தில் நந்தகோபனின் அரண்மனையிலிருந்து வெளியே வந்த யசோதை எல்லோரையும் முகமலர்ச்சியோடு உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறாள். அவள் கண்கள் ஜடாமுடியை பார்த்ததும் வணங்குகிறாள்.
ஏற இறங்க அவளை பார்க்கிறார் ஜடாமுடி.
''நமஸ்காரம் ப்ரபோ.''
'' நீதான் அவன் தாயா? யசோதை என்பது நீ தானா?
''ஆமாம் சுவாமி. உள்ளே வாருங்கள் குழந்தையை ஆசீர்வதியுங்கள்''
குழந்தையை வாரி அணைத்தபோது அவர் ஜடாமுடியை தனது குஞ்சுக்கரங்களால் பிடித்து இழுத்தான். பின்னால் கொஞ்சம் வளர்ந்ததும் கோபியரின் ''பின்னலை பின்னின்று இழுத்தவன்'' அல்லவா?
''என்னை தெரிகிறதா?''
ஜடாமுடி கண்ணாலே கேட்டது.
''ஆஹா உம்மைத் தெரியாத ஒரு கணம் உண்டா? தெரியாதவர் மூவுலகிலும் உண்டா?'' --- பொக்கைவாய் சிரிப்பு பதில் சொல்லியது.
''ஆம். நாம் இருவரல்ல ஒருவரென்று அறிவோமே ''
குழந்தையை யசோதையின் கையில் அளித்து ஜடாமுடி பேசினார்
''அம்மா, யசோதா உன் குழந்தை இருக்கிறானே இந்த கிருஷ்ணன், இவன் நித்யன். என்றும் வாழ்பவன்.வாழவைப்பவன், வளமும் வரமும் அளிப்பவன். நீலன். சுருண்ட அழகிய முடியுடையவன். என்ன அழகாக அடர்ந்த கருத்த கூந்தலை கிரீடம் போல் வளைத்து சுருட்டி வைத்திருக்கிறாய். சிகரத்தின் சிகரமாக ஒரு மயில் பீலி வேறு செருகி அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறாய்.
சிவந்த இதழ் அந்த நீல முகத்தில். ஓ நீல ஆழ்கடலில் செம்பவளம் பூத்திருக்கிறதோ! .
கோகுலத்தில் மொத்த உயிரும் இவனது தானா? கோகுலத்தில் மட்டுமா?
எங்கும் நிறைந்திருக்கும் அக்ரமக்கார அரக்கர்களின் நெஞ்சில் வலி இவன் தருவது தானா?''
சூர்தாஸ் பரந்தாமனை பார்த்ததில் ஏற்பட்ட பரமசிவனின் பரம சந்தோஷத்தைபற்றி அசாத்தியமாக எழுதுகிறார்.
பிருந்தாவனத்தில் எப்போதும் கண்ணன் ஒரு பெரிய வயதான கருப்பு நிற கப்பும் கிளையான மரத்தடியில் தான் விளையாடுவான். (தமலா என்று ஜெயதேவர் அதை சொல்வார்) அதுபோலவே அவனும் கருப்பன் என்று சொல்லமுடியாது. ஆகாசத்தை போல் அடிக்கடி நிறம் மாறுபவன். நீலமாக, கருப்பாக, சிவந்து, கருநீலமாக எப்படி மனம் வேண்டுகிறதோ அப்படி காட்சியளிப்பவன். மாயா ஜாலன்.
கண்ணன் விளையாடும்போது காலடி மண் தூசி காற்றில் பறந்து என் கண்ணில் பட்டு என் குறை, பாபங்களை நீக்கிவிடுகிறதே என்கிறார் சூரதாஸ். இதோ அந்த பாடல்:
Rani tero chir jiyo gopal
Begi badhyo badi hoya viradh lat, mahari manohar baal
Upaji paryo yah koonkhi bhagya bal,samudra seep jaise laal
Sab gokul ke pran jeevan dhan , bairin ke ursal
Sur kito jiya sukh paavat hai, nirkhat shyam tamal
No comments:
Post a Comment